venkat Iyer : கருத்துக்கள் ( 441 )
venkat Iyer
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலின் மாறி வருகிறார்!
திரு.வாசன் ஐயாவிற்கு ராஜ்யசபா இடம் அதிமுக பொருத்தமாகத் தான் வழங்கி உள்ளது. தம்பிதுறைக்கு இடம் கொடுத்தது முதிர்ந்த அனுபவம் கொண்டவர் என்ற காரணம் மட்டுமே இருக்கும்.அம்மா இறந்த நேரத்தில் சசிகலா பக்கம் இருந்தவர் என்ற கருப்பு சாயம் என் போன்ற தொண்டர்கள் நிச்சயமாக துணிந்து காட்டுகிறோம். திரு.முனுசாமி துணிந்து எதிர்த்து பேட்டி கொடுத்து சசிகலாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் என்பது அவருடைய மிகப்பெரிய பலம். திரு.வாசன் அவர்கள் நீங்கள் கூறியது போல கறைபடியாத கை கொண்டவர். பெரிய மனிதர் என்று எல்லோராலும் மதிக்க கூடியவர்.   07:05:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
24
2020
சிறப்பு பகுதிகள் அனைவருக்கும், ராயல் சல்யூட்!
திரு.அருணாச்சலம் கூறியது போல,இந்த தருணத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவ கல்லூரிகள் நடத்த மத்திய அரசின் அனுமதி கிடைத்து உள்ள நிலையில்,இடத்தினை தேர்வு செய்துள்ள நிலையில் ,ஆரம்ப நிலையில் எல்லா இடத்திலும் தனிமைப்படுத்தும் வார்டாக கொராணா நிதியுடன் சேர்த்து கட்ட ஆரம்பிக்கலாம்.இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையிலும் மருத்துவ துறையிலும் நமது மாநிலம் முன்னிலையில் இருப்பதை மேலும் உறுதிப்படுத்த முடியும்.தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளும் ,மருத்துவமனைகளும் மிக அதிகமாக இருப்பதற்கு வெளி நாட்டினர் வருகை சென்னையை நோக்கி இருப்பது தனியார் மருத்துவமனை சேவையும் அதன் நியாயமான செலவுகளும் தான் காரணமாகும்.சென்னையில் மட்டும் மாதம் நான்காயிரம் நோயாளிகள் மருத்துவம் பார்த்துவிட்டு செல்வதாக ஒரு புள்ளிவிவரம் மூலம் அறிகின்றேன்.மத்திய அரசு கொடுத்துள்ள சட்ட திட்டங்களை மீறி வெளி நாட்டினருக்கு மருத்துவம் அதிகமாக செல்லும் நிலை இருக்கின்றது.அவை குறைய வேண்டும்.   06:39:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2020
சிறப்பு பகுதிகள் நல்லதொரு அரசியல் வரட்டும்!
திரு.உத்ரன் கூறியது ஒரு அதிசியம் தான். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் மடப்புரம் ஊராட்சியில் மண்மலை கிராமத்தில் எங்களால் கஷ்டப்பட்டு 28 ஆண்டுகள் தோட்டத்தில் வளர்த்த தேக்கு மரத்தை வீட்டு நிலைக்கு தயார் செய்ய மரவாடியில் அடி ரூ.87/- அறுக்க வேண்டியதை ரூ.118/- அதிகமாக போடப்பட்டதோடு வன அலுவலருக்கு என்று அதில் ரூ.1000/- பில்லில் எழுதியதுதான் அதிர்ச்சியாக இருந்தது. லஞ்சம் எப்படி வெளிப்படையாகவே எழுதி வாங்கப்படுகின்றனர் என்பதை ஆக்கூர் இரட்டைகுளம் பஸ் ஸ்டாப் அருகே இருக்கும் மரம் அறுவை மில் செயல்படுவது உண்மையில் அங்கு திருட்டு மரங்கள் அனுப்பலாம்,நேர்மையாக மரம் அறுக்க வருபவர்களிடமும் பணம் பெறுவதை முக்கியமான நோக்கமாக கருதுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் கவனிப்பார்களா?   08:57:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2020
சிறப்பு பகுதிகள் இஸ்லாமியரில் திறமை உள்ளோர் ஏராளம்!
திரு.பிரிட்டோ ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள்.பெண்இள் அன்றைய காலத்தில் வீட்டு வாசலில் கிருமி நாசினியாக கருதும் பாணியை கறைத்து தெளிப்பதும் மற்றும் குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து பூசி குளிப்பதும் வைரஸ் வராமல் தடுக்கும் முன்னைய முறைகளாகும்.   22:28:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2020
சிறப்பு பகுதிகள் கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!
திரு.வெங்கடேசன் அவர்களே,இக்கறைக்கு அக்கறை பச்சையாகத்தான் தெரியும். நீங்கள் அந்த/ அடுத்த மாநிலங்களில் இருக்கும் பச்சையை பார்த்தால் நமது மாநிலத்து பச்சையே நன்றாக இருக்கும் என்று தோன்றும்.ஒவ்வொரு மாநிலமும் ஏதாவது ஒன்றில்தான் அதாவது சில துறையில் தான் சிறப்பாக இருக்கும்.நமது மாநிலம் ஓரளவு சராசரியாக ஓரளவு அனைத்து துறையின் செயல்பாடுகள் பரவாயில்லை என்று தோற்றம் நீங்கள் அங்கு அதாவது மற்ற மாநிலங்களுக்கு சென்று போய் பார்த்தால்தான் உங்களுக்கு நமது மாநிலத்தின் பெருமை என்னவென்று புரியும்.மின்துறை கடன் பற்றி கூறி இருந்தீர்கள்.விவசாயத்திற்கு இலவச மின்சாரம் இருந்ததால்தான் நாம் மற்ற மாநிலங்களை விட கூடுதலாக நெல் உற்பத்தியை அடைந்தோம். சிறிய வீடுகளுக்கு குறைந்தபட்ச யூனிட்டிற்கு இலவசம் என்பதினால் இரண்டு ஆதாயம் உள்ளது.பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு உதவிகரமாக உள்ளது.பலரும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு பொதுவிநியோக திட்டத்தையும்,ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களை கணக்கிட்டால் நாம் அதில் முன்னோடியாக திகழ்கின்றோம். தொன்னுறு சதவீதம் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.ஐடி துறையில் வெளி நாடுகளில் ஆந்திராவை தாண்டி நாம் முன்னுக்கு வந்ததற்கு காரணம் நாம் நிறைய பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்ததுதான் அடிப்படை காரணமாகும்.தேசிய சாலைகள் எங்கு குண்டும் குழியுமாக இருக்கின்றது. ஊராட்சி திட்ட பணிகள் இனிமேல் நல்ல கண்காணிப்பு டன் செயல்படுத்தப்படும்.நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை.நமது ஊரில் டீ மற்றும் காபி குறைந்த விலையில் கிடைப்பது போல எந்த மாநில த்தில் கிடைக்கிறது?.பேருந்து கட்டணம் மற்ற மாநிலத்துடன் ஒப்பீட்டு பாருங்கள். நமது மாநிலத்தில் திட்ட பணிகளை ஐப்பசி மாதம் மட்டும் மழையினால் செய்ய முடியாது. மற்ற மாநிலங்களில் அதிக வெயில் மற்றும் அதிக குளிர் பணி போன்றவற்றினால் திட்ட பணிகள் செய்ய தாமதம் ஆகிறது.மேலும் தீவிரவாத த்தினை கட்டுப்படுத்தவே அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதற்கு நாம் தனி நிதியை ஒதுக்கவில்லை.ஒரு மாநிலத்தில் இதற்கு இரண்டாயிரத்து நானுறு கோடி மாநில நிதி ஒதுக்கி உள்ளார்கள்.நமது மாநிலம் கல்வி துறைக்கு முப்பத்து நாலாயிரம் ஒதுக்கியது போல் எந்த மாநிலமும் ஒதுக்கவில்லை.திட்ட செயல்பாடு தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட இங்கு ஓரளவு நடைபெற்று உள்ளது.பத்து செடியில் இரண்டு செடி காய்க்கவில்லை என்றால் அதற்கு இராமாயணம் பேசாதீர்கள் .பக்கத்து தோட்டத்தில் போடப்பட்ட விதையே முளைத்து எழவில்லை.நம்முடைய தோட்டத்தை(மாநிலத்தை) நன்கு உழுது பயிர் செழிப்பாக வளரும் வகையில் வைத்துள்ளோம். யானைகள் அழிக்க வந்தால் நாம் என்ன செய்யமுடியும்?நண்பரே டூர் சென்று வாருங்கள்.   08:52:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2020
சிறப்பு பகுதிகள் தண்டனை சட்டம் திருத்தப்பட வேண்டும்!
திரு.விஜய் அவர்கள் நீதிமன்ற செயல்பாடு தாமதம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். ஒரு பெண் கொடுமை வழக்கில் பூவிருந்தவல்லி குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் அந்த பெண்மணி பல வாய்தாக்கள் போடப்பட்டு அவர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டார். இதுதான் நீதிமன்ற செயல்பாடாக உள்ளது.   07:05:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
10
2020
சிறப்பு பகுதிகள் தண்டனை சட்டம் திருத்தப்பட வேண்டும்!
திரு.பட்டாபிராமன் அவர்களே, நான் தமிழ்நாட்டில் முற்றிலுமாக ஊழல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சுற்றி வாழ்ந்து வந்து இறுதியாக தமிழகத்தில் வசிக்கின்றேன்.இவற்றை ஒப்பிடும்போது ,தமிழகத்தில் திட்டங்களுக்கு ஒதுக்கீடும் நிதிகள் ஓரளவு செலவு செய்யப்பட்டு திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற படுகின்றனர்.பல்வேறு சமுக நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தமிழ் நாட்டில் நல்ல முறையில் செயல் படுகின்றனர். ரேஷனில் பல மாநிலங்களில் அனைவருக்கும் இதுவரை முழுவதுமாக உணவு பொருட்கள் கிடைப்பதில்லை.ஊழல்கள் நடக்கின்றனர். தமிழகத்தில் வாங்காதவர் ரேஷன் பொருட்கள் மட்டும் வெளிமார்க்கெட் டுக்கு போகின்றனர். அம்மா ஊழல் செய்த அமைச்சர்களை எல்லாம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே களை எடுத்துவிட்டார்.பல மாநிலங்களில் துறை செயலாளராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் துறை அமைச்சர்கள் செய்யும் ஊழலை பார்த்து பதவியை ராஜினாமா செய்கின்றனர்.அதில் எனது உறவினரும் அடக்கம். இவர்களை தட்டி கேட்க முடியாமல் கெளரவத்தை காக்க ராஜினாமா தான் செய்ய வேண்டியுள்ளதாக கூறுகிறார்.   06:59:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2020
சிறப்பு பகுதிகள் உச்ச நீதிமன்றம் கேட்காமல் யார் கேட்பது?
திரு.ஈஸ்வரன் தலைமை செயலக பணிகள் குறித்து கூறியிருந்தார்கள்.நானும் தலைமை செயலகத்தில் முன்பே இருக்கும் முதலமைச்சர் குறைதீர்ப்பு பிரிவில் நடக்கும் செயல்பாடு களை பார்த்தால் கண்ணீர்தான் வரும்.மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தினால் பிரச்சனை தீராத நிலையில்தான் தலைமை செயலகம் நோக்கி வருகின்றார்கள்.இங்கு உள்ளவர்கள் நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.மாவட்ட நிர்வாகத்தில் சம்மந்தப்பட்ட துறையை தந்தான் அணுக வேண்டும் என்று கூறுகின்றனர்.இதை சொல்லவா இவர்கள் இங்கு சம்பளம் வாங்குகிறார்கள்?.பட்டா வாங்க லஞ்சம் கேட்கிறார்கள் என்று சொன்னால் அதை ஏற்பது கிடையாது.தலைமை எச்சரிக்கை கடிதம் அனுப்பினால் மாவட்ட நிர்வாகத்தில் பயப்படுவார்கள்.இதை புரிந்து மனுவை ஏற்று அனுப்புவதில்லை.   20:33:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2020
சிறப்பு பகுதிகள் ஜெ.,யின் துணிவு இன்று ரஜினியிடம்..
திரு.குணசேகரன் அவர்களே, ரஜினி அரசியலுக்கு வருவது கண்டு பலரும் அவரை கேவலப்படுத்தி பேசி வருவது உண்மையில் அது அவரது சினிமா வியாபாரத்தினை கெடுத்து கொண்டு வருகிறது. பொன் முட்டை இடும் வாத்து என்று பலர் சினிமாத்துறையிலும், மேலும் பலர் அரசியலுக்கும் அவரை வருமாறு வலியுறுத்துகின்றனர்.உண்மையில் எழுபது வயதில் அவர் மன உளைச்சலில் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது.அவரை அரசியலுக்கு பலர் எங்கே வந்துவிடப் போகிறாரோ என்று நினைத்து நேற்று முளைத்த காளான்களும் பல அரசியல் விஷமிகள் பலரும் தூற்றுகின்றனர். மயிலாடுதுறையில் அண்மையில் வந்த அவரது படத்தின் கட்டவுட்டில் சாணி அடித்து உள்ளது இதுவரை என்றும் நிகழாத நிகழ்வுகளாக அரங்கேறியுள்ளனர். உண்மையில் சாமானியனான என்னாலே அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை போதும்டா சாமி என்றுதான் தோன்றுகிறது. எழுபது வயதுமிக்க கண்ணியமான மனிதரால் எப்படி இது போல் விஷயத்தினை தாங்கி கொள்ள முடியும். தினம்தோறும் மீடியாக்களில் அவரைப்பற்றி நக்கலும் நையாண்டியும் பல அரசியல் கட்சி பிரமுகர்களால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது.உண்மையில் நல்ல தலைவர்கள் அரசியலுக்கு வரமுடியாதது மிகவும் சாபக்கேடாக உள்ளது. பணம் செலவு செய்யாமல் அரசியலுக்கு வருவது மிகவும் கடினமான சூழ்நிலையால் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நல்ல மனிதர்களை பார்த்து ஓட்டுப்போடுவதுதான் சரியான நிலையாக உள்ளது. ஆனால் நமது தேசத்தில் சின்னத்தினை பார்த்து ஓட்டு போடும் நிலை சரியானதாக எனக்கு படவில்லை .தலைமைக்கு வேட்பாளரின் உண்மையான குணங்களை அறியாமல், பணத்தால் தலைமைக்கு அபிஷேகம் செய்து சீட்டை பெற்றுவிடுவதும் மக்கள் சின்னத்தின் தலைவரை நினைத்து ஓட்டு போடுவதும் வாடிக்கையாகிவிட்டது.இது மக்களாட்சி தத்துவம் போல் தெரியவில்லை.ரஜினி அதைத்தான் சொல்கின்றார். செயலாளர்கள் மிகுந்த செலவு செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்வதை என்னாலும் ஏற்க முடியவில்லை. நாட்டில் நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதற்கு தொகுதிக்கு ஒரு கோடி ரூபாயாவது செலவு செய்ய வேண்டும் என்று கூறுவது உண்மையில் வெட்கப்பட வேண்டும். மக்களை அப்படி அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்து உள்ளார்கள். அவரை அசிங்கமாக பேசுவது உண்மையில் அவர் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று பேசுபவர்களின் வாயை அடைக்க வேண்டும்.   08:00:21 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
6
2020
சிறப்பு பகுதிகள் ஜெ.,யின் துணிவு இன்று ரஜினியிடம்..
திரு.பொன் சம்பந்தன் எழுதிய விஷயத்தினை போல நானும் திருவள்ளுர் மாவட்ட தலைமை நீதிபதிக்கு ஒரு பெண் வன்கொடுமை வழக்கு பூவிருந்தவல்லி மாவட்ட குற்றவியல் நீதி மன்றம் பிரிவு இரண்டில் ஓ.எஸ்.எம் 110/2017 -ல் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட வாய்தாக்கள் வாங்கப்பட்டு இன்று பாதிக்கப்பட்ட பெண்ணே இது போன்ற அலைகழிப்பினால் நெஞ்சு வலியால் இறந்துவிட்டார்.ஆண் ஆதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ,பெண்களுக்கு சரியான முறையில் நீதி கிடைக்கவில்லை.நீதிமன்றம் அதை நிலைநாட்ட வில்லை.அவருடைய சொத்துக்கள் இன்று பெண் வன் கொடுமைகளினால் அபகரிக்கப்ப ட்டுள்ளது..அருண் மிஸ்ரா தங்களின் தீர்ப்பை மதித்து அரசு உயர் அதிகாரிகள் செயல்படவில்லை என்று கூறுகிறார்.நான் கூறுகின்றேன்.இந்தியாவில் படிப்பற்ற வசதியற்ற சாமானிய சாதிய பெண்களுக்கு உங்களால் நீதிமன்றங்களில் தாமதம் படுத்தாமல் நீதியை வழங்க முடிகின்றதா என்பதை அனைத்து நீதிமன்றங்களிலும் நீதி உறுதி செய்து நிலைநாட்டப்படுகிறதா?. என்பதை தங்களால் உறுதி செய்ய முடிகிறதா என்பதை கூறவும்.உங்களை மதிக்கவில்லை என்றால் நீதிமன்றங்களில் குறைபாடுகள் இருப்பதை அறியவும்.   15:46:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X