visweswaran a. subramanyam : கருத்துக்கள் ( 13 )
visweswaran a. subramanyam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
12
2021
சிறப்பு கட்டுரைகள் என் இனிய தமிழ் மக்களே!
இவ்வாறெல்லாம் எழுதும் ஸ்டாலின் சவுந்தரபாண்டியன்களுக்கு நம் வள்ளுவன் சொல்லி விட்டுப் போன, 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு', மற்றும் 'எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு' போன்ற குறள்கள் கூட பயன் அளிக்காமல் போய் விட்டடதே, என்னருமைத் தமிழ்த் தாயே....   05:24:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
12
2021
சிறப்பு கட்டுரைகள் என் இனிய தமிழ் மக்களே!
அரசியல்வாதிகளால் திசை திருப்பப் பட்ட இது போன்ற சிந்தனைகளும் பேச்சுகளும் தான் நமது தெளிவையும், முன்னேற்றத்தையும் கெடுத்தன. இந்தக் கட்டுரையே அது பற்றிதான் பேசுகிறது. பேதைகள் எப்போது புரிந்து கொள்வார்கள், தமிழ் அன்னையே? சலுகைகளும், இட ஒதுக்கீடுகளும், தேர்வு நீக்கங்களும்தான் தங்களை நிலை நிறுத்துமென தவறான புரிதலில் மயங்கி போய் இருக்கும் இந்த இளங்கோக்கள் போன்ற இன்றைய தமிழ் மக்களை யார் கை தூக்கி விடுவார்கள், தமிழ் அன்னையே? இந்த இளங்கோக்கள் அந்த இளங்கோ அடிகள் போல் சிறப்பாகச் சிந்தித்துமற்றவர்களையும் வழி நடத்துவது எப்போது நிகழும் தமிழ் அன்னையே?....   01:22:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2021
வாரமலர் இது உங்கள் இடம்!
தூத்துக்குடி சகோதரர் மு. சம்சுதீன் புஹாரியின் நண்பரின் மகத்தான அரும் தொண்டு நெகிழச் செய்கிறது.....   10:21:33 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூன்
18
2021
உலகம் அமெரிக்க பல்கலைக்கு தலைவராகும் தமிழர்
சிறந்த அறிஞர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் தமிழகத்திற்கு இல்லாமல் போவது குறித்து வருந்துகிறோம். அத்தகைய அறிஞர்களைக் கொண்டு இன்னும் பற்பல அறிஞர்களை உருவாக்கும் லாவகத்தை நாம் உணராமல் இருப்பதை கால்ம் நமக்கு உணர்த்தும். நிற்க. கடந்த ஏழெட்டு பத்தாண்டு (7 to 8 Decades) தமிழகத்தில் படித்து வெளிவந்து கொண்டிருக்கும் மக்களில் 98 சதவீதத்தினரின் ழகர உச்சரிப்புகள் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவிற்கு இருக்கிறனவே... ளகர மற்றும் ழகர உச்சரிப்புகளைக்கூட தமிழில் சரியாக செய்யத் தெரியாதவர்களையும் கற்றுக் கொடுக்க இயலாதவர்களையும் தமிழ் கற்றுத்தரும் பொறுப்பேற்கச் செய்து தமிழ் மொழியின் சிறப்பையும் அழகையும் இனிமையையும் கெடுப்பதா தமிழன்னைக்கு நாம் செய்யும் ஆராதனை?.... சிந்திப்போமா?... சிந்திப்போமாக.... கல்வியாளர் அறிஞர் ராஜகோபால் அவர்களைப் பற்றிய இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலருக்கு நன்றிகள்   07:31:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
17
2021
சிறப்பு பகுதிகள் மன்னியுங்கள் வாஞ்சிநாதன்
110 ஆண்டுகளுக்கு முன்னர்... 17 ஜூன் 1911 என்பது தமிழ் நாட்காட்டி படி ஆனி மாதம் தேய் பிறை 5-ஆம் நாள். அந்த தினம் இந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று வருகிறது. நாம் ஏன் இந்த ஆங்கில நாட்காட்டியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இன்னும் ஆடிக் கொண்டு இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆங்கில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசிய வாதிகளின் சிறப்பு மற்றும் நினைவு தினங்களையாவது தமிழ்/பாரத நாட்காட்டியின் படி அனுசரிக்கலாமே.... சிந்திப்போமாக. பாரத மாதாவிற்கு ஜெய்   07:49:38 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
17
2021
சிறப்பு பகுதிகள் மன்னியுங்கள் வாஞ்சிநாதன்
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்குச் சொல்லித்தந்த வள்ளுவன் பிறந்த இந்த வான் புகழ் கண்ட தமிழ் நாட்டில் பிறந்த நமக்கெல்லாம் இந்த மாவீரன் வாஞ்சிநாதன் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் போனதற்குக் காரணம், தமிழக ஆட்சியாளர்களும் அவர்கள் வகுக்கும் இன உணர்வை மட்டும் தூண்டுகிற, தேசிய ஒருமைப்பாடு பற்றி அதிகம் பேசாத 'செய் நன்றியுள்ள' பாடத்திட்டங்களும் என்றால் மிகையாகுமா..... எவர் மனதையும் நெகிழச் செய்யும் தனது இந்தக் கட்டுரையின் மூலம் அடியேனைப் போன்ற தேச பற்று கொண்ட பலருடைய மனங்களிலும் அந்த மாவீரனை இந்த நாளில் கொண்டு நிறுத்திய கட்டுரைக் கர்த்தா சகோ. இல. முருகராஜ் அவர்களுக்கு நன்றிகள் பல... வாஞ்சி நாதனின் ஆத்மாவிற்கும், அவரது துணைவியாரின் ஆத்மாவிற்கும் ஆழ்ந்த அஞ்சலிகள் உரித்தாகுக... - பல தேசப் பற்றாளர்களின் சார்பில் ஓர் நன்றியுள்ள ஜீவன்...   07:02:18 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூன்
15
2021
பொது பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி கான்வென்டை விட்டு வெளியேற்றிய திருச்சபை
'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' - மஹாகவி பாரதியார்   03:19:09 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
8
2021
பொது ஒரு ஓட்டுச்சாவடியும், மிரள வைத்த கூட்டமும்
தன்னொழுக்கமும், சுயக்கட்டுப்பாடும், கண்ணியமும் அற்ற 'கடமை' மிக்க மக்கள், ஊடகவியலாளர்கள்.... [ இதைப்போன்ற நிகழ்வுகளையெல்லாம் அமெரிக்கா மற்றும் கானடா போன்ற நாடுகளில் காணவே இயலாது, தேர்தல் நடக்கும் நாளன்று ]   00:05:04 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
26
2020
சிறப்பு கட்டுரைகள் சூரப்பாவை போற்றுவோம்!
எந்த நபரையாது - தலைவரையாவது, அதிகாரியையாவது - கழகங்களுக்கு பிடிக்க வில்லையென்றால், கண்ணை மூடிக் கொண்டு, எளிதாக முடிவு செய்யலாம், அந்த நபர் நேர்மையானவர் என்று எந்தத் சட்டம் அல்லது திட்டமாவது கழகங்களுக்கு பிடிக்க வில்லையென்றால், கண்ணை மூடிக் கொண்டு, எளிதாக முடிவு செய்யலாம், அந்த சட்டம் அல்லது திட்டம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று எந்த விடயமாவது கழகங்களுக்கு பிடிக்க வில்லையென்றால், கண்ணை மூடிக் கொண்டு, எளிதாக முடிவு செய்யலாம், அந்த விடயம் நல்ல விடயம் என்று என்னருமை தமிழ் மக்களே இனி கழகங்கள் கூறுவதையும், செய்வதையும் உற்று நோக்குவோம் ஓர் தெளிவான முடிவுக்கு எளிதாக வருவோம் வாழ்க அவர்கள் தேசத் தொண்டு. கழகங்களைப் போற்றுவோம்   05:27:04 IST
Rate this:
1 members
0 members
14 members

நவம்பர்
11
2020
கோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
வணக்கம் இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையின் அதிகார துஷ்ப்ரயோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதைவிட, தமிழக ஊடகங்களின் செயல்பாடுகள் தமிழனுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்திவிட்டது. ஒரு ஆதாரமுமே இல்லாத, ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு மூடப்பட்ட ஒரு வழக்கை மாநில ஆளும் கட்சியும் அதன் கூட்டு கட்சிகளும் அதன் அரசாங்கமும் தனது அரசியல் காழ்ப்பினையும், வெறுப்பினையும், பலத்தையும் காண்பிக்கும் வகையில் காவல் துறைக்கு மாநில முதலமைச்சரின் தலையீட்டின் மூலம் அரசியல் அழுத்தம் தந்ததன் பேரில் வெறும் புகார் அடிப்படையில் தாங்கள் முன்பு செய்த பல விசாரணைகளில் எந்த வித சந்தேகமோ, அல்லது ஆதாரமோ கிடைக்காத போதும் கூட சம்மந்தப்பட்ட ஒரு நபரை அராஜகமாகவும் தடாலடியாகவும் காவல் துறை கைது செய்த விதம் அவர்கள் மீது பொதுமக்களுக்கு உள்ள பொதுவான ஓர் எண்ணத்தை மீண்டும் சீர்குலைப்பதாக அமைந்தது. மேலும் தனிமனிதனின் பேச்சுரிமையை அடக்கும் விதமாக செயல் பட்டது காவல் துறையின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எவ்வளவோ அறமற்ற செயல்கள் அரசு தரப்பிலும் காவல் துறை தரப்பிலும் நடந்திருந்தும் கூட எந்த ஒரு தமிழ்நாட்டு செய்தி ஊடகமும் செய்தியை முழுமையாகக் கொண்டு சேர்க்காமலும், மனசாட்சியுடன் நடந்து கொள்ளாமல் அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பியும் இருந்து வந்தமைக்காக, மனு நீதிச் சோழன் உட்பட நீதி நெறி வழுவாத தமிழ் இனத்தில் வரும் எந்த ஒரு தமிழனையும் இந்தத் தமிழ்நாட்டு செய்தி ஊடகங்கள் ஒரு பெருத்த தலை குனிவை ஏற்படுத்துகிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இதைப் படிப்பதில் நேரம் செலவிட்ட உங்களுக்கு நன்றி வணக்கம்   04:43:22 IST
Rate this:
1 members
0 members
22 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X