இராணுவ தினத்தன்று, இந்திய ராணுவத்தின் வீரம் மிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.தேசத்திற்கான சேவையில் மிக உயர்ந்த தியாகத்தை செய்த துணிச்சலான இதயங்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.தைரியமான மற்றும் உறுதியான வீரர்கள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். ஜனவரி 15,2021
மகர சங்கராந்தி, பொங்கல், போகி பிஹு, கொண்டாடும் குடிமக்களுக்கு வாழ்த்துக்கள் ! இந்த விழாக்கள் நம் சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி, நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும்: ஜனவரி 13,2021
இன்று காலை டியூவில் உள்ள அழகிய கோக்லா கடற்கரையில் ஜாகிங். சென்றேன். நாம் 2021 க்குள் நுழையும்போது, நம் அனைவரையும் சோதித்த ஒரு கடினமான வருடத்திற்குப் பிறகு, நாம் ஒன்றாக எழுந்து ஆரோக்கியமாகவும் இருக்க முயற்சிப்போம்.வரும் ஆண்டு நம் வாழ்வில் நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் தரட்டும்.
டிசம்பர் 28,2020
2001 ல் இதே நாளில் பாராளுமன்றத்தை பாதுகாத்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான தியாகிகளை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. நமது ஜனநாயக ஆலயத்தின் பாதுகாவலர்களின் பெரும் தியாகத்தை நினைவுகூரும் அதே வேளையில், பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான எங்கள் வழியை நாங்கள் பலப்படுத்துகிறோம். டிசம்பர் 13,2020
கடற்படை தினத்தன்று, எங்கள் கடற்படை வீரர்கள், மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது வாழ்த்துக்கள். எங்கள் கடல் எல்லைகளை பாதுகாப்பதில், எங்கள் வர்த்தக வழிகளைப் பாதுகாப்பதில், மற்றும் சிவில் அவசர காலங்களில் உதவிகளை வழங்குவதில் உங்கள் அர்ப்பணிப்பு குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது. டிசம்பர் 04,2020
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் ! அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி ஒளி ஒளிரட்டும், ஏழை, ஆதரவற்றோருக்கு நம்பிக்கை விளக்காக மாற உறுதியேற்போம். மாசு இல்லாத தூய்மையான தீபாவளியை கொண்டாடுவோம். நவம்பர் 14,2020