முதல்வர் ஜெ., நலம்: குத்துவிளக்கு பூஜை
ADDED :3297 days ago
குளித்தலை: மேலவெளியூர் மாரியம்மன் கோவிலில், முதல்வர் நலம் பெற வேண்டி, குத்துவிளக்கு பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த கல்லடை பஞ்சாயத்து, மேலவெளியூர் மாரியம்மன் கோவிலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, 108 குத்துவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில், தோகைமலை யூனியன் முன்னாள் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார், ஜெ., பேரவை பொறுப்பாளர்கள் லதா ரெங்கசாமி, பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.