@ எடப்பாடி பழனிசாமி ட்வீட்ஸ்

எடப்பாடி பழனிசாமி

அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!! மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!! ஜனவரி 14,2019

தலைமைச் செயலகத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் என்னை சந்தித்து, குடிமராமத்து திட்டப்பணி பணி மற்றும் விவசாயிகள் இலவசமாக வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கியதற்காக நன்றி தெரிவித்து, திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டப திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். ஜனவரி 10,2019

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (26.12.2018) முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தார். டிசம்பர் 26,2018

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து 25.12.2018 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20,2018

இன்று, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையத்திற்கு முதன்மை வழித்தட முதல் சரக்கு பெட்டக கப்பலை மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. நிதின் ஜெய்ராம் கட்காரி அவர்களுடன், காணொளிக் காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தேன். டிசம்பர் 12,2018

மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன். டிசம்பர் 05,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X