HoustonRaja : கருத்துக்கள் ( 44 )
HoustonRaja
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இந்த முதியவர், தன் மகன் தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனது மருமகளின் பேச்சை கேட்டு நடக்கிறானே என்ற கோபத்தில் (Judgemental Anger) மருமகளின் மீது பழி போடுவதாகவே தெரிகிறது.. வீடு புதுப்பித்தலில் விருப்பமில்லை, ஆனால், அதன் விளைவு இவருக்கு பிடித்திருக்கிறது.. (இந்த கடிதத்தில் தெரியும்) உட்சபற்ற புகார், வசதிக்கு மீறி கான்வென்டில் படிக்க வைப்பது.. மற்றபடி, வியாபாரம் நொடிந்ததற்கோ, பணப்பிரச்னைகளுக்கோ இவரே கூட மருமகளை நேரடியாக குற்றம் சாட்டவில்லை.. தலைமுறை இடைவெளியும், மருமகள் ( பொதுவாகவே, பெண்கள்) ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற இவரின் "தற்காலத்திற்கு பொருந்தாத" எதிர்பார்ப்பும் தான் இந்த கடிதத்தில் தெரியும் தெளிவான பிரச்சனை..   00:41:54 IST
Rate this:
1 members
1 members
3 members

அக்டோபர்
25
2019
சினிமா
லுங்கி_ராம்போ.. கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்த டைட்டில் தான் மனதிற்கு வந்தது.. கடைசி கால் மணிநேரம் வரை, படம் வேற லெவல்.. கடைசியில், ஓவர் மசாலா நெடியை குறைக்க தவறி விட்டார் டைரக்டர்.. ஏனென்று தான் தெரியவில்லை.. தரமான அதிரடி படம்.. இன்னும் பல ஆண்டுகளுக்கு பிரபலமாக இருக்கும்... பல லாஜிக் ஓட்டைகள், அதில் பெரிய ஒன்று, அப்பட்டமாக தெரிந்தது..   22:52:08 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
25
2019
சினிமா
.. நான் விஜய் ரசிகன் அல்ல, ஆனால் படம் "பலரும் சொல்வதைப்போல" அவ்வளவு மோசமும் அல்ல.. பெண்கள் வலிமை பற்றிய (ஏதோ) ஒரு கதையில், தனது மாஸை குறைத்து, நடித்ததற்காக விஜய்-யை கண்டிப்பாக பாராட்டுகிறேன்.. முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நன்றாக இருந்தது.. வீக்கான "அப்பா விஜய்" ரோல், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தீர்த்திருக்காது.. காமெடி ரொம்ப குறைவு.. உனக்காக டூயட் பாடல் மனதில் நிற்கவில்லை.. "சிங்கப்பெண்ணே" பாடல் சூப்பர்.. இரு பாடல்களிலும் "சிகப்பு" வண்ண தீம் நன்றாக படமாக்கப்பட்டு இருந்தது.. அட்லீ திரைக்கதையில் கவனம் செலுத்த தொடங்கவேண்டும்.. ஓரிரு நாட்களில் இரு குடும்பத்து சிக்கல்/பிரச்சனைகளை தீர்ப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.. படத்தை விரும்பாதவர்கள், அட்லீயை தான் கழுவி ஊற்றவேண்டுமேயன்றி, விஜயை அல்ல..   22:42:40 IST
Rate this:
1 members
1 members
2 members

நவம்பர்
3
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
.. அது அந்தக்காலம் இல்ல.. பாசமலர் அந்தக்கால "சினிமா".. அன்றிலிருந்து இன்றுவரை, அதீத உணர்ச்சிகளை (emotions) எளிதாக தூண்டும் காதல்/பாசம் தான் நிறைய சினிமாக்களில் உண்டு.. உறவுகளில் உள்ள நெளிவு சுளிவுகளை, சிக்கல்களை, குழப்பங்களை சரியாக/விரிவாக காட்டும் சினிமாக்கள் குறைவே.. இந்த வார கடிதமும் உண்மையா என்று நாம் யாருக்கும் தெரியாது.. ஒருவேளை உண்மையாக இருப்பின், அதனை ஒரு சினிமாவோடு உப்பிடுவது சிறுபிள்ளைத்தனம்.. பலபேர் பால்கவர்ச்சியை காதலென்றும், காதலை ஆழமான அன்பென்றும், நம்பி வறுபடுவது இது போன்ற சினிமாக்களால் தான்..   22:10:20 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
4
2019
சினிமா
படம் நன்றாக இருந்தது. ஆனால், மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம்.. ஹீரோயிசம் நெடி கொஞ்சம் அதிகம்.. பல காட்சிகளில் உதவி இயக்குனர்கள் தூங்கி விட்டார்கள் போலும்.. பினிஷிங்கில் பாக்கி இருப்பது, அங்கங்கே தெரிவது உறுத்தல்.. கதை தான் படத்தை காப்பாற்றுகிறது.. ஒளிப்பதிவு நன்று.. நடிப்பில் தனுஷுக்கும், மஞ்சு வாரியெருக்கும் இன்னும் இடங்கள் அதிகமாகவும், ஆழமாகவும் இருந்திருக்கலாம்.. டார்க் சப்ஜெக்ட்-தான், இருந்தாலும் காமெடி சற்றே கலந்திருக்கலாம்.. BGM ல் இருக்கும் GVPrakash ன் மேஜிக், பாடல்களில் இல்லை.. தினமலரின் தாராளமான 4/5 ரேட்டிங், தயாரிப்பாளர் தாணுவின் தாராளத்தை காட்டுகிறது..   21:44:38 IST
Rate this:
4 members
2 members
7 members

ஆகஸ்ட்
25
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வணக்கம்.. பயமோ, படபடப்போ அல்லது மற்ற அதீத உணர்ச்சிகளோ நம்மை முழுதும் ஆட்கொள்ளும்-முன் நாம் செய்யக்கூடியது இது... அவற்றை நாம் உணரும் "முதல்" தருணத்தில், ஆழமாகவும், மெதுவாகும் சுவாசிக்க துவங்கவேண்டும்.. அடிவயிற்றில் காற்று சென்று வருவதை கவனிக்கவேண்டும்.. அந்த அதீத உணர்வின் பெயர் சொல்லி அழைக்கவேண்டும் (ஓசையின்றியும் செய்யலாம்) .. உ..தா.. நான் கோவமாக இருப்பதை உணர்கிறேன்.. அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களையும் பட்டியலிடவேண்டும்.. உ..தா.. எனது அடிவயிறு கலக்குகிறது.. இப்படியே, ஆழமாக சுவாசித்தபடி, நம் உடலில், மனதில் தோன்றும் உணர்வு/உணர்ச்சிகளை ஒவ்வென்றாக பட்டியலிட வேண்டும்.. இப்படி 5 நிமிடங்களுக்கு பயிற்சி செய்வதின் மூலம், அதீத உணர்வுகளின் இறுக்கம்/தாக்கம் மெல்ல குறையும்.. இறுக்கம், சற்று குறைந்த பின்.. பின்வரும் நான்கு கேள்விகளுக்கான பதிலை கவனமாக, சிந்திக்க வேண்டும்... 1) நமக்கு மீண்டும் மீண்டும் வரும் இந்த துயரின் தன்மை என்ன? 2) இந்த துயரம் எங்கிருந்து வருகிறது?? 3) அந்த துயரில்லாத நிலையில், நாம் எப்படி இருப்போம்? 4) அந்த துயரில்லாத நிலையை எப்படி அடைவது?.. இந்த ஆராய்ச்சிக்கு, குறிப்பெடுத்தல் மிகவும் அவசியம்.. குறிப்புகளை, வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் அழித்துவிடலாம்.. தோன்றும் பதில்களை தானாகவோ, துணையுடனோ விவாதித்து, அவற்றுள் பயனுள்ளவற்றை (effective) செயல் படுத்த வேண்டும்.. அப்படி செய்ய துவங்கும் போது, அதீத உணர்ச்சிகள் மீண்டும் தோன்றினால், இப்பதிவை முதலிருந்து படிக்கவும்.. "பயம் மட்டுமே.. பயப்படுத்தற்குரியது" (The only thing to fear, is fear itself FDR)... வாழ்த்துக்கள்.. நன்றி..   00:14:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
11
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
தனி மனித தாக்குதல்களால், உங்களின் கருத்து பலவீனமாகும்.. உங்களின் கருத்துகளை மேலும் உரக்கவும், ஒருவரின் கருத்திற்கு மறுப்பினை அழுத்தியும் தெரிவிக்கலாமேயன்றி, அதே வேகத்தில்/கோபத்தில் மற்ற வாசகர்களை தரம்தாழ்த்துவது சபை அழகன்று.. நன்றி...   20:05:44 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
17
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
தவறான அறிவுரை.. திருமணத்தை தள்ளிப்போடுவது அவசியமில்லாதது, அறிவில்லாதது .. தவறான முன்னுதாரணமும் கூட.. இவரது திருமணத்திற்கு பின் தங்கைக்கு பிரச்னை வந்தால் (நிச்சயம் வரும்), இவரால் திருமணத்திற்கு லீவு போட முடியுமா? தன்னை விரட்டிய கணவன் தேடிவரும் வரை, வேலைக்கு சென்று, பெற்றோரை பார்த்துக்கொள்ள தங்கைக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது..அதனை, குருட்டுத்தனமான அன்பால் கெடுக்கவேண்டாம்..   00:35:47 IST
Rate this:
3 members
0 members
12 members

ஜனவரி
20
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
தெளிவான, சரியான அறிவுரை. பெற்றோரின் அங்கீகாரம், அந்த இளந் தம்பதியருக்கு திருமண உறவின் பொறுப்பினை உணரும், வாய்ப்பினை தரும். குற்ற உணர்வால் ஒரு பயனும் இல்லை. உறவு சார்ந்த சிக்கல்களில், "மரபணு மந்திரம்" தவிர்க்கமுடியாத ஒன்று, ஆனால் நாம் பெரும்பாலும் காணத்தவரும் ஒன்று.   20:14:27 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
29
2018
சினிமா
வயது கணக்கை நீங்கள் சரிபார்க்கவும். டிசம்பர் 12 அன்று தான், அவருக்கு 68 வயதாகும். இன்னும் 2 வாரங்கள் உள்ளது.   01:42:24 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X