@ பா.ஜ.க., ட்வீட்ஸ்

பா.ஜ.க.,

5 லட்சம் அரசு வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படும். இது டெ்ரோல், டீசலுக்கு ஆகும் செலவின சுமையில் இருந்து குறைக்கும்.- பிரகாஷ் ஜவ்டேகர், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர். நவம்பர் 01,2019

ராகுல் கடந்த 5 ஆண்டுகளில் 16 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவரது சொந்த தொகுதியான வயனாட்டை விட அதிகம் சென்றது வெளிநாடுதான். இதில் இருந்து தெரிவது என்னவெனில் இதனால்தான் அமேதி தொகுதி மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். - ஜி.வி.எல்.நரசிம்மராவ், பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர். அக்டோபர் 31,2019

கடந்த 2016 நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பணபரிமாற்றம் 980 மில்லியனாக இருந்தது. இன்று 3. 32 பில்லியனாக உயர்ந்துள்ளது.

-ரவிசங்கர் பிரசாத், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர்.அக்டோபர் 14,2019

இன்ஸ்டாகிரமில் பின்பற்றும் நபர்கள் 3 கோடியை தாண்டி உள்ளது. உலக தலைவர்களில் அதிகம் பின்பற்றாளர்கள் கொண்டு இந்த அளவிற்கு உலக அளவில் புகழ் ஓங்கி நிற்கும் நமது பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ! - டில்லி பா.ஜ., அக்டோபர் 13,2019

திரைப்படங்கள் வெளியான ஒரே நாளில் ரூ.120 கோடி வருமானம் கிட்டியுள்ளது என்றால் இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளதாக நிரூபிக்கப்படுகிறது. - ரவிசங்கர் பிரசாத், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் . அக்டோபர் 12,2019

இந்த தீபாவளிக்கு மாசு குறைந்த கிரீன் பட்டாசுகள் விற்பனைக்கு வருகிறது. - ஹர்சவர்தன்- மத்திய சுகாதார அமைச்சர்.
அக்டோபர் 05,2019

மாற்றம் ஒன்றே மாறாதது. அத்தகைய மாற்றத்தை தம்மில் இருந்தே துவங்குவது மேலும் சிறப்பு . கடவுளையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் நிந்தித்த @arivalayam த்தின் முன் சந்ததியினர் தவறை அறிந்துணர்ந்து, பின்வரும் தலைமுறையினர் அதை நிவர்த்தி செய்வது பாராட்டுதலுக்கு உரியது .- தமிழக பா.ஜ., அக்டோபர் 03,2019

தேவையின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை திட்டமிட்டுள்ளோம். நீர்ஆதாரம் பெருக்கல், அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்துதல், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை அகற்ற உதவும். - நிதின்கட்காரி, மத்தி அமைச்சர். செப்டம்பர் 09,2019

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X