@ ரஜினிகாந்த் ட்வீட்ஸ்

ரஜினிகாந்த்

ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்.
அக்டோபர் 15,2020

என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி . இன்று மிகுந்த வேதனையான நாள். அவர் அருமையான, அன்பான மனிதர். பல மொழிகளில் பாடியவர். இந்தியாவில் பலரும் இவரது குரலை ரசித்தனர்.மனித நேயமிக்கவர். இவர் குரல் ஒலித்து கொண்டேயிருக்கும். மகான் ஆத்மா சாந்தியடையட்டும். உண்மையில் உங்களை இழந்து தவிக்கிறேன்.


செப்டம்பர் 25,2020

மரியாதைக்கும், அன்புக்குமுரிய நநேரந்திரமோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இந்த கடினமான காலங்களில் உங்களுக்கு மேலும் வலிமையை இறைவன் தர வேண்டுகிறேன். செப்டம்பர் 17,2020

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். செப்டம்பர் 04,2020

அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆகஸ்ட் 29,2020

50 ஆண்டுகளுக்கு மேல் பல மொழிகளில் இனிமையான குரலில் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த கொண்டுள்ள மதிப்புக்குரிய எஸ்பிபி விரைந்து குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆகஸ்ட் 17,2020

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X