சொரிமுத்து : கருத்துக்கள் ( 490 )
சொரிமுத்து
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2022
அரசியல் ராஜாவை டிபாசிட் வாங்க விடமாட்டோம்!
// தமிழ்நாட்டில் மக்கள் வரிப்பணம் அரசியல் வியாதிகளால் கொள்ளை அடிக்கப்படுகிறதே// இங்க இருக்கறவிங்களைக் கேக்க வக்கில்லை... அதுக்குள்ள, தில்லி, அமெரிக்கா, சந்திர மண்டலம், சூரிய மண்டலம்... (ஆஹ்ஹ்ஹ்.. தப்பு... தப்பு.. சூரியன், சன்.... தேஜா.. இதெல்லாம் நாம உச்சரிக்கக்கூடாதில்ல? மன்ச்சிக்கபா..) இங்கல்லாம் எதுக்கு ஓடுறது? ஆட்டயப்போடுறவய்ங்க இங்கதான் இருக்கான்னு தெரியுதில்ல? அதை எதிர்த்துக் கேளுங்கய்யா முதல்ல. அப்புறம் போலாம் ......   17:52:21 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
17
2022
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
17
2022
பொது பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கிறார் மத்திய அமைச்சர் முருகன் புகழாரம்
//இது எங்கள் ஆட்சி எங்கள் விருப்பப்படி தான் இருக்கும் பிடிக்காதவர்கள் பிடித்த ஊருக்கு செல்லலாம்...// இதே வாதத்தின்படி, பக்கத்துல உள்ள சில நாடுகள்ள ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து, நீங்களும் அப்புடியே குடும்பத்தோட போயி நிரந்தரமாஆகிடுங்க உண்மையான இந்தியர்கள் நிம்மதியா இருப்போம்.   17:44:04 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
17
2022
பொது பயங்கரவாதி பட்டியலில் மும்பை தாக்குதல் குற்றவாளி இந்திய முயற்சிக்கு சீனா தொடர் முட்டுக்கட்டை
1950-களில் இந்தியாவிற்கு பல உலக நாடுகளின் சம்மதத்துடன், குறிப்பாய் அமெரிக்காவின் பக்கபலத்தால், அன்று விருப்பமாய்க் கொடுக்கப்பட்ட வீட்டோ அதிகாரத்துடன் கூடிய ஐ.நா. சபை உறுப்பினர் பதவியை சீனாவுக்கு தாரை வார்த்த அன்றைய ஒன்றியப் பிரதமர் சாச்சா நேரு வாழ்க. ... இவிங்களுக்கு வேற என்ன தெரியும்? உண்மையைச் சொல்றவனுக்கு பேர் சங்கின்னா, நல்லா சொல்லிக்குங்கய்யா... உண்மை இன்னும் உரக்கவே சொல்லப்படும் - மீண்டும் மீண்டும்).   17:34:36 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
27
2022
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2022
அரசியல் ஒன்றிய அரசு, இண்டியன் யூனியன், திராவிட மாடல் மோடி முன்பு பேசிய ஸ்டாலின்
அதை ரெண்டு ரூபா குடுத்து இந்தக் கேள்வியைக் கேக்கச் சொன்னாங்களே, அவங்களையே கேளுங்களேன். ஆனா, அவங்களுக்கும் தெரியுமோ என்னவோ? அவங்களும் இதே மாதிரி 'ரெண்டு ரூவா'வா இருந்தா கடினம்தான்.   01:42:20 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2022
அரசியல் உருது மொழியை தடை செய்வோம் தெலுங்கானா பா.ஜ., தலைவர் சர்ச்சை
//ஆங்கிலம் உங்க நாடு மொழியா அய்யா...// அட.. அதனாலதான் இங்கேயே தோன்றி, இன்றும் ஜனநாயக பூமியான இந்தியாவில் பெரும்பான்மையோர் பேசும் மொழியான ஹிந்தியை இணைப்பு மொழியாகப் பயன்படுத்தவேண்டும்னு ப.சிதம்பரம் முதல் அமித் ஷா வரை 'ஹிந்தி தினம்' கொண்டாடும்போது சொல்லிக்கிட்டிருக்காங்க. ஒரு மொழியைப் படிங்கன்னாலே 'ஆஹா.. திணிப்பு.. திணிப்பு'ன்னு கத்திகிட்டே ஓடுனா என்ன செய்ய? வெளிநாட்டு மொழி, அந்நிய மொழி, அதுவும் நம்மை அடிமைப்படுத்தி, கொள்ளையடித்துச்சென்றவர்களின் மொழி மட்டும் இனிக்கிறதோ? அப்போ மட்டும் ஆங்கிலம் வேணும், தமிழும் ஆங்கிலமும் மட்டும் போதும்னு கோஷம் போட்டது யாருங்கய்யா?   01:17:10 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
20
2022
சினிமா ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர்ஜே பாலாஜி...
அப்போ ரஜினி படங்கள்ல கதாசிரியர், வசனகர்த்தா, கேமிராமேன், டைரக்டர், என்று யாருமே இல்லாம, ரஜினி மட்டுமே எல்லா வேலைகளையும் பார்த்தாருன்னு சொல்ல வர்றாரா? ரஜினி ஒரு நடிகர், Director's Delight. ஒரு கதை ஓகே ஆனால், அதில் ஒவ்வொரு எழுத்தையும் அவர் பார்த்து ஓகே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இதை எல்லாம் மீறி, மன்னன் போன்ற வெற்றிப் படங்கள் வந்த காலகட்டத்திலேயே, ஏன், அதற்கும் முன்னர் இரு தசாப்தங்களுக்கு முன்னரே கே.பாலச்சந்தர் போன்றோர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களைப் படைக்கவில்லையா? அதைப் பாராட்டும் மனநிலை இவர் போன்றவர்களுக்கு என்றாவது இருந்ததுண்டா? (மன்னன் கண்ணுக்குத் தெரிஞ்ச இவருக்கு, சின்னத்தம்பி தெரியாதது ஆச்சர்யமே. ஒருவேளை அதுபோன்ற படங்கள் ஆஸ்கார் விருதுபெறும் அளவுக்குத் தகுதியுடையது என்று நினைத்ததால் சொல்லாமல் விட்டுட்டாரோ?). வெற்றுக் கைத்தட்டல்களுக்காக எங்கயாவது யாரையாவது, உழைப்பால் உயர்ந்தவர்கள் மீது சேற்றைவாரிப் பூசவேண்டும், அதனால் பிரபலமடைய வேண்டும், ஆதாயம் அடைய வேண்டும் என்கிற எண்ணம் சரியானதா? இதில், இவர் ஒரு படத்தை வேறு தயாரித்திருக்கிறாராம். என்னவோ போங்க.   02:50:41 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
20
2022
பொது மொழியை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சி பிரதமர்
250 ஆண்டுகள் நம்மை அடிமையாக்கி, நமது சொத்துக்களை கொள்ளையடித்தவனின் மொழி நமக்கு இனிக்கும். இங்கேயே உதித்து, பெரும்பான்மையோர் பேசும் ஒரு மொழியை விருப்பப்பாடமாக வைத்துக்கொள்ள, விரும்புவோர் மட்டும் கற்கக் கசக்கிறதோ? உடனே 'தமிழ்.. தமிழ்'ன்னு கூவிப்பயனில்லை. ஜனநாயகம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலானது. ஹிந்தி இன்று சுமார் 43% முதல் 46% மக்களால் இந்தியாவில் பேசப்படுகிறது. மற்றவை எல்லாம் சேர்த்து 54% முதல் 57%. அதில் எந்த மொழியும் ஹிந்தி பேசுவோரின் சதவிகிதத்தில் பாதி கூட இல்லை என்பதுதான் நிதர்சனம். ஹிந்திக்கு அடுத்தபடி இந்திய மொழிகளில் பெங்காலி சுமார் 8.1% மக்களால் பேசப்படுகிறது. அடுத்து மராத்தி 7%, தெலுங்கு 6.7%, தமிழ் 5.7%. ஆங்கிலம் 12%-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அறிந்துள்ளார்கள். இதெல்லாம் தெரியாமல் சும்மா பிராந்திய மொழிகளில் எதாவது ஒன்றை தேசிய மொழியாக்குவோம் என்று சவுண்ட் விடுவதில் சாரமில்லை. ஹிந்தி படிப்பது நமக்கு கடினம்தான். ஆனால், அதை தமிழை ஒதுக்கிவைத்துவிட்டு யார் படிக்கச் சொன்னார்கள்? ஹிந்தித் திணிப்பு என்றால் அதை எதிர்ப்பது நியாயம். ஹிந்தி என்ன, தமிழ்த் திணிப்பு, தெலுங்குத் திணிப்பு, பெங்காலித் திணிப்பு, ஆங்கிலத் திணிப்பு என்று எந்த மொழியுமே திணிக்கப்பட்டால், அது எதிர்க்கப்படவேண்டும். ஆனால், நமக்கு இரு தலைமுறைக்கு முன்னர் சாதாரணமாக ஒரு வீட்டில் எல்லோரும் குறைந்தது நான்கு முதல் ஐந்து மொழிகள் கற்றபோது தமிழ் இருந்த வளம் இன்று இருக்கிறதா என்று உளமாரச் சொல்வீர். மற்ற மொழிகளைக் கற்பதால் தமிழ் தேய்ந்ததா, வளர்ந்ததா? 'அவனுக்குத் தேவைன்னா கத்துக்குறான்'ன்னா, ஆங்கிலத்தை அது மாதிரி கத்துக்கவேண்டியதுதானே? திடீர்னு காத்துக்கிட்டா கடினமா ஆங்கிலம் மட்டும்தான் இருக்குமா என்ன? எந்த மொழிக்கும் பொருந்தும் வாக்கியமல்லவா அது? அப்படியென்றால், என் மாநிலத்தைவிட்டு அண்டை மாநிலத்தில் பிழைக்கப்போனால், அட.. இட்டிலி தோசையே விற்கப்போனாலும் (அதை நம்மில் பலர் அங்கு செய்துகொண்டுதான் உள்ளனர் ஏதோ ஹிந்தி பேசுவோர் எல்லாம் மட்டும் பானிபூரி விற்க தமிழகம் வருகிற மாதிரி பில்டப் கொடுப்பது கொடுமையான நகைச்சுவை), திடீரென்று ஹிந்தி தெரியவேண்டுமென்றால் எப்படி நடக்கும் ? கடவுள் யாராகிலும் வந்து நாக்கில் எழுதி திடீர் ஞானோதயம் வருமோ? அதற்கும் இந்தத் திராவிடத் திருநாட்டில் வழியில்லையே. அதுதான் ஹிந்துக் கடவுள்கள் மட்டுமே இல்லையென்று சொல்லித்திரிந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டதே? ஆக, குண்டுசட்டிக்குள்ளேயே நாம் பிழைப்பு நடத்துவது யாருக்கோ வசதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாவண்ணம் இங்கு மொழியை அரசியலாக்கும் பலபடி வலை பலமாக பல தசாப்தங்களாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த மாயையைப் புரிந்துகொள்ளத் தேவை 'பயணம்'. இந்தியா முழுவதும் ஒரு முறையாவது பயணம் செய்தால் மனம் விசாலமடையும். குறைந்தபட்சம், ஆந்திரா, கர்நாடகா தாண்டி வேறு இரு மாநிலங்களுக்குப் பயணம் செய்துவந்தால் உண்மை புலனாகும். மனம் விசாலமடையத்தான் அன்றே காசி, ராமேஸ்வரம், கயா என்று புனிதப்பயணம் போனார்கள். இன்றைய இறுக்கமான வாழ்க்கையில் அதையும் தொலைத்துவிட்டோம். அதெல்லாம் 70 வயதுக்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனோபாவம் வளர்ந்துவிட்டது. கல்வியை பெரும் செலவு செய்து தேடும் நாம், அதில் ஒன்றான மொழிவளத்தை இரு மொழிகளுள் மட்டும் சுருக்க நினைப்பது அறிவுக்குறைவல்லவா? 'எட்டுத்திக்கும் செல்வீர் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதிக்கு எட்டு மொழிகள் நன்கு தெரியும். வெறும் இரு மொழிகளை மட்டும் வைத்துக்கொண்டு எட்டுத்திக்கும் சென்று எப்படி கலைச்செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்பது? யோசிப்போம். எம்மொழியையும் கற்பதற்கான மனத்தடையை விலக்குவோம்.   02:28:46 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2022
பொது மொழியை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சி பிரதமர்
சும்மா இந்த உருட்டை எத்தனை நாட்களுக்குத்தான் உருட்டுவீர்கள்? ஆமா..? திராவிடத் தலைவர்கள் பலரும்சுதந்திரம் வாங்குவதற்கு பல வருடங்கள் முன்னே பிறந்தவர்கள்தானே? சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கு என்ன என்பதை விளக்குவீரா? உடனே வ.உ.சி., பாரதி என்று திசைதிருப்ப வேண்டாம். அவர்கள் எல்லோரும் பழுத்த தேசியவாதிகள். கேள்வி, இன்று ஜனசங்கத்தைக் கேள்வி கேட்கும் போலி மதச்சார்பின்மை பேசும் திராவிடர்கள், அதன் முந்தை தலைமுறைத் தலைவர்கள் தேச விடுதலைக்காக ஆக்கபூர்வமாக என்ன பங்காற்றினார்கள் என்று கூறுவார்களா? (:ஆஹா.. வரலாறுங்கற பேருல எத்தனையோ கதைகளை எழுதினோமேய்யா? இப்புடி ஒண்ணை கவனிக்காம விட்டுட்டோமேய்யா.. இதுக்காகப் புதுசா மொதல்ல இருந்து உருட்டணும் போலயே? இவ்வளவு வேலை செஞ்சும் மண்டைமேல இருந்த கொண்டையை மறந்துட்டோமே?-ன்னு இப்போ யோசிச்சி பயனில்லை. ஏன்னா, அப்புடி ஏதாவது இருந்திருந்தா, இந்நேரம் அதை விளம்பரப்படுத்திக்கவும், பாடப்புத்தகங்களில் சேர்த்து படிக்கவைக்கவும் இந்த அறுபது ஆண்டுகளில் தவறி இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். சட்டியில் இல்லைன்னு எல்லோருக்கும் தெரியும். நீங்க எப்புடி ஆப்பையில் கொண்டுவர்றீங்கன்னு பார்ப்போம்).   02:01:43 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X