உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தரிசன "புக்கிங் பாதிப்பு

திருப்பதி தரிசன "புக்கிங் பாதிப்பு

திருப்பூர் : தொழில்நுட்ப கோளாறால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசிக்க, டிக்கெட் பெற முடியாமல், திருப்பூரில் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருமலை திருப்பதியில் எளிதாக தரிசனம் செய்ய வசதியாக, நாடு முழுவதும் ஸ்ரீவாரி டிரஸ்ட் மையங்களை, தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இம்மையங்களில், டிக்கெட் "புக்கிங் செய்வோர், 60 நாட்களுக்குபின், மூன்று மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.திருப்பூர், தாராபுரம் ரோட்டில் செயல்படும் அம்மையத்தில், நாளொன்றுக்கு 400 முதல் 500 பேருக்கு டிக்கெட் தரப்படுகிறது. விடுமுறை நாளான நேற்று, திருப்பூர் மையத்தில் காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது; 250 பேருக்கு புகைப்படத்துடன் டிக்கெட் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணியளவில், டிக்கெட் வழங்குவது, திடீரென நிறுத்தப்பட்டது. ஏற்கனவே காத்திருந்தவர்களுடன், புதிதாக வந்தவர்களும் சேர்ந்ததால், நீண்ட வரிசை காணப்பட்டது. ஸ்ரீவாரி அதிகாரிகளிடம் கேட்டபோது, "நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களில், சர்வர் கோளாறு ஏற்பட்டது. திருமலை திருப்பதிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, "சாப்ட்வேர் மாற்றும் பணி நடப்பதாக தெரிவித்தனர். திருப்பூரை போல் ஈரோடு, கோவை, கள்ளக்குறிச்சி உட்பட மாநிலம் முழுவதும் ஒன்பது மையங்களில் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. சரிசெய்ததும், டிக்கெட் வழங்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !