இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா, ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. விவாதத்தின் போது எம்.பி.,க்கள் தங்கள் புத்திசாலித்தனமான கருத்துகளை வெளிப்படுத்தினர். மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி.
இது இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தவும், இந்தியாவின் மாற்றத்திற்கு பங்களிக்கவும் உத்வேகமாக அமையும். வலுவான இந்தியாவை உருவாக்க நினைத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி.