@ நரேந்திர மோடி ட்வீட்ஸ்

நரேந்திர மோடி

இந்த மாத மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சி வரும் 24 ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான உங்களின் உணர்வுகளளையும், கேள்விகளையும் எனக்கு நமோ ஆப் மூலம் அனுப்பி வையுங்கள்.
பிப்ரவரி 17,2019

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும். பிப்ரவரி 14,2019

டில்லி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் கேள்விப்பட்டு மிக கவலையுற்றேன். பலியான குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பிப்ரவரி 12,2019

அட்சயபாத்திரம் சார்பில் இளம் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் இருந்த நேரம் மிக இனிமையானது. பிப்ரவரி 11,2019

மேற்குவங்க முதல்வர் மம்தா தர்ணாவில் சாரதா சிட்பண்ட் பணத்தை கொள்ளை அடித்தவர்களும் பங்கேற்றனர்.
பிப்ரவரி 08,2019

கேன்சர் ஒழிப்பு தினத்தில் நாம் முன்கூட்டியே கேன்சர் நோயை கண்டறிந்து குணம்பெற உதவியாக இருக்க வேண்டும். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கேன்சர் நோயாளிக்கு சிகிச்சை அளித்து கேன்சர் இல்லா உலகை உருவாக்குவோம்.
பிப்ரவரி 04,2019

இது வரை இல்லாத அளவிற்கு அரியானாவில் ஹிண்ட் தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பாஜ., வுக்கு அனைத்து தரப்பிலும் இருந்து வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. மாநில முதல்வர் மற்றும் பா.ஜ., தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள் !
ஜனவரி 31,2019

இந்தியாவில் சிறந்த அரசியல் தலைமையை வெளிப்படுத்தியவர் பெர்னாண்டஸ். இவரது மறைவு பேரிழப்பு.
ஜனவரி 29,2019

பாரதப் பிரதமர் வராத இடத்தில் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் வைகோ, மே17, திக, ஆகிய அமைப்பினர் அவர்களே அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிக்கொண்டனராம். இதற்குதான் நமக்கு நாமே என்பதோ. எயிம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிட வந்த மோடிஜி எதிப்பு என்பது தமிழக விரோத செயல். ஜனவரி 27,2019

அனைத்து இந்தியர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் ஜனவரி 26,2019

நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி, மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்டவர் பிரணாப். தேசத்திற்காக தன்னலமின்றி அயராது பாடுபட்டுள்ளார் ஜனவரி 25,2019

பி.எஸ்.எல்.வி., - சி44' ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற சாதனைகள் நமது இந்தியாவின் பெருமையை உயர்த்துகிறது.
ஜனவரி 25,2019

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X