Balasubramanian : கருத்துக்கள் ( 770 )
Balasubramanian
Advertisement
Advertisement
Advertisement
மே
10
2021
கோர்ட் தடுப்பூசி கொள்கையில் உச்சநீதிமன்றம் தலையிட கூடாது மத்திய அரசு
வீட்டில் மனைவி சமையல் செய்வதை கணவன் குறை கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நடுவர் ஒருவர், இப்படித்தான் சமைக்க வேண்டும் என்று கூற முற்ப்பட்டால், என்னவாகும்? நீயே தினசரி சமையல் செய்து காண்பி, என்று மனைவி கூறி விடுவாள். அது போலத்தான், மத்திய அரசின் வேலை utiing, செயல். எதிர் கட்சிகள் வேலை குற்றம் கூறுவது. மத்திய அரசின், மக்கள் சேவை, அந்த பெண் குழந்தைகளுக்கு உணவளிப்பது போல நியாயம் செய்கிறோம் என்று, மத்திய அரசின் சேவையில், நீதிமன்றம் நுழைந்தால், மத்திய அரசு, இனி உங்கள் பாடு, மக்கள் பாடு, என்று கையை விரித்து, வேடிக்கை பார்க்கும். 😁   13:47:54 IST
Rate this:
6 members
0 members
15 members

மே
9
2021
அரசியல் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க உதவும் பசு கோமியம் பா.ஜ., எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
நமது நாட்டில் பல பழக்க வழக்கங்கள் உள்ளன. வயதானவர்கள் அதை பரிந்துரை செய்கிறார்கள். அதில் ஒன்று வென்னீரில் மஞ்சள் மற்றும் மிளகு போட்டு குடிப்பது. ஓமம், கற்பூரம் மற்றும் துளசி இலை சேர்த்து முகர்வது. நீராவியில் யூகலிப்டஸ் அல்லது கிராம்பு எண்ணெய் போட்டு முகர்வது. அது போல, இதுவும் ஒன்று. நம்பிக்கையே மருந்து. அதுவும், முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற, போதிய பாதுகாப்பும் இருந்தால் போதும். ஒருவர் தங்கள் அளவில் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவே, இவர் சொல்வதை நம்புபவர்கள், கடை பிடியுங்கள். இல்லை என்றால், ஏதோ கிழடு சொல்கிறது, என்று விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நிலமை மிஞ்சினால், நிச்சயம் ஆம்புலன்ஸை அழையுங்கள். இவரும் அதையே செய்வார்   08:34:50 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
7
2021
அரசியல் புதிய தலைமைச்செயலாளராக இறையன்பு நியமனம்
திராவிட கட்சியின் ஆட்சி, இறையன்புடன் நல்லாட்சியாக மலர வாழ்த்துக்கள் 💐   07:58:01 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
6
2021
பொது யானைகள் மீது தாக்குதல் வாலை பிடித்து துன்புறுத்தல்!
ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழா அலின் (ஊர் சிறுவர்கள் நீண்ட தந்தங்களை கழுவும் போது) நீர்த்துறை படியும் பெரும் களிறு போல (நீர்த்துறயில் சாதுவாய் படிந்து பணியும் பெரிய யானை) என்று அவ்வை எழுதிய புறநானூறு பாடல் எண் 94 ல் வருவது போல, மிகவும் சாதுவான மிருகம் அது. ஆனால் இன்றைய இளைஞர்கள் தான் மிருகம் போல் ஆகிவிட்டனர். இயற்கையுடன் ஒன்றி வாழ நாம் தவறி விட்டோம். இயற்கை, பரவும் காட்டுத்தீ, வெள்ள அபாயம், வறட்சி, மற்றும் இப்போதைய கொரோனா தாக்குதல் மூலம், தனது சீற்றத்தை தெரியப்படுத்துகிறது. அதே போல் இந்த யானை திரும்ப தாக்கினால், இந்த சிறுவர்கள் கதி என்ன ஆகும்?   19:03:07 IST
Rate this:
0 members
0 members
11 members

மே
6
2021
கோர்ட் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது துவங்கும்? ஐகோர்ட் கேள்வி
ஸ்டாலின், ஸ்டெரிலைட், ஸ் அப்பா என்ன வெயிலில், என்ன வெயிலில்?   13:26:33 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
4
2021
அரசியல் ஆணவம்தான் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கான காரணம் சிவசேனா விமர்சனம்
பாஜக முதுகில் குத்தி, எதிரி கட்சியான காங்கிரஸ் தயவில், ஆட்சியை பிடித்தவர், ஆணவத்தை பற்றி பேசுவதா? வெட்கம்   05:12:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2021
பொது நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது இப்படி தான்!
எது நடந்தாலும் அது மக்கள் தீர்ப்பு எதையும் தாங்கும் இதையம் வேண்டும். அன்று செய்ததை இன்று மாற்ற வேண்டும் என நினைத்தாலும் முடியாது. அதுதான் ஒவ்வொரு தேர்தலும் நமக்கு சொல்லித் தரும் பாடம். 'எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு' மக்கள் அன்று துணிந்ததை எண்ணும் நாள் இன்று வருவதை வரவேற்போம்.   07:20:07 IST
Rate this:
0 members
1 members
5 members

ஏப்ரல்
29
2021
அரசியல் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் பரபரப்பு கருத்து கணிப்பு
ஓராண்டுக்கு மேல் கொரோனா ஆட்சி செய்கிறது. அதை சகித்துக் கொண்ட தமிழன் அடுத்து வர இருக்கும் ஆட்சியையும் சகித்துக் கொள்வான்   21:14:11 IST
Rate this:
17 members
0 members
41 members

ஏப்ரல்
29
2021
பொது 98.6 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் ஒட்டுச்சாவடிக்குள் அனுமதி இல்லை
அப்படி சொல்லுங்க EC சார் 100 டிகிரி க்கு மேல கொளுத்தும் இந்த கோடை வெயிலில், எவன் 98.6 டிகிரிக்கு கீழே வரானுகன்னு பார்த்துளலாம். சர்பத்துக்கு வச்சி இருக்கும் ஐஸ் கட்டியை உராசிக்கிட்டு வந்துறப் போறானுங்க உஷாராக இருக்கணும் (கஞ்சா கருப்பு குரலில் படிக்கவும்) 😁😂   13:57:05 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
26
2021
சம்பவம் போலி டுவிட்டர் கணக்கு தலைமை நீதிபதி ரமணா போலீசில் புகார்
ஆரம்பிச்சுட்டாங்க ஐயா ஆரம்பிச்சுட்டாங்க பாவம் இவர் நேற்று தான் பதவி ஏற்றுக் கொண்டார்.அதுவும் நாட்டின் தலைமை நீதிபதியாக அதற்குள் அவர் பெயரில் போலி டுவிட்டர். இவருக்கே இப்படி என்றால் மற்றவர்கள் நிலைமை என்ன? இவர்கள் தான் வலை மற்றும் சமூக ஊடகங்களில், பொய் செய்திகளை பரப்பி, மக்கள் மனதை கலைக்கும் ஊடக டெரரிஸ்டுகள் வன்முறையாளர்கள். எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு   22:44:10 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X