ஊட்டி குருசடி ஆலய திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஊட்டி: ஊட்டி காந்தளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடந்தது.
ஊட்டி, காந்தளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை பங்கு குரு அடைக்கலம் அமிர்தராஜ் ஏற்றி வைத்தார். நாள் தோறும் சிறப்பு கூட்டு திருப்பலி, மறை யுரை நடந்தது.
நேற்று (மே 3)ல் காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை, திருப்பலிகள் நடந்தது. அதன், பின்னர் நீலகிரி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டுபாடற் திருப்பலி நடந்தது.
இதில், மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர், லாரன்ஸ், வட்டார குரு பெனடிக், ஆலய பங்கு குரு பீட்டர், பங்கு குருக்கள் ஜெயக்குமார், வின்சென்ட், பிரபாகரன், சகாயதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடந்த தேர் பவனியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏசுகிறிஸ்து பவனி வந்தார். இதில், திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.