Palanisamy T : கருத்துக்கள் ( 660 )
Palanisamy T
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2022
பொது அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள் ஊராட்சி இடுகாட்டில் பகீர் சம்பவம்
சுடுகாட்டில் புதைக் குழிகள் நெருக்கமாக இருப்பது நன்று. இங்கே வெட்டப்பட்ட புதைக் குழிகள் சற்று அதிகமான இடைவெளிகள் கொண்டு வெட்டப் பட்டுள்ளது. பொருளாதாரப் பார்வையில் மண் என்பது என்றும் விலை மதிக்க முடியாதப் பொருள். எந்த அரசாக இருந்தாலும் மண்ணை மதிக்கவேண்டும். காப்பாற்றவும் வேண்டும். அதை விலை பேசக் கூடாது.   09:21:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
19
2022
பொது விண்வெளியில் ஒலிக்கவுள்ள இளையராஜா இசை
இளையராஜா இசையில் அமைந்துள்ள தமிழ் பாடலுக்கும் இடமுண்டா இருந்தால் மகிழ்ச்சி இந்தியாவிலுள்ள மற்ற மாநில மொழிப் பாடல்களுக்கும் இடமிருக்கின்றதா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நிச்சயமாக சமஸ்கிருதப் பாடல்கள் ஒலிக்கும்   09:01:17 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
13
2022
அரசியல் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு முருகன் உறுதி
எதை வைத்து சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்கிறரீர்கள். அதிகார மோகமோ தமிழர் திருநாள், பொங்கல் மற்றும் தை பிறந்தால் வழிப் பிறக்கும் என்ற பொன்மொழி. இவையெல்லாம் தை மாதத்தில்தான். இன்று தமிழறிஞர் களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குகின்ற மறைமலை அடிகளாரும் இம் மாத்தையே அன்று அவர் தலைமையில் தை மாதமே தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். முதலில் தமிழ் அறிஞர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அதன் பிறகு நீங்கள் பேசலாம்.   07:54:57 IST
Rate this:
9 members
0 members
6 members

ஜனவரி
11
2022
கோர்ட் ராஜேந்திரபாலாஜி மீது தொடரும் மோசடி புகார்
திமுக ஆட்சிக்கு வந்தப் பின்பு ஊழலுக்கு முதலடி எடுத்துக் கொடுத்ததே கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான். இப்போது ஊழல்களென்பது தமிழக ஆட்சியாளர்களின் கலாச்சாரமாக மாறிவிட்டது அண்ணாவின் பெயரைச் சொல்லி இந்த இரண்டுக் கட்சிகளும் சேர்ந்துச் செய்யும் அளவில்லாத ஊழலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. பாவம் அண்ணாவும் பெரியாரும். அன்று அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வரவேண்டியவர் நெடுஞ்செழியன் அவர்கள் நன்குப் படித்தவர், அறிவாளி நல்ல சமூக சிந்தனையாளர் அவர் மட்டும் முதல்வராக வந்திருந்தாள் தமிழகம் இன்று நல்லப் பாதையில் சென்றிருக்கும். இனிமேல் இப்போதுள்ளவர்கள் கொஞ்சமாவது அண்ணாவின் பெயரையும் தமிழகத்தின் நல்லப் பெயரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். மக்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்குவார்கள்.   08:16:13 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
17
2021
அரசியல் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு ஆதரவு கொடுப்பதில், உங்களுக்கு நிகர், உங்கள் கட்சியில் யாரும் இல்லை!
அன்று ராஜ ராஜ சோழன் இலங்கையை வெற்றிக் கொண்டதன் அடையாளமாக ராமநாதபுறத்தில் ஈழக் காசுகளை மட்டுமா கண்டெடுத்துள்ளார்கள் அங்கு சிங்களக் காசுகள் கிடைக்கவில்லையோ   11:34:08 IST
Rate this:
0 members
1 members
2 members

டிசம்பர்
17
2021
முக்கிய செய்திகள் சாதனைகளை தமிழில் வெளியிடுங்கள் பிரதமரிடம் மாஜி கவர்னர் வேண்டுகோள்
மத்திய அரசின் சாதனைகளை தமிழிலும் வெளியிடும்படி கேட்டுக் கொண்டது நல்ல விஷயம். மக்களுக்கும் உண்மைகள் தெரிய வேண்டும். மேலும் நல்லுறவை வளர்க்கும். மேலும் அவர் தமிழ் பாசம் பற்றி சொல்லியுள்ளீர்கள். திருக்குறள் என்ற நம் பழமையான நூலை இந்திய நாட்டின் நீண்டக் கால நலன்கள் கருதி அந்நூலை இந்திய தேசிய நூலாக அறிவிக்கும்படி நீங்கள் அவரிடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும். உலகிலேயே தமிழ் மிகப் பழமையான மொழியென்று சொன்னவரும் அவர்தான். திருக்குறள் வெறும் பழைமையான நூல் மட்டுமில்லை அந்நூல் அறிவியல் நூல். அதையும் கடந்து ஒரு மெய்யறிவு நூலாகவும் இயங்குகின்றது. இந்தவுண்மையை இந்திய மக்கள் உணரவேண்டும். தமிழக பாஜக வும் இதை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கை மக்களிடம் குறிப்பாக தமிழறிஞர்களிடம் மிக நீண்டக் காலமாகவேவுள்ளது. நீங்கள் செய்வீர்களென்று நம்புகின்றோம் இதனால் தமிழுலகம் என்றும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும்.   10:46:36 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
7
2021
அரசியல் நாட்டை விட்டு வெளியேறலாம் பரூக் அப்துல்லாவுக்கு கண்டனம்
எந்த அடிப்படையில் சிறப்புரிமையை திரும்பிக் கொடுக்க வேண்டும். மற்ற மாநிலங்கள் வந்து நீங்கள் வேலையைச் செய்யலாம் சொத்து வாங்கலாம் வாங்கியும் குவிக்கலாம் ஆனால் மற்ற மாநிலத்தவர்கள் காஸ்மீரில் வந்து அரசு வேலைகளும் செய்ய முடியுமா அல்லது சொந்த வீடுகள் வாங்கி குடியிருக்க முடியுமா என்பதும் கேள்விக் குறியே ஆனால் நீங்கள் மட்டும் மற்ற மாநிலங்களில் வந்து எல்லாவற்றையும் அனுபவிக்கலாம். இது எந்த வகையில் நியாயம். இது இரட்டை வேடம் இரட்டை முகங்கள் காட்டும் வேடங்கள் தானே கொஞ்சம் இந்திய வரலாற்றை பின்னோக்கி படித்துப் பார்த்து உண்மையை விளங்கி கொள்ளுங்கள்.   09:27:06 IST
Rate this:
0 members
0 members
28 members

டிசம்பர்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லையாம்.. சேகர்பாபுவின் காமெடி!
ரொம்ப நல்ல சேதி. உடல் மன நோய்க்கு நல்ல மருந்தை தந்துள்ளார். டில்லி தமிழகத்தை குறி வைத்துப் பேசுவதைக் கண்டுமா இப்படிப் பேசவேண்டும். கருணாநிதி ஐந்து முறை முதல்வர். இப்போது ஸ்டாளின் அவர்கள். இவர் எத்தனை முறையோ. இன்னும் ஒரு வாரிசு வளர்ந்து வருகின்றார்.   08:06:07 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
29
2021
அரசியல் ஜெயலலிதா வீடு சர்ச்சை அ.தி.மு.க., மேல்முறையீடு!
ஜெயா பெயரைச் சொல்லிச் சொல்லியேஅரசியல் செய்துக் காலம் தள்ளுவது நாகரீகமாகயில்லையே. ஒரு.பொறுப்பான எதிர் கட்சியாக ஸேயல்படலாமே. வெள்ளத்தால் மக்கள் படுகின்ற அவதி அல்லல்கள் உங்களுக்கு தெரிய வில்லையா? ஜெயாவும் தன் காலத்தில் மக்களுக்கு சரியாக எதுவும் செய்ய வில்லையே இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிப்பதில் மட்டும்தான் குறியாகவுள்ளனர். மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வதில்லை.   22:17:24 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
24
2021
பொது ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்
திருக்குறள் சாதாரண அறிவியல் நூலில்லை. இதையும் கடந்து மெய்யறிவு நூலாக இயங்குகின்றது. அறிவியல் பஞ்ச பூதங்களை மட்டும் உள்ளடக்கியது. மெய்யறிவு இதையும் கடந்துச் செல்கின்றது. இறைவனை நோக்கி பயணிக்கின்றது. ஆகையால் திருமுறைகள் போன்று திருக்குறளும் சைவ சித்தாந்த நூல். முழுப் பொருளுரையை யாராலும் கூறமுடியாது. முதல் பத்துப் பாடல்களும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள். பூசைக்கு உரிய பாடல்கள். ஆகையால் உலக முழுதுமுள்ள தமிழர்கள் பூசைக்கு மட்டும் இன்றி இனிமேல் எல்லாத் தமிழர் நிகழ்ச்சிகளிலும் முதல் நிகழ்ச்சிப் பாடலாக பாடவேண்டுமென்று மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன். உலகிலுள்ள எல்லாத் தமிழர்களுக்கும் நல்லுறவுப் பாலமாகவும் ஒற்றுமைப் பாலமாகவும் இனிமேல் திருக்குறள் அமையட்டும். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் பிடித்த இரண்டு விஷயங்களில் இதுவுமொன்று. முக்கடல் சந்திக்கும் கன்யாக் குமரியில் உலகமுழுதும் காண வள்ளுவனுக்கு சிலை வைத்தது. நம் பழமையான தொன்மை வாய்ந்த வரலாற்றில் எந்த ராசாவும் செய்யத் தவறியப் பணியை அவர் செய்ததுதான். இனிமேல் வளரட்டும் நம் தமிழ்ப் பணிகள்.   09:06:13 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X