மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? பிப்ரவரி 26,2021
மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? சமூக நீதி நாள் இன்று உலகத்துக்கு. அக்குணமே உயிர்மூச்சு மய்யத்துக்கு. அனைவரும் சமமென்னும் பொன்னுலகம் நாம் படைப்போம். பிப்ரவரி 23,2021
நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம். பிப்ரவரி 19,2021
பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும். பிப்ரவரி 18,2021
சினிமா எழுதுவதில் முன்னோடி, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கே நல்ல சினிமாக்காரர்களுக்கு கிரியாஊக்கியாக இருந்திருக்கிறார்! மேற்கின் ராட்சசக் கலையை நம் நாட்டுக்கேற்ப வடிவமைத்த அவரின் 57ஆம் நினைவு நாளில் அவரை வணங்கி கலைவழி நடக்கிறேன். பிப்ரவரி 16,2021
பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும். பிப்ரவரி 15,2021
காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே. பிப்ரவரி 14,2021
அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது. உடனடி நடவடிக்கைகள் தேவை. பிப்ரவரி 13,2021
எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள். பிப்ரவரி 04,2021
சாராயம் விற்பது அரசு வேலை அல்ல. மதுக்கடைகள் உள்ள இடங்களில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்.
பிப்ரவரி 02,2021
மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. பிப்ரவரி 02,2021
'என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை. ஜனவரி 30,2021