Madhu : கருத்துக்கள் ( 359 )
 Madhu
Advertisement
Advertisement
ஜனவரி
17
2019
உலகம் அமெரிக்க பார்லி., குழுவில் இந்தியர்
ஏன் இவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் இல்லையா? இத்தாலிய‌ இந்தியரைத் தலைவராக ஏற்றுக் கொள்கிறோமே இது ஏன் புரியவில்லை?   17:57:20 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2019
பொது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது
இதற்காகவா "ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து" என்று எனது முந்தைய பதிவில் இருந்திருக்க வேண்டும். தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.   15:33:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2019
பொது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது
'ஏறு தழுவுதல்' சங்க காலத்தில் இருந்ததைப் போல இப்போது நடப்பதாகத் தெரியவில்லை. வாடி வாசலிலிருந்து வெளிவரும்போதே கூட்டமாக அதன் மீது பாய்கிறார்கள். பல காளைகள் அவர்களின் சீருடையின் நிறத்தைக் கண்டே மிரண்டு பிடிபடாமல் ஓடுகின்றன. காளை வென்றது என்று சொல்கிறார்கள். இவற்றை நேரடி ஒளிபரப்பு செய்து காண்பிக்கிறார்கள்.நம்புகிறோம். ஆனால், வாடி வாசலுக்குள் நடப்பதைக் காண இயலவில்லை. சில கொழுத்த‌ காளை மாடுகள் வாடி வாசல் வழியே புகுந்து வெளியே வரவே சிரமப் படுகின்றன. வீரர்கள் சிலர் உள்ளே செல்வதையும் காண முடிகிறது மாட்டின் கொம்பினால் காயப்படுவதையும் காண முடிகிறது. காவல் துறையினரின் பாடு திண்டாட்டம்தான். அவர்கள் ஒன்றும் மாடுபிடி வீரர்கள் அல்லவே பல சமயங்களில் அவர்கள் தங்களை நோக்கி வரும் காளைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தடியை உபயோகிக்க வேண்டியுள்ளது. சமூக ஆர்வலர்கள் எங்கே போனார்கள்? இதைவிடப் பெரிய பரிதாபம் (இழுக்கு என்றே நாம் சொல்லலாம் ). வென்றவர்கள் கூட்டமாக நின்று கொண்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டு பரிசுப் பொருளுக்காகக் கை நீட்டுவதும், மேலே இருந்து பரிசுகளைத் தூக்கி எறிவதும் பார்க்க சகிக்கவில்லை. இதற்காகவா ஜல்லிக்கட்டை எதிர்த்து வெற்றி பெற்றார்கள்? வெற்றி பெற்றவரின் முகமோ, பெயரோ தனியாக ஒளிபரப்பப்டுவதில்லை. மற்ற விளையாட்டுகளைப் போல வென்றவர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்து ஏன் பரிசுகளை வழங்கக் கூடாது?   12:53:38 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
9
2018
பொது ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்ற மக்கள் ஆட்சேபம்
ஜெயலலிதா அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி வரிகள், உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் சொலலப்பட்ட அபராதத் தொகை இவற்றை வசூலிக்கும் முகமாக அரசாங்கமே வேதா இல்லத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, முக்கியமான அரசு அலுவலகத்தை அங்கு நிறுவலாம். அரசு அலுவலகம் செயல்பட ஆரம்பித்து விட்ட பிறகு, அதுவே அவரை மக்களுக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? அது சரி ....   18:06:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2018
அரசியல் சிக்குகிறதா காங்.,? புயலை கிளப்பும் மைக்கேலின் டைரி
இந்தக் கட்டுரையில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. அதில், முக்கியமானது இத்தாலிய கோர்ட் தீர்ப்பு. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் கம்பெனியின் முக்கிய அதிகாரி ஒருவர் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார். இந்த ஊழல் வழக்கு விசாரிக்கப் பட்டு, இத்தாலியில் தீர்ப்பு வந்து இந்திய அரசியல்வாதிகள் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டது உண்மை என நிரூபணமாகி விட்டது. 'கோட்' வேர்டில்' எழுதப் பட்ட நபர்கள் இவர்கள் தானா என குற்றவாளிகளிடம் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படம் காட்டப் பட்டது. 'ஆம் ' என சொல்லியுள்ளனர். தீர்ப்பில் 2,3 இடங்களில் அமமையாரின் பெயர் காணப் படுகிறது. இடைத் தரகராக செயல்பட்டவர் மைக்கேல். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப் பட்டது எனும் விவரங்கள் அந்த தீர்ப்பில் உள்ளன. எனவே, மைக்கேலை விசாரிப்பது என்பது நம் நாட்டிற்கு அவசியமான. தேவையான ஒரு விசாரணை. மற்றவர்கள் போலவே இவரையும் கொண்டு வர இயலாது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் தான் இப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.   15:23:55 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

நவம்பர்
28
2018
சினிமா பாட்டே என்னுடையது, பங்கு இல்லையா.? - இளையராஜா...
இவர் இசையமைத்த பிரபலமான பாடலை யாராவது அபஸ்வர்மாகப் பாடி கொலை செய்தாலும் இவர் வழக்குத் தொடரலாம். அப்படித்தானே? மற்றொரு ஏமநாத பாகவதர்   09:36:43 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
28
2018
சினிமா பாட்டே என்னுடையது, பங்கு இல்லையா.? - இளையராஜா
ஒரு பெரிய செல்வந்தர் பெரும் பொருள் செலவழித்து ஒரு மருத்துவ மனையைக் கட்டுகிறார். பிறகு அதற்கு திறப்பு விழா நடத்தி அதை உருவாக்க ஒத்துழைத்த பொறியாளர், கட்டிட மேஸ்திரி, சித்தாள், எலக்ட்ரீஷியன், அலங்கார விளக்குகள் அமைத்தவர், லாபரட்டரி, எக்ஸ்ரே மெஷின் நிறுவ உதவியோர் எனப் பலருக்கும் சம்பளம் தந்து அவர்களைத் திறப்பு விழாவில் கௌரவித்து நன்றி தெரிவித்து வழியனுப்பி வைக்கிறார். பிறகு அந்த மருத்துவ மனை சிறப்பாக செயல்பட ஆரம்பித்து நிறைய பேர் பயனடைகிறார்கள். அதே மருத்துவ மனையில் சிலர் சிகிச்சை பலனின்றி சிலர் மரணமும் எய்துகிறார்கள்.அது வேறு விஷயம். காலப் போக்கில் இந்த மருத்துவ மனை விரிவாக்கம் பெற்று இரண்டு மூன்று இடங்களில் கிளைகளையும் துவக்குகிறது. இப்போது முதல் முதலில் மருத்துவ மனை உருவாகும்போது அதில் ஒத்துழைத்த பொறியாளர், மேஸ்திரி, சித்தாள் முதலியோர் "எங்களுடைய உதவி இல்லாமல் நீங்கள் எப்படி மருத்துவ மனை ஆரம்பித்திருக்க இயலுமா? எனவே உங்கள் லாபத்தில் எங்களுக்கும் பங்கு தர வேண்டும்" எனக் கேட்டால் எப்படியிருக்கும்? அந்த செல்வந்தர் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதே மருத்துவ மனையில் அந்தப் பொறியாளர் வேலை செய்து கொண்டிருந்தால், மாத சம்பளம் வேண்டுமானால் கொடுக்கலாம். அவரோ தொழில் தெரிந்தவர் திறமைசாலி வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற இடங்களில் பணி புரிந்து கொண்டிருப்பவர். உங்கள் பதில் என்னவாக இருக்கும்?   12:49:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2018
உலகம் சபாஷ்! பாஸ்போர்ட் பெறுவது இனி எளிதாகிறது 543 தொகுதிகளிலும் சேவை மையங்கள்
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இது போன்ற செய்தியை அறிய‌ மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. 1960களில் பாஸ்போர்ட் வைத்திருந்திருந்தவர்களின் தோரணையை இப்போதுள்ள தலைமுறை யுவர்களும், யுவதிகளும் அறிய வாய்ப்பில்லை. மிகுந்த கர்வத்துடன் இருப்பார்கள். எங்கே, எப்படி யாரை அணுகவேண்டும் அதற்கு என்னவெல்லாம் தேவையென்று கேட்டால் நமக்கு மிக நெருங்கிய உறவினர்கள் கூட சரியாகப் பதில் சொல்லாமல் மேலே பார்த்தபடி பேசுவார்கள். யான் அறிந்தவரை வாஜ்பாய் அவர்கள் பிரதம மந்திரியாக ஆன பிறகுதான் பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்று ஆயிற்று. 1970ல் இதன் விண்ணப்பக் கட்டணம் 25ரூபாய் என நினைக்கிறேன்.கிட்டத்தட்ட 12 பக்கள் இருக்கும்.தேவையில்லாத கேள்விகளையும், கேட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் வேறு பகுதியில் வேறு விதமாகக் கேட்டும் இம்சைப் படுத்துவார்கள். இவை யாவற்றையும் ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல் ஆங்கிலத்தில் கறுப்பு அல்லது நீலநிற மசி கொண்ட பேனாவில்தான் எழுத வேண்டும் என்பார்கள். பெயரிலோ, பிறந்த ஊர், நகரம்,மாவட்டம், மாநிலம் பெயர்களில் எழுத்துப் பிழை ஏற்பட்டால் கூட திருப்பிக் கொடுத்து விடுவார்கள். உங்கள் தொகுதி எம்.பி. அல்லது மத்திய சர்க்காரில் பணி புரியும் 'கெஸட்டட்' ஆஃபிஸர் கையெழுத்து வாங்கினால்தான் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்கள். அப்போது போலீஸ் வெரிஃபிகேஷன் முதலியன‌ புகுத்தப் படவில்லை. பின்னர்தான் வந்தது. உங்கள் இருப்பிடச் சான்று, பிறந்த தேதி சான்றிதழ், கல்வித் தகுதி பற்றிய அனைத்து ஆவணங்களையும் 'காப்பி ' எடுக்க வேண்டும். அப்போதெல்லாம் 'போட்டோ காப்பி' இயந்திரங்கள் உபயோகத்திற்கு வரவில்லை. உங்களுக்குத் தெரியும் எனில் நீங்களே அவற்றை அச்சுப் பிசகாமல் 'டைப்'அடித்து மறுபடியும் 'கெஸட்டட்" ஆஃபிஸரின் கையெழுத்தை ஒவ்வொரு பக்கத்திலும் வாங்க வேண்டும். 1970கள் வரையில் இதற்காக அவர்கள் 'லஞ்சம்' கேட்டதில்லை. ஆனால், ஒரு சில அதிகாரிகள் 'சிடு சிடுப்பார்கள்' மாலை 3.00 மணிக்கு மேல்தான் இத்தகைய உதவிகளை செய்து தர முன் தருவார்கள். உங்களுக்கு ஒரு நாள் வீணாகியிருக்கும். இவற்றையெல்லாம் ஒருபாடாக முடித்துக் கொண்டு நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றால் ஒரு பெரிய நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் 'கவுன்ட்டர்' முன் நின்று கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் விண்ணப்பத்தையும் அங்கேயே சரி பார்த்து 'டோக்கன்' தருவார்கள் அல்லது திருப்பி அனுப்பி விடுவார்கள். இந்த இடத்திலும் உங்களுக்கு ஒரு நாள் நிச்சயம் வீணாகும். 'டோக்கன்' பெற்றவர்கள் வேறு ஒரு இடத்தில் பணம் கட்ட வேண்டும் (50/= ரூபாய் மட்டுமே, அப்போது).அங்கும் ஒரு பெரிய வரிசை இருக்கும்.எனக்கு இதுபோல 1970ல் முதல் முதலாக 'பாஸ்போர்ட்' எடுக்க எனது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் உதவினார். அப்போது அவர் பம்பாயில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்து கொண்டு இருந்தார். நான் தப்பும் தவறுமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விடுவேன் எனக் கருதியே அவரே தனது அழகான கையெழுத்தில் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார். கையெழுத்திட்டது மட்டும் நான் தான். ஒரு தட்டச்சு அலுவலகத்தில், அனைத்து சர்ட்டிபிகேட்டுகளின் நகலும் தயாரிக்கப் பட்டு, எனது உறவினர் அவரது மேலதிகாரியின் கையெழுத்துப் பெற்று அனைத்தும் முடிந்த பிறகு, பம்பாயில் உள்ள அந்த அலுவலகத்திற்கு என்னைக் கூட்டி சென்று வரிசையில் நிற்க வைத்து விட்டு, 'இனிமேல் மகனே உன் சமர்த்து' என்று கூறி தனது அலுவலகத்திற்கு சென்று விட்டார்.பாஷை புரியாத/தெரியாத‌ அந்த ஊரில், டோக்கன் நெம்பரையும், பணம் செலுத்திய ரசீதையும் வைத்துக் கொண்டு தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை கிட்டத்தட்ட ஒரு மாதம் உட்கார்ந்திருந்த‌ அனுபவம் எனக்கு உண்டு. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அங்கிருந்த ஒரு அதிகாரி, மராட்டிக்காரர், என்னிடம் விசாரித்தார். ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ முழுவதுமாக என்னால் பேச இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, என்ன ஆச்சரியம் அவர் என்னிடம் தமிழில் பேசினார் அவரிடம் எனது டோக்கன் நம்பரையும், ரசீதையும் காட்டவே சுமார் 3 நாள் கழித்து வரும்படிக் கூறியனுப்பினார். எனக்கு அப்போதே 'பாஸ்போர்ட்' கிடைத்துவிட்ட‌ சந்தோஷம். ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, 'அரோரா' தியேட்டரில் ஒரு படம் பார்த்து விட்டுத்தான் 'ரூம்' திரும்பினேன். அந்த மனிதர் சொன்னபடியே அடுத்த 3ம் நாள் காலை 10.30 மணிக்கு நான் சென்று பார்த்தபோது எனது 'பாஸ்போர்ட்'டைத் தயாராக எடுத்து வைத்திருந்தார். அவரிடம் இருந்த 'ரெஜிஸ்டரில்' கையெழுத்திட்டு விட்டு மிக்க மகிழ்ச்சியுடன் எனது முதல் 'பாஸ்போர்ட்'டை நானே பெற்றுக் கொண்டேன். அவரிடம் காலில் விழாத குறையாக நன்றி தெரிவித்ததுடன் அவரிடம் 'எப்படி இவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறீர்கள்?' என்று கேட்டேன். தன‌து மூதாதையர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார். எனக்கு மராட்டிய சரபோஜி மன்னர்கள் ஞாபகம் வந்தது. மிக உற்சாகத்துடன் வெளியில் வந்து ஹோட்டலுக்கு வந்து ஒரு காபி ஆர்டர் செய்து விட்டு, எனது 'பாஸ்போர்ட்'டை ஆதுரத்துடன் தூளியிலிருந்து குழந்தையை எடுப்பதுபோல் என‌ பையிலிருந்து எடுத்துப் பிரித்து ஒவ்வொரு அங்குலமாகக் கவனிக்க‌ ஆரம்பித்தேன். எனது பிறந்த வருடம் '1953' எனத் தவறாக எழுதப் பட்டிருந்தது. காற்று வெளியேறின பலூன் போல எனது முகம் சுருங்கி விட்டது. காபியைக் குடித்து விட்டு, டாக்ஸி பிடித்து (வி.டி. யிலிருந்து அப்போது 1 ரூபாய் தான்) மறுபடியும் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று அதே மராட்டிய அதிகாரியைப் பார்த்து பாஸ்போர்ட்டில் தவறு நேர்ந்திருப்பதை சுட்டிக் காட்டவே அவர் மறுநாள் காலை எனது ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டுகளுடன் வந்து சந்திக்கச் சொன்னார். எனக்குக் கவலை அதிகரித்து விட்டது. 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமோ' என்கிற‌ கிலி ஏற்பட்டு விட்டது. மறுநாள் பதை பதைப்புடன், எனது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் 'பாஸ்போர்ட்' அலுவலகம் சென்றேன். அந்த மராட்டிய அதிகாரி, பூர்த்தி செய்திருந்த எனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை வரவழைத்திருந்தார். அதில் எனது பிறந்த வருடம் '1951'க்குப் பதிலாக '1953' எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனது பள்ளி சான்றிதழில் '1951' என்றுதான் உள்ளது. செய்த தவறை நான் ஒப்புக் கொண்டேன். அவர் உடனே இதை சரி செய்யவேண்டி மற்றொரு விண்ணப்பாரம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார் (இதன் விலை அப்போது 1 ரூபாய் மட்டுமே). பிறகு அவரே அவரது அதிகாரியிடம் காண்பித்து உரிய வகையில் திருத்தி கையெழுத்து வாங்கி 'சீல்' போட்டு கொடுத்தார். எனது நெருங்கிய உறவினரிடம் 'பாஸ்போர்ட் அலுவலகத்தில்' பிறந்த வருடத்தைத் தவறுதலாக எழுதி விட்டார்கள் எனவே கிடைப்பதற்குக் கொஞ்சம் தாமதமாகி விட்டது என நம்பும்படியான ஒரு 'உண்மை'யை நான் சொல்ல வேண்டியதாயிற்று. சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்க‌ வேண்டி அதே 'பாஸ்போர்ட்' அலுவலகம் சென்றிருந்தபோது அந்த‌ மராட்டிய அதிகாரி மாற்றலாகிப் போயிருந்தார்.   12:53:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
6
2018
பொது தலை தீபாவளி- சிறுகதை
காதலையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் இதை விட எவரும் கொச்சைப் படுத்தியிருக்க முடியாது. வித்யாசமாக சிந்திக்க வேண்டும் இரண்டு பக்கத்திற்குள் 'பாப் கார்ன்' கதையைச் சொல்ல வேண்டும் எனும் நோக்கில் எதை வேண்டுமானாலும் கதையாக எழுத‌ முடியும் என்றால் இப்படிப் பட்ட கதைகளைத்தான் படைப்பாளிகள் உருவாக்குவார்கள். இளைஞர்கள் அதீத கற்பனை உணர்ச்சிக்கு அடிமையாகிறார்கள் என்றால் இது போன்ற கதைகளைப் படிப்பதால்தான்.   07:04:18 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2018
சினிமா இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தந்த சிவகுமார்...
தான் செய்த தவறை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு புது செல்ஃபோனை அந்த இளைஞருக்கு திரு. சிவகுமார் அவர்கள் வழங்கியதை நேரிடையாகவே செய்திருக்கலாம் . செல்ஃபோனைத் தட்டிவிடுவது ஒரு பிரபலம் பிராயச்சித்தம் செய்வது யாரோ ஒரு மூன்றாம் மனிதர் மூலமாகவா?   10:38:57 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X