@ ஸ்டாலின் ட்வீட்ஸ்

ஸ்டாலின்

#CTS நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு & சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறது ஊழல் அதிமுக அரசு.
இந்திய ரூபாயில் கொள்ளையடித்த அரசு, அமெரிக்க டாலரில் கொள்ளையடிப்பது வெட்கக்கேடானது!
இதற்குக் காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! பிப்ரவரி 18,2019

#PulwamaTerroristAttack -ல் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்! நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது! நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது! பிப்ரவரி 16,2019

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்! பிப்ரவரி 09,2019

தமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு என மத்திய அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்குத் தானா இந்த ஊழல் அ.தி.மு.க அரசு, பல கோடி ரூபாய் வீண் செலவு செய்து இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது?
இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா? முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? பிப்ரவரி 06,2019

பத்மவிருது பெற்று தமிழகத்தின் பெருமையை இந்திய அரங்கில் மட்டுமின்றி - உலக அரங்கிலும் நிலை நிறுத்தியிருக்கும் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள்! தொடர்ந்து உங்கள் அனைவரின் பணிகளும் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்! ஜனவரி 26,2019

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி 'குற்றவாளி' என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையை அறிவித்தது சிறப்பு நீதிமன்றம். ஆனால், இன்னும் தமிழக அரசின் இணையதளத்தில் அவர் பெயரை நீக்காமல் அழகு பார்க்கிறது அரசு. உடனடியாக நீக்குவதோடு MLA காலியிடங்களின் எண்ணிக்கையை 21 -ஆக அறிவிக்க வேண்டும் ! ஜனவரி 24,2019

திமுகஊராட்சிசபை கூட்டங்களை கரூர் மாவட்டம், ஈசநத்தம் & சின்னதாராபுரம் ஊராட்சியில் தொடங்கி வைத்தபோது, மக்கள் தந்த பேராதரவு என்னை நெகிழச் செய்தது. ஜனவரி 22,2019

சமூக வலைதளத்தில் கழகத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர் @padalurvijay . மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தன்னால் இயன்றவரை கழகப் பணியாற்றிய விஜய்யின் மரணச் செய்தியறிந்து கண் கலங்கினேன் ! உண்மைத் தொண்டரை இழந்திருக்கிறோம்! கழகத் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்! ஜனவரி 20,2019

கழக தலைவர் @mkstalin அவர்களை, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரக அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் Mr. Richard Barlow, பிரிட்டிஷ் துணை தூதர் Mr. Jeremy Pilmore-Bedford, இலண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய தலைவர் Mr. Fergus Auld சந்தித்தனர். ஜனவரி 18,2019

சென்னையை சேர்ந்த குகேஷ் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள் ! நாட்டை பெருமைக்கு உயர்த்தியுள்ள அவர் எதிர்காலத்தில் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்.
ஜனவரி 17,2019

தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்! ஜனவரி 16,2019

ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு அவர் கொடநாடு எஸ்டேட்டில் வைத்திருந்த பணம், ஆவணங்களை கைப்பற்ற கொலைகளை செய்திருக்கிறதாம் எடப்பாடி அரசு!உடனடியாக முதல்வர் பதவி விலகிட வேண்டும். அவர்களைக் காப்பாற்றுகிற மத்திய அரசும் பதில் சொல்லியாக வேண்டும்! ஜனவரி 12,2019

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X