Mirthika Sathiamoorthi : கருத்துக்கள் ( 1579 )
Mirthika Sathiamoorthi
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2020
அரசியல் பெண் குழந்தை கல்வி உள்ளிட்ட விஷயங்களுக்காக பிரதமர் மோடி ரூ.103 கோடி நன்கொடை
மோடி அரசு எப்படி நாடாளுமன்றத்தை தவிர்க்கிறது தெரியுமா ? பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில், சராசரியாக ஆண்டுக்கு 3.6 முறை பேசியுள்ளார்: ஆறு ஆண்டுகளில் 22 முறை (இரண்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த எச்.டி.தேவேகவுடாவை விட அதிகம் இல்லை) பேசியுள்ளார்.இதற்கு நேர்மாறாக, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஆறு ஆண்டுகளில் 77 முறை பேசினார். மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு பதவியில் நாடாளுமன்றத்தில் 48 முறை பேசியுள்ளார்...இந்த புள்ளிவிவரத் தகவல்கள், பிரதமர் மோடி, வானொலியில் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக (அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போல) மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பும் மோடி என காட்டுகிறது..இந்த 2 முறைகளும் பொதுவான ஒரு கருத்தைக் கொண்டுள்ளன. அவை ஒரு வழிச் செய்தியைத் தெரிவிக்கும் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன. இது செய்தி பெறுபவர் கேள்வி கேட்பதையும் தவிர்க்கிறது (ஒரு தலைவரின் அவருடைய மக்களுடன் நேரடி தொடர்புக்கு மாறாக)...அது எதிர்க்கட்சியினரை விமர்சகர்களாக கருதாமல் எதிரிகளாக கருதுகிறது ( இதன் பிரதிபலிப்பு இங்கே மோடியை ஆதரித்து கருத்து சொல்பவர்கள் எதிர்கட்சியினரை பார்க்கும் பார்வையிலே புரியும்)...நாடாளுமன்றத்தைத் தவிர்ப்பதற்காக, மோடி அரசாங்கம் பெரும்பாலும் அவசரச் சட்ட வழியைப் பின்பற்றி வருகிறது. ..மோடி அரசாங்கம் தனது முந்தைய அரசுகளைவிட அதிகமாக அவசரச் சட்டத்தை பயன்படுத்தியது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் கீழ் ஆண்டுக்கு 6 அவசரச்சட்டங்களையும் மோடி அரசாங்கத்தின் ஆண்டுக்கு 11 அவசரச் சட்டங்களாகவும் உயர்ந்துள்ளது...மக்களவை மற்றும் மாநிலங்களவை விவாதாங்களுக்கான இடங்களாக இருப்பது நித்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. நாடாளுமன்றக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை நாடாளுமன்றப் பணிகளின் திட்டமிட்ட மையத்துக்கு அனுப்பப்படுவது பெரிய அளவில் சுருங்கிவிட்டது...15வது மக்களவையில் 68-ல் (மொத்தத்தில் 71 சதவீதம்) இருந்து 16 வது மக்களவையில் 24 ஆகவும் (மொத்தத்தில் 25 சதவீதம்) 2020 இல் பூஜ்ஜியம் ஆகவும் சுருங்கி உள்ளது. பல முக்கிய சட்டங்கள் நிதி மசோதாக்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சாதாரண மசோதாக்கள் அதிகம் விவாதிக்கப்படவில்லை, அவற்றின் பிரதிகள் எம்.பி.க்களிடம் கடைசி நிமிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாலும் அல்லது விவாதங்களுக்கு சிறிது நேரம் இருப்பதால் அதிகம் விவாதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் வீழ்ச்சி எல்லோராலும் பார்க்கப்படுகிறது? ஆனால், யாராவது கவலைப்படுகிறார்களா? கவலையெல்லாம் நேருவையும் காங்கிரசின் ஆட்சியையும் சுடலையும் சுற்றியே இருக்கிறது. வாழ்க ஜனநாயகம்.   09:39:32 IST
Rate this:
7 members
0 members
5 members

அக்டோபர்
17
2020
பொது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை
மன்னிக்கணும் நாங்க வாயை பொத்திக்கிறோம்...இங்கே அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேரவில்லைன்னு யாருங்க சொன்ன? கிட்டத்தட்ட 3000 அரசு பள்ளிகள் 3 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள்... இதில் தேர்வு எழுதியது எத்தனை சதவீதம்? தேர்ச்சிபெற்று மருத்துவரானவர்கள் எத்தனை சதவீதம்? எங்க கேள்வியே இதுதானே... இதையம் அரசியல்வாதிகள் வாயுமூடிக் கொள்ளவேண்டுமா? தேர்வு பெற்ற மாணவருக்கு வாழ்த்துக்கள். ..ஆனா தனியார் பயிற்சிப்பள்ளியில் கோச்சிங் எடுத்து ஆசிரியர்களின் பணவுதவியால் இரண்டாம் முறை தேர்வெழுதி மட்டுமே இவரால் ஜெயிக்கமுடிந்தது..இந்த வாய்ப்பு எத்தனை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்? .முடிவில் அரசு பள்ளிமாணவனாலும் தனியார் பள்ளி மாணவனாலும் கோச்சிங் போகாமல் தேர்வில் ஜெயிக்கமுடியாது அப்புறம் எதற்கு +2 பரிச்சை? தகுதி இல்லாதவர்கள் காசு கொடுத்து மருத்துவம் சேர்வதை தடுக்கும் நீட் வாதிடும் அனைவரும் சொல்லும் கருத்து.....எனக்கு புரியல? அரசு மருத்துவ கல்லூரியில் காசு கொடுத்து சேரமுடியுமா? 2015 இல் அரசு கல்லூரியில் கட் ஆப் மதிப்பெண் 200 க்கு 192 இது பழங்குடியினருக்கான (ST) மதிப்பெண்...காசு கொடுப்பதை தடுக்க நீட் சரி...அப்ப தனியார் கல்லூரிக்கு மட்டும் நீட் அவசியம் மிக சரி... எதுக்கு அரசு கல்லூரிக்கும்? 200 க்கு 190 மதிப்பெண் எடுப்பவனை விட நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே தகுதியை தீர்மானிக்கும் என்றால் எதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு? நீங்கள் காசுகொடுப்பதை தடுக்க நீட் தனியாருக்கும், அரசு கல்லூரிக்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணும் இருக்கட்டுமே? இதையும் அரசியல்வாதிகள் பேசாமல் வாய்மூடவேண்டுமா? சர்வாதிகார ஆட்சியா மக்கள் ஆட்சியா? சொன்ன என்னை பைத்தியக்காரனை பாக்குறாங்க...   07:20:02 IST
Rate this:
3 members
0 members
2 members

அக்டோபர்
15
2020
சம்பவம் சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்
பணமதிப்பிளப்பிற்கு பின் சம்பாதித்த காச இருக்கும்..ஏன்னா பணம்திபிலபில் எல்ல கள்ளப்பணமும் ஒளிஞ்சிடுச்சே...   20:55:54 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
16
2020
அரசியல் 2018-19 நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற பாஜ.,
திரு ஜன இதை நீங்க கேக்கவேண்டியது வாக்கெடுப்பு உரிமை குழுவான ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம்..பிஜேபி யை சொன்னவுடனே காங்கிரஸ் திமுக ன்னு பிஜேபி தேர்தல் பிரச்சார தலைவரா கலத்தில் குத்துச்சுடுவீங்க...காங்கிரஸ் திமுக பிஜேபியை பேசுதோ தெரியலை...அதவிடுங்க தன்னரவோ தொண்டு நிறுவனகளுக்கு நிதிக்கொடுப்பவர் ஆதார் ஏன் இணைக்கணும்ன்னு சொன்ன நாம கட்சிக்கு நிதி கொடுப்பவர்களை பத்தி கண்டுக்கவே இல்லியே ஏன்? நமக்கு அதெல்லாம் எதுக்கு நாம வழக்கம்போல நேரு காங்கிரஸ் திமுக குடும்ப ஆட்சி...நாம் எதிர்க்கட்சியை இருந்தாலும், அவங்க ஆட்சியை தூக்கிட்டு நாம உக்காந்தாலும் இதையே பேசுவோம் காச பணமா?   16:27:14 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
14
2020
சினிமா ஷேம் ஆன் விஜய்சேதுபதி : 800 படத்திற்கு எதிர்ப்பு : டுவிட்டரில் டிரெண்டிங்...
முத்தைய முரளிதரனின் மனைவி ஒரு தமிழச்சி...எப்புடி குடும்பம் நடத்தலாம் ? மானமுள்ள தமிழச்சி உடனே விவாகரத்து செய்யணும்...அதுமட்டுமா முரளிதரன் ஒரு OCI (Overseas Citizenship of india) இந்தியா வர விசா தேவை இல்லை... அதை மத்திய அரசு உடனே ரத்து செய்யணும்...சேம் ஆன் முத்தையா பொண்டாட்டி.... சேம் ஆன் இந்திய அரசு....   20:24:06 IST
Rate this:
8 members
0 members
7 members

அக்டோபர்
14
2020
சினிமா யாஷிகா கார் விபத்திற்குக் காரணம் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸா?...
பாலாஜி அந்த நிறுவனத்தை குறிப்பிடும்போது அவர் பேச்சு பிக் பாஷால் ம்யூட் செய்யப்படும்..சத்தியமா ஜோ மைக்கேல் தனது நிறுவனம் தான் என சொல்லதவரை எனக்கு அதைப்பற்றிய ஒரு அக்கறை இல்லை.என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு மாடல் ஏஜென்சி அவ்வளவே..எனக்கு அந்தளவுக்கு உலக அறிவு இல்லை...என்னை போலதான் எல்லோரும் என நினைக்கிரேன்.. சத்தம் இல்லாம கண்டுக்காம இருந்திருந்தா எல்லோரும் இதை சாதாரணமாக கடந்து போயிருப்பார்..ஏன்? மக்கள் மறந்தே போயிருப்பார்...எங்கப்பன் புதருக்குள் இல்லைன்னு தானே தன்னை பற்றிப்பேசி ஆப்பு வச்சுக்கிட்டார் ஜோ ...பிக் பாஷை விட இவனுக கொடுக்கிற கண்டெண்ட் சூப்பரோ சூப்பர்..   20:04:16 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
14
2020
பொது விவசாயிக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்? உற்பத்தி விலை - விற்பனை விலை வித்தியாசத்தின் பின்னணி
இனிமே யாரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கம்மா நேர விவசாயிக்கிட்டே சூப்பர் மார்க்கெட்டு விலைக்கே வாங்கிகிட்டா விவசாயிக்கு எவ்வளவு வருமானம்..தமிழனாய் இருந்தால் இதை செய்...   19:39:48 IST
Rate this:
0 members
1 members
2 members

அக்டோபர்
14
2020
சம்பவம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்த 8 பேர் கைது
மேட்ரிமோனி பக்கம் போனதில்லை போலிருக்கு? எந்தப்பய ஜாதிபாக்காம கல்யாணம் பன்றான்...? ஹிந்து தமிழன்னு வாய்கிழிய பேசிக்குவானுக... கல்யாணம் பண்றப்ப மட்டும் எல்லோரும் இந்து தமிழன் பாக்கமாட்டானுக என்ன ஜாதின்னு பாப்பானுக..எதுக்குன்னு நெனைக்குறீங்க உலக அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல...   19:33:46 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
14
2020
சம்பவம் ஹத்ராஸ் சம்பவம் ஆதாரங்களை அழித்ததாக அதிகாரிகள் மீது வழக்கு
லாபி? எப்புடி உடலை எரித்து காவல்துறை செஞ்சதே அந்த மாதிரி....?   19:27:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
சம்பவம் ஹத்ராஸ் சம்பவம் ஆதாரங்களை அழித்ததாக அதிகாரிகள் மீது வழக்கு
இப்போ அவருக்கு பிரச்னை இந்த குற்றவாளிகளை தண்டிப்பதில் இல்லை...ஏன் மற்ற மாநிலத்தில் இதை செய்யலைங்கிற குற்றம் கண்டுபிடிப்பது மட்டுமே அவரின் பிரச்னை ...இதில் அஜெண்டா வேற பாக்குறாரு..குற்றவாளிங்க தப்புச்சா என்ன? மாட்டுனா என்ன ..நமக்குத் தேவை அஜெண்டா...கேக்கவேண்டியதுதானே? காவல்துறை அவசரம் அவசரமா உடலை எரித்ததை பத்தி இன்னைக்கு வரைக்கும் காவல்துறையோ உபி முதல்வர் இன்னும் விளக்கம் தரவில்லை...இந்த அக்கறை மற்றமாநிலங்களின் முதல்வர்களும் இதே போன்று காவல்துறையை காத்தால் உங்களை எல்லாம் பாராட்டலாம் ??? ஆனா மற்ற முதல்வர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு போய் விடுகீறீகள் ???? உங்க அஜெண்டா நன்றாக தெரிகிறது ???   19:26:45 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X