@ அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்ஸ்

அரவிந்த் கெஜ்ரிவால்

தடுப்பூசி குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது- இரண்டு நிறுவனங்களுடன் மட்டுமே வைத்து முழு நாட்டிற்கும் தடுப்பூசி கொடுக்க முடியாது. இந்தியாவில் இன்னும் பல நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும். மே 11,2021

கொரோனா காரணமாக, ஸ்ரீ என்.டி குப்தாவின் மனைவி இறந்த சோகமான செய்தி கிடைத்தது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் ! மே 01,2021

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அனைவரும் கூட்டமாக வர வேண்டாம்.
ஏப்ரல் 30,2021

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க போதிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் . தாய்லாந்தில் இருந்து 18 கிரையோஜெனிக் டாங்கள் இறக்குமதி செய்யவுள்ளோம். விரைவில் வந்து சேரும்.
ஏப்ரல் 27,2021

டில்லியில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ராதா ஸ்வாமி கொரோனா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினேன். பாபாஜிக்கு நன்றி !டாக்டர் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமித்த மத்திய அரசுக்கும் நன்றி ! ஏப்ரல் 26,2021

டில்லி மக்களுக்கு இப்போது ஆக்ஸிஜன் தேவை மிக அவசரமாக உள்ளது. டில்லியில் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் ஏதும் இல்லை. மத்திய அரசு முழு உதவி செய்ய வேண்டும். ஏப்ரல் 23,2021

மக்களின் நலனை கருத்தில் கொண்டும், காப்பாற்றவும் தான் டில்லியில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20,2021

கொரோனா தடுப்பு பணி தொடர்பாக அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினேன். தேவையாவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகள் மேம்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
ஏப்ரல் 12,2021

1857 புரட்சியின் வீராங்கனையும், சிறந்த சுதந்திர போராட்ட வீரருமான அழியாத தியாகி மங்கல் பாண்டே ஜியின் தியாக நாளில் அவருக்கு வணக்கம். ஏப்ரல் 08,2021

துவாரகாவில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய ஏரி வெறும் 7 மாதங்களில் உருவாக்கப்பட்டது. தண்ணீரைச் சேமிப்பது, அறுவடை செய்வது மற்றும் சிறப்பாக நிர்வகிப்பது என்பது காலத்தின் தேவை. மார்ச் 22,2021

ஒரு அரசாங்கம் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுக்கான அரசாங்க வேலைகளைச் செய்கிறது என்று நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது முழு உலகில் டில்லியில் மட்டுமே நடக்கிறது.
மார்ச் 06,2021

தனியார் வாகனங்களுடன், பொது போக்குவரத்தையும் மின்சாரத்திற்கு மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியால் டில்லி மாசுபாட்டை தோற்கடிக்கும். எங்கள் கொள்கை உலகிற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும். மார்ச் 02,2021

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X