@ பொன்.ராதாகிருஷ்ணன் ட்வீட்ஸ்

பொன்.ராதாகிருஷ்ணன்

தினமும் 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி - நடிகர் அக்சய் குமார் வெளிக்கொண்டு வந்த இரகசியம்..! ஏப்ரல் 24,2019

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாக ஸ்டாலின் பயணித்த போது சற்று தூங்காமல் வந்திருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகளை கண்கூடாக கண்டிருக்க முடியும். ஏப்ரல் 10,2019

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட SMRV வழி காந்தி பார்க் சந்திப்பில் உற்சாகமான வரவேற்புடன் தேர்தல் பரப்புரை.. ஏப்ரல் 03,2019

சுசீந்திரம் ஸ்தாணுமாலயன் திருக்கோயிலில் எம்பெருமானை வணங்கி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினோம்.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டில்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார் மார்ச் 27,2019

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும் @BJP4India ன் தேசிய தலைவர் திரு @AmitShah அவர்களுக்கும் லட்சக்கணக்கான @BJP4TamilNadu தாமரை சொந்தங்களுக்கும் எனது நன்றி !
மார்ச் 21,2019

20 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் கோவா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் பிரமோத் சாவந்த்திற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது நிர்வாகத்தின் கீழ் கோவா புதிய உச்சத்தை எட்டும். மார்ச் 20,2019

கோவா முதல்வர் பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த நபர். தேசப்பற்று மிக்கவரை நாம் இழந்துவிட்டோம். அர்ஜென்டினாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் வழியில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பரீக்கரை சந்தித்ததை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன் மார்ச் 17,2019

பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெண்ணை தாயாக, சகோதரியாக பாவிக்கும் நம் தமிழ் சமூகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதோடு வெட்கித் தலைகுனிய செய்கிறது. குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய உட்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும். மார்ச் 12,2019

தாம்பரம் டூ நாகர்கோவில் செல்லும் ரயில்கள் இயக்க உடனடியாக அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி !
மார்ச் 07,2019

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X