டெல்டா பிளஸ் வகை மிகவும் ஆபத்தானது வீரியம் மிக்கது. வெகு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என பரவலாகக் கூறப்படுகிறது.
இது மிகவும் முக்கியமான சந்தர்ப்பம்.
மிகவும் அற்புதமான சந்தர்ப்பம்.
தற்போது டெல்டா பிளஸ் வகை மாநிலத்திற்கு ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே உள்ளது. இந்நிலையில் டெல்டா பிளஸ் கொரோனா நோயாளிகளை உடனடியாக முதலில் தனிமைபடுத்த வேண்டும். அவர்களுக்குப் பல ஆயிரங்கள் சில லட்சங்கள் செலவு செய்தாலும் எந்தத்தவறும் இல்லை. இந்த நோயாளிகளுக்கு five star வசதிகளைத்தரவேண்டும். நஷ்டமே இல்லை தனிமைப் படுத்திப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் ஒரே லட்சியமாக இருக்க வேண்டும்.
தற்போது அலட்சியமாக அவர்களைப் பொதுமக்கள் மத்தியில் உலவவிட்டால் இரண்டாம் அலையைவிடப் பேராபத்தாய் முடிந்து விடும்.
பிறகு தும்பை விட்டு வாலைப்பிடித்த கதைதான்.
கொரோனா முதல் அலையின் ஏர்போர்ட்டை மூடி விமானப் பயணிகளைத் தடுக்கத் தவறியதால் வேகமாகப் பரவியது.
தற்போது நோயாளிக்குச் சகல வசதிகளும் கொடுத்தாவது டெல்டா பிளஸ்ஸைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டால் பல லட்சம் உயிர்கள் பலியாகும்.
கூடவே பல ஆயிரம் கோடி பணமும் செலவாகும். மக்கள் பேராபத்தில் சிக்கி சின்னாபின்னாகிக் கஷ்டப்படுவர்.
அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா?
Prevention is better than cure என்பதைப் புரிந்து கொள்ளுமா?
அல்லது வழக்கம்போல் வளரவிட்டு ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு திரிவார்களா?
எல்லாம் அந்த
ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
23-ஜூன்-2021 22:17:57 IST
இந்து மதத்தினர் சாதாரண நாள்களில் அசைவ உணவுகள், மது இவற்றை எடுத்துக் கொண்டாலும் விரத நாள்களிலும் அமாவாசை மற்றும் பெற்றோருக்குத் திதி கொடுக்கும் நாள்களிலும் மிகவும் தூய்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். விசேஷ
நாள்களில் கோவிலுக்குச் செல்லும்போது, கோவில் திருவிழா , தீமிதித்தல், காவடி எடுத்தல் நாள்களிலும் நீராடி விரதமிருந்து மாமிசம் மது உண்ணாமல்தான் இறைவனை வணங்குவர். அவ்வாறு பக்தி சிரத்தையுடன் மக்கள் வரும்போது இறைவனின் சன்னிதியில் உள்ள அர்ச்சகரும் தூய்மையாக இருந்து அபிஷேகம் அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுக்கும்போது பக்திப் பரவசத்துடன் பெற்றுக் கொண்டு நிம்மதியுடன் வீடு திரும்பவர்.
அவ்வாறு இல்லாமல் வருங்கால அரசு அர்ச்சகர்கள் மிலிட்டரி தலப்பாக்கட்டு பிரியாணி பார்சல்களைக் கோவில்களுக்கு எடுத்து வந்து தானும் சாப்பிட்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து உண்ணும் நிலை வரும். தாகமெடுத்தால் டாஸ்மாக் உதவிக்கு வரும்.
கூடவே சண்டை சச்சரவு பஞ்சாயத்து அடிதடி கூலிப்படை இவையும் வரத்தானே செய்யும்?
அப்படி ஒரு சூழலில் மக்கள் கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கி நிம்மதியுடன் வீடு திரும்ப முடியமா?
தம் துன்பங்கள் தீரவும் மன நிம்மதி தேடியும்தானே மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள்?
பக்தி உணர்வுக்கும் மன நிம்மதிக்கும் வழியில்லை என்றால் மக்கள் கோவிலை நாடி வருவார்களா?
கோவில் சிறப்பாக இருக்குமா?
இதைவிட நம் நம்பிக்கையைக் கொலை செய்து இந்து மதத்தையும் மக்களையும் கேவலப்படுத்த சிறந்த வழி வேறு உண்டா?
வாழ்க ஜனநாயகம்
வாழ்க மதச்சார்பின்மை
வளர்ந்து செழிக்கட்டும் பகுத்தறிவு
18-ஜூன்-2021 09:30:02 IST
தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யவேண்டும் என்று தமிழகத்தின் உண்மையான பக்தர்கள் விரும்புகிறார்களா அல்லது வேறு சிலரின் விருப்பமா அது?
11-ஜூன்-2021 07:11:22 IST
மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா போன்றோர் திட்டமிட்டே ங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்கின்றனர்.
இவ்வாறு மோசடி செய்யப்படுவது நாட்டின்.
மக்கள் அனனவரின் உழைப்பு அதில் இருகாகிறது.
எனவே
1.இந்த மோசடிப் பேர்வழிகளை தேசத்துரோகிகளாக / நாட்டின் எதிரிகளாக அறிவிக்க வேண்டும்.
2.அவர்களது அனைத்து அசையும்/அசையா சொத்துகளை நாட்டுடைமையாக்கிட வேண்டும்.
அவரின் சொத்துகளுக்கு உறவினர்கள் எப்படி வாரிசாக இருக்கிறார்களோ அதைப்போல கடனுக்கும் அவர்கள்தான் வாரிசு / பொறுப்ப என அறிவித்து கடுமையுடன் கடனை வசூலிக்க வேண்டும்.
3.சொத்துகளை உறவினர் பெயரில், பினாமி பெயரில் மாற்றிவிட்டு தம்மிடம் ஒன்றும் இல்லை என்று I.P.கொடுத்து திவாலாகிவிட்டேன் என்றால் அதனை ஏற்கக் கூடாது.
4. பெருந்தொகை கடன்பாக்கி வைத்துள்ளோரின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்து சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் மத்திய மாநில அரசுகளிடம் N.O.C பெற்ற பின்னரே வெளி நாட்டுப்பயணம் அனுமதிக்க வேண்டும்.
5.அத்தகைய அவசியமான நிகழ்வுகளிலும் அரசாங்கத்தின் சார்பில் இரு கண்காணிப்பு அதிகாரிகள் கூடவே சென்று கண்காணித்து தினசரி தகவல் தரவேண்டும். (ஏனெனில் தொகை மிகப்பெரிது)
6. வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டால் அசல், வட்டி,,அபராத வட்டி, அனைத்து விதமான செலவினங்களையும் அதைப்போல் மும்மடங்கு வசூலிக்க வேண்டும்.
7மோசடி வழக்குகளுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் அமைத்து 30 நாட்களில் வழக்கினை முடிக்க வேண்டும்.
8.தொகை முழுமையாக வசூலாகும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது.
9.திட்டமிட்டு மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
10.எக்காரணத்தைக் கொண்டும் எந்த வங்கியும் எந்தக் கடனையும் தள்ளுபடி Write off செய்யக்கூடாது.
11.கடன் என்றால் எப்பாடு பட்டேனும் திரும்பக்கட்ட வேண்டும் என்ற தார்மீகக் கடமை உண்டு. அதில் எந்த சமரசமும் கூடாது.
12.ஒருவேளை எளிய மக்களின் கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்ய முடிவெடுத்தால் அதே நிலையில் நாணயமாகக் கடனை ஏற்கெனவே கட்டி முடித்தோர்க்கும் அத்தொகையைத் திருப்பித்தரவேண்டும்.
13. நாணயமாகக் கடனை திருப்பிச் செலுத்தியவர்களை ஏமாளி ஆக்காமல் அவர்களுக்கும் அந்தத் தள்ளுபடிப் பலனை முழுமையாக வழங்குவதுடன் அவர்களின் நாணயத்தைப் பாராட்டி கூடுதலாக 5% ஊக்கத் தொகையும் வழங்க வேண்டும்.
14.வராக்கடன் என்ற நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளைப் பொறுப்பாக்கி அவர்களிடம் வசூலிக்க வேண்டும்..
15. மோசடி , ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகார்களைக் கைது செய்து கடும் தண்டனை வழங்குவதுடன் அவர்களின் வாரிசுகள் சந்ததியார்கள் எக்காலத்திற்கும் அரசுப்பணி நியமனம் பெற நிரந்தரத்தடை விதிக்கப்படவேண்டும்.
16. பலபேர் உழைப்பு சில பேரால் திட்டமிட்டுகொள்ளையடிக்கப்படுவது கண்டிப்பாகத் தடுக்கப்படவேண்டும்
31-மே-2021 13:48:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.