@ அருண் ஜெட்லி ட்வீட்ஸ்

அருண் ஜெட்லி

உலகில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. இன்னும் 7 முதல் 7.5 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சி என்பதில் திருப்தி அடையவில்லை. விரைவில் 8 சதவீத வளர்ச்சி என்பதை இந்தியா தாண்டும். எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டில், இந்தியா 142வது இடத்தில் இருந்து 77 வது இடத்திற்கு வந்துள்ளது. ஜனவரி 16,2019

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஏழை மக்களுக்கான அரசு. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு மசோதாவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே ஏழைகள் ஆதரவு அரசு என்பதற்கு சான்று.
ஜனவரி 11,2019

வெல்டன் ! நிர்மலா சீதாராமன் ஜி , ரபேல் தொடர்பாக உங்களின் லோக்சபா உரை மிக பாராட்டுதலுக்குரியது. போலியான தவறான பிரசாரத்தை நொறுக்கி வீழ்த்தி விட்டீர்கள். தங்களின் அபரித திறமையை கண்டு நாங்கள் பெருமை கொள்கிறோம். ஜனவரி 04,2019

உயர் மட்ட விசாரணையில் குற்றமற்றவர்கள் யாரும் காயப்படுத்தப்படக்கூடாது. அதேநேரத்தில் குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்ப விடக்கூடாது.விசாரணை அமைப்புகள் தொழில் தர்மத்தை கையாள வேண்டும். டிசம்பர் 04,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X