@ எச்.ராஜா ட்வீட்ஸ்

எச்.ராஜா

உலக வல்லரசு அமெரிக்காவின் WTC முஸ்லிம் பயங்கரவாதி ஒசாமா பின் லேடனால் தகர்க்கப்பட்டது. அமெரிக்கமக்கள் அரசுடன் உறுதியாக இருந்தனர்.அமெரிக்க அரசை யாரும் விமர்சிக்கவில்லை. இங்கு நெல்லை கண்ணன், அப்துல் ஹமீது @மனுஷ்யபுத்திரன், சீமான் போன்றவர்கள் பேச்சு இவர்களை தோலுரித்து காட்டியுள்ளது. பிப்ரவரி 17,2019

Hindu political action committee என்கின்ற உலகளாவிய இந்துக்கள் கூட்டமைப்பின் மூலம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராமலிங்கம் அவர்களின் குடும்பத்திற்கு 56 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த இந்து உணர்வாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பிப்ரவரி 16,2019

திருப்புவனம் இராமலிங்கம் அவர்களின் படுகொலையை கண்டித்து நாளை 12.2.19 தஞ்சை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மாவட்ட கடையடைப்பிற்கு அழைப்பு விட்டுள்ளது. அனைத்து வணிகப் பெருமக்களும் ஆதரவு தந்து ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். பிப்ரவரி 11,2019

மெய்ப்பொருள் காணவே INX மீடியா, Maxis-Aircel, சாரதா சிட்பண்ட் வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ரீகவுண்டிங் மானிட்டர் குடும்பத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிவருகிறது. ஆனால் ஜெயிலுக்கு போகாமல் பெயிலுக்கு family பேக்கேஜுக்கு மன்றாடுவது ஏன் ? பிப்ரவரி 11,2019

சைவம், வைணவம், திருக்குறள், சித்தர்கள் அவதாரம் அனைத்தும் கிறித்தவ மதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை. இந்துமதத்தை சிறுமைப் படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி திட்டமிட்ட பன்னாட்டு கருத்தரங்கத்தின் அடுத்த அவதாரம் இது. பிப்ரவரி 09,2019

அக்கலக்குக்கும், ஆஷிபாவிற்கும் அரை மணிக்கு ஒருமுறை அழுது தீர்த்தவர்கள் இராமலிங்கம் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? ஓ இராமலிங்கம் இந்துவாயிற்றே. சிலுவையில் ஊசலாடும் ஊடக தர்மம். பிப்ரவரி 08,2019

இப்போதெல்லாம் ஸ்டாலின் அவர்கள் அநாகரீகமாகவும் தீவிர இந்துமத விரோதியாகவும் பேசி வருகிறார். இவரது ஸனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்ற பேச்சும் தற்போதைய பேச்சும் இந்துக்கள் திமுகவை முழுமையாக புறக்கணிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது. பிப்ரவரி 03,2019

விவசாயிகள், ஏழைமக்கள், நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர மக்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் பட்ஜெட் ஆகும். மக்களுக்கு மகிழ்ச்சி. ராகுலுக்கும், ராபர்ட்டுக்கும் வருத்தம். பிப்ரவரி 02,2019

மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மேல்மருவத்தூர் அருள்மிகு பங்காரு அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன். பிப்ரவரி 01,2019

ஐ ஜி பொன்.மாணிக்கவேலு அவர்கள் நியமனத்துக்கு தடையில்லை என உச்சமன்றம் தீர்ப்பு. வரவேற்கத்தக்கது. ஜனவரி 28,2019

இன்று தேசிய வாக்காளர் தினம். 18 வயதடைந்தோர் அனைவரும் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிந்து ஜனநாயக திருவிழாவாம் பொதுத் தேர்தலில் பங்கு பெற வாழ்த்துகிறேன். ஜனவரி 25,2019

1998 ல் கோவையில் குண்டு வைத்து பலரைக்கொன்ற அல் உம்மா தடைசெய்யப் பட்டபின் பல குழுக்களாக பிரிந்து செயல்படும் கூட்டமும் இன்று திருச்சியில் கூடுகிறது. எச்சரிக்கை. ஜனவரி 24,2019

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X