JAIRAJ : கருத்துக்கள் ( 545 )
JAIRAJ
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2016
அரசியல் லாலுவின் அண்ணியா ஹேமமாலினி?
நாக்கில் எலும்பில்லை என்று சொல்பவர்கள் இவர்கள் பேச்சை கேட்டால் போதும்.   20:18:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2016
கோர்ட் 40 மில்லியன் டாலர் என்ன ஆனது? மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
சாதாரண ஆட்கள் என்றால் மண்டையில் தட்டி அலற வைப்பார்கள். ஆனால், இங்கு இது தலைகீழ் விதி. இவனிடம் வேலை செய்தவர்கள் அனைவருக்குமே பாவம் ஒட்டிக் கொள்ளும். இன்று ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்வதற்கே பயமாகவுள்ளது. யார் எந்தவிதத்தில் எப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. யாரிடம் சுருட்டி கம்பனியை ஆரம்பித்தான் என்பதும் தெரியாது. சாதாரணமாக சில கம்பெனிகளில் ACTUAL EXPENSES என்ற நிலையிலும், சில கம்பெனிகளில் CONSOLIDATED என்று நிலையிலும், வெளியூர் சென்றுவர சிலவுக்குக் கொடுப்பர்கள். ஒரு ஓவியர் உண்டு. அவர் வரைந்தால் எல்லாமே தத்ரூபமாக இருக்கும் எல்லாமே சிற்பி செதுக்காத சிலையாகத்தான இருக்கும். அவர் கொடுத்த கணக்கோ ......2 அணா ...... சாப்பாட்டிற்கு ......... அணா ........... இவர் வீட்டில் தங்கியதாலும், சாப்பிட்டதாலும் இன்று சிலவு இல்லை ..........என்று கணக்கு எழுதி இருந்ததை படிக்க நேர்ந்தது. இவர் நேர்மையின் சிகரம். இது போன்று எல்லோருமே இருந்தால் நாட்டில் குழப்பம் ஏது ? இவரைப் போன்று அதீத நேர்மையாக இல்லாவிட்டாலும், கம்பெனி கொடுப்பதற்கு மேல் கைவைக்காமல் இருந்தாலே நேர்மைதான். ஆனால், மல்லையாவைப் போன்றவர்கள் தான் இன்று பணிபுரியும் ஆட்களுக்குத் தேவை. அவர்தானே அடுத்தவர் பணத்தை அள்ளித்தெளிப்பவர். " ஓடி விளையாடு பாப்பா......... நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா................." என்ற பாடல் இவருக்குப் பொருத்தம்.   18:57:37 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
25
2016
சம்பவம் அறை முழுவதும் வெள்ளிப்பொருட்கள் அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி
சொல்ல என்ன இருக்கிறது.................இவரைப் போன்றவர்களை காக்கவே ஆபத்பாந்தவனாக வரும் வக்கீல்கள் அவர்கள் வழியில் அள்ளி முடித்துக் கொள்வார்கள். பிடித்தவர் காட்டும் கணக்கெல்லாம் அவர்களுக்குள் ஒதுக்கிக் கொண்ட குறியீடு போல உள்ளது. இதெற்கெல்லாம் கணக்குள்ளது நான் இதை சட்டப்படி எதிர் கொள்வேன் என்பார்கள். எல்லாம் அரசியல் வாதிகள் காட்டிய வழிகள்தான். பா ஜ க மூத்த தலை ஒன்று அந்த வங்கியில் 5000 கோடி பணம் பதுக்கியுள்ளதாக முகநூல் செய்தி சொல்கிறது அடுத்த அவர் 15,000 கோடி என்கிறது. இது போல் இன்னும் பலர். இது ஓய்வில்லாத விளையாட்டு. அரபு நாட்டு சட்ட திட்டப்படி செய்தால் எல்லாமே ஒட்டுததுணிகூட இல்லாமல் வெளியேறிவிட வேண்டியது தான். இங்கு யாருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை. எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றுதான். இவரின் அண்டைவீட்டுக்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ( ஒருவேளை தைரியமாகக் கேட்டால். - தைரியம் என்பதற்கு காரணம். ஊழல் வாதி எப்பொழுதும் ரௌடியாக இருப்பதுதான். ) எங்கள் வீட்டுக் காரர் நேர்மையாக - நாணயமாக இருப்பதால் மேலே உள்ளவர்கள் சம்பாதிக்க முடிவது இல்லை. அதனால் அவர்களாகவே செட் அப் செய்து நாடகமாடுகிறார்கள் என்று சொல்லவா தெரியாது.? ஒரு சாதாரண அன்றாடம் காய்ச்சி, " என் வீட்டில் 50 பவுன் நகை திருடு போய்விட்டது ............" " என்னிடம் இருந்த 8 லட்ச ரூபாயை இன்டர்நெட் வியாபாரிகள் ஏமாற்றி விட்டார்கள் " என்று ஸ்டேட்மென்ட் கொடுக்கும் காலம் இது. கைநாட்டு கூட சரியாக வைக்கத் தெரியாதவன் ( சரியாக வைப்பதற்கு டெல்லி கணேஷைதான் கேட்கவேண்டும். அவர்தான் பட்டணப் ப்ரவேசத்தில் ( முதல் படம் ) அருமையாக நடித்து பல கைநாட்டு வைப்பார் ) பல லட்சங்களை ஈட்டும் பொழுது இவர் செய்ததில் என்ன தவறு என்று கேட்கத் தோன்றுகிறது.   18:40:33 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
23
2016
உலகம் டிரம்ப்பை விடாது துரத்தும் பாலியல் புகார்
ட்ரெம்ப் எங்கள் நாட்டிற்கு வந்தால் பாலியல் புகாரிலிருந்து எப்படி தப்பித்து ஜாலவித்தை காட்டலாம் என்று அவர்கள் சொல்லித் தருவார்கள்.   16:25:38 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
23
2016
உலகம் இந்து கோயிலில் தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள்
ட்ரம்ப் ............நீங்கள் இந்தியாவிற்கு மிகப் பொருத்தமான அரசியல் வாதி. இங்கு வந்து விடுங்கள். அதுவும் எங்கள் ஊருக்கு ................ அவரையே மிஞ்சிவிடலாம்.............எப்ப வரீங்க..................   09:09:46 IST
Rate this:
4 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
22
2016
சம்பவம் மணப்பெண் கிடைக்காமல் திண்டாடும் உயர்ந்த மனிதர்
இவரைப் போன்றே உயரமுள்ள பெண்ணை நெட்டில் பார்த்தோமே. அதுதவிர ஒரு குடும்பத்தில் அனைவருமே மிக உயரமாக இருப்பதாகவேறு படத்துடன் செய்தி வந்ததே. அதெல்லாம் இவர் கண்களில் படவில்லையா. அதிக உயரத்துடன் இருப்பதும் குதிக்க குள்ளமாக இருப்பதுமே வேதனைதான். சராசரி உயரம் 5. 6 அங்குலம் இருந்தால் அது சரியானது. தொட்டுக்கொள்ள சாம்பார் என்பதுபோன்று மேலும் இரண்டு அங்குலம் சேர்ந்தாலும் பரவா இல்லை. அதற்கு மேல் என்றால், அது புதியவகை ஆகும் இது என் கணக்கு. என் உயரம் எத்தனை தெரியுமா? அதை விடுங்கள். பழசி ராஜா என்று ஒரு படம் வந்ததே. அதில் வருபவர்களில் அநேகம் பேர் குறைந்தது ஆறு அடி உயரம் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் நான் நின்றால் 6 அங்குலம் குறைவாகத்தெரிவேன்.   09:07:49 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2016
பொது ஏழை பெண்களுக்கு சொத்து மறைந்த நடிகை பர்வீன் கெத்து
பிழைப்புக்காக எப்படி எப்படியோ நடித்தாலும் இந்த நல்ல மனது எல்லோருக்கும் வருமா என்பது கேள்வி. தாய்மாமன் என்று சொல்லப்படுபவர் முறையாக சரியான டாக்குமெண்டுடன் இருக்கையில், ஆரம்பகாலத்தில் எந்தவிதத்திலும் தொடர்புகொள்ளாத இந்த உறவுகள் செய்யும் அலம்பல்தான் அதிகம். இவர்கள் எல்லோருமே பர்வீன் பாபியின் பணத்திற்காக சிறப்பாக நடிப்பவர்கள்தான். புனிதமான காரியத்தை செய்த பர்வீனின் ஆத்மா மகிழ்ச்சியுடன் சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். தாய் மாமன் இந்த அறக்கட்டளையை சரியான முறையில் நடத்த இறைவன் அருள் புரிய வேண்டும்.   08:36:25 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
19
2016
சம்பவம் இது கள்ள நோட்டா இல்லை விளையாட்டா
எப்பொழுதும் ரூபாய் நோட்டை வாங்கியபின் முதலில் அதன் பின்புறம் வருடம் இருக்கிறதா என்றும், நம்பர் இருக்கிறதா அது ஒரே நம்பர்தானா என்றும் பார்த்து வங்குவதுடன் அதில் " RESERVE BANK OF INDIA " என்று எழுதி இருக்கிறதா அல்லது முன்பு ஏமாற்றியதுபோல், " RESERVE BABY OF INDIA " என்று எழுதி இருக்கிறதா என்றும் பார்த்து வாங்கவேண்டும். மற்றவர்கள் கேலிசெய்வதை பொருட்படுத்தவேண்டாம்.பணம் நம்முடையது. நாம் உழைத்து சம்பாதிப்பது என்ற எண்ணம் இருந்தால் போதும்.   08:27:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
19
2016
பொது மாஜி மந்திரி மகள் திருமணத்திற்கு எல்.சி.டி., திரையுடன் அழைப்பிதழ்
அடித்து சேர்த்த பணத்தை இப்படித்தான் சிலவு செய்யமுடியும். " சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்ன கண்ணு ..................அவுங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு..........." என்ற பாடலை எழுதியவர் வெட்கி தலை குணியும்படி செய்து விட்டார்கள்.   08:14:11 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
19
2016
சம்பவம் 400 கோடி ரூபாய் மோசடி பில்லியர்ட்ஸ் வீரர் கைது
இதற்கெல்லாம் மூலவித்து அந்த ஒரு ரூபாய் தான். 50 களின் கடைசீயில் இது ஆரம்பித்தது. 3 ரூபாய் கொடுத்து சேர்ந்தால் மூன்று சீட்டு கொடுப்பார்கள். அதை மூன்றுபேருக்கு விற்று விட்டால் 3 ரூபாய் கிடைக்கும். அத்துடன் சரி. அதை வாங்குபவர்கள் விற்க விற்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபாய் மணியார்டர் வரும். சமயத்தில் ஒரேநாளில் 10 பேர் கூட மணியார்டர் அனுப்பி இருப்பார்கள். காக்கி பாண்ட் சட்டை, தலையில் சிகப்பு பார்டருடன் கூடிய தொப்பி அணிந்த போஸ்ட்மேன் கொண்டுவந்து கொடுப்பார். மோர் வாங்கி குடித்து விட்டு போவார். சிலருக்கு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாத காலம் அது. இந்த சங்கிலித் தொடர் இடையில் துண்டிக்கப் பட்டால் அத்தோடு சரி. நின்றுவிடும். இதையடுத்து லூதியானாவிலிருந்து ஷால் வகைகள் இதே போன்று புறப்பட்டது. 10 ரூபாய் கொடுத்தால் கூப்பன் கிடைக்கும். அதை கொடுக்க ஷால் கிடைக்கும். பல ஷால்கள் சேரும்பொழுது நல்ல சைக்கிள், ஸ்டவ் என்று பல பொருட்களை கிடைக்கும். இது ஒருவழி. 80 களில் " நீங்கள் எதையும் விற்கவேண்டாம் ஒருமுறை வாங்கினால் போதும் " என்று சொல்லி, ஒரு பாக்ஸில் பல வகை காஸ்மெட்டிக் ஐட்டங்கள் சேர்த்துக் கொடுத்து 4500/- ரூபாயை பெற்றுக் கொண்டு ( அதன் மதிப்பு 200 ரூபாய் கூட இருக்காது ) போகச்சொன்னார்கள். உங்கள் வரிசையில் யாரும் வாங்கவில்லை என்று சொன்னால், உங்கள் பணம் எள்ளுதான். இதன் தொடர்ச்சிதான் மதுரை ஜெயலஷ்மிகதை. ஆக இது புதியதல்ல . சட்டப்படி தப்பிவிடலாம். இவர்கள் சட்டம் தெரிந்த திருடர்கள். ஏமாறுவது மக்கள்தான். நேற்று கூட என் செல்போனுக்கு " என் பெயர் மிஸர்ஸ் கிளாரா. நான் சமூகத்தொண்டு செய்பவள். நான் உங்களுக்கு எட்டரை பில்லியன் டாலரை அனுப்புகிறேன். நீங்கள் அதை ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள். உங்கள் ஈ மெயில், மற்றும் செல்போன் எண் கொடுத்தால் மேலும் விவரங்கள் சொல்லி பணம் அனுப்புகிறேன் என்று ஒரு செய்தி சொல்லியது. இது போன்று பல முறை பலவிதத்தில் செய்திகள் நான் பெற்றுள்ளேன். விழிப்புணர்வு உள்ளதால் என்னை ஏமாற்ற முடியவில்லை. ஆக நாம் தான் ஆசை படாமல் இருக்க வேண்டும். ஆனால், நாம் தான் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்று சொல்லி, மூன்றிற்கும் உள்ள விலையை ஒன்றிலேயே அடக்கி விற்பவர்களிடம் ஏமாறுபவர்களாயிற்றே .................நம்மை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது அவர்கள் கணக்கு. டி. நகரில் ஒருகடையில் 50 % தள்ளுபடி என்று சொல்லி, காஞ்சிபுரம் சேலைகளை விற்பார்கள். அது பழைய புடவைகளை டான் செய்து பாலிஷ் செய்து ஏமாற்றுவது ஆகும். ஆக ஒருவர் உடுத்திய பழைய சேலையை ஏமாந்து வாங்குபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளாட்பாரக் கடைகளில் அழகாக பாக் செய்து வரும் ஷார்ட் பேண்ட்கள் எல்லாமே பாலிஷ் செய்து ஏமாற்றும் வகைதான். இதை மூன்று சக்கர வண்டிகள் சிலதிலும், பெரிய வான்களில் அடுக்கி மைக் வைத்து பேசியம் விற்பார்கள். பத்து ரூபாய் கூட பெறாத உடுத்திய துணிகளை பல நூறுகள் கொடுத்து பலர் வாங்குவதை நினைக்கையில் வயிறு எரிகிறது. வேதனை உண்டாகிறது. ஒரு விஷயம் தெரியுமா..........பல பெரிய கடைகளில் பிராண்டட் பொருட்கள் என்றுசொல்லி, பாலிஷ் செய்த துணிகளுடன் புதியதையும் கலந்து விற்று கோடிக்கணக்கில் பணம் அள்ளுகிறார். சில சமயம் அந்த பணம் வேறு வகையில் மாட்டிக் கொள்கிறது. மாட்டிக் கொண்ட பணத்தை அங்கங்கு தெளித்துவிட்டு, அவர்களின் பாதுகாப்புடனேயே அதிக தொகையை தொடர்ந்து கடத்துவார்கள். அதுபோன்று இந்த நானூறு கோடியும் வழிவிடும். அப்புறம் என்ன...." வாங்கடா வாங்க என் வண்டிக்குப்பின்னாலே....................." என்று ஆடி பாடவேண்டியதுதான்.   08:07:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X