கொரோனா காரணமாக, நாட்டு மக்களுக்கு நான்கு விஷயங்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறேன்.*தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்.* கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுங்கள்,*முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.* தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றுங்கள்
விவசாயிகளின் எதிர்காலத்தில் வெந்நீர் ஊற்றும் விதமாக உரவிலை அதிகரிப்பு.தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உட்பட 7 தீர்ப்பாயங்கள் கலைப்பு.பாஜக அரசின் இத்தகைய செயல்பாடுகளை விவசாயிகளும், தமிழக மக்களும் மன்னிக்கமாட்டார்கள்!
கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கப்பட வேண்டும் என நான் மனு தாக்கல் செய்து வாதிட்டேன் . தற்போது 51 கோயில்கள் உத்ரகண்ட் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசாங்கம் .
கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். மாற்று தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி வழங்க ஆவன செய்ய வேண்டும்.
மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.
தமிழகத்தின் மீதான பார்வை குறித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை பிரதமர் திரு.மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நிறைவேற்றமுடியும்.ஊழல், வாரிசு அரசியல் செய்யும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்குமாறு நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
திரைத்துறையின் உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி ஜிக்கு எனது நன்றிகள் ! இது எனக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. இது போல் எனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
விவசாய கடன் தள்ளுபடிக்காக திமுகவினர் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஏதாவது குரல் கொடுத்துள்ளனரா என்றால் இல்லை. ஆனால், தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள். வறட்சி,புயல், கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலால் தான் நாங்கள் கடனை ரத்து செய்தோம்.
ஊட்டி தொகுதியில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும்.தேயிலை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.வாக்களிப்பீர்... தாமரைக்கே!
தென் கொரிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஷூ வூக் டில்லியில் என்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்த பேச்சு பயனுள்ளதாக அமைந்தது.
நான் கொண்டுவந்த மார்த்தாண்டம் மேம்பாலம் ஆடுகிறது என்றார்கள். காங்கிரஸ், தி.மு.க-வினர் கண்ணுக்கு மட்டும் பாலம் ஆடுவது தெரிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பாலம் ஆடுவது நின்றுவிட்டது. இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருக்கிறது. மக்கள் விரும்பும் திட்டங்கள் வரும்.
தினமலர் முன்னாள் ஆசிரியர் திரு.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தினமலர் நாளிதழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று தேசிய சிந்தனையை வளர்த்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6&7 ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - கே.எஸ். அழகிரி, மாநில காங்., தலைவர்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.