NATARAJAN R : கருத்துக்கள் ( 45 )
NATARAJAN R
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2021
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
30
2021
சம்பவம் ரூ.2.27 கோடி லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கைது
மேற்படி அம்மையாருக்கு லஞ்சம் வாங்கியது பாராட்டி பதவி உயர்வு கொடுத்ததாக செய்தி வந்துள்ளது உண்மையா?   15:57:10 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
30
2021
கோர்ட் விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிபதிகளே இதுவரை நீங்கள் பலமுறை பேனர் வைக்க கூடாது என்று கூறி விட்டீர்கள். ஆனால் எந்த அரசியல் கட்சியும் அதை மதிப்பதில்லை. நீங்களும் அதை கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பேனர் உள்ளது. மத்திய அரசு இலவசமாக தருகின்ற, தடுப்பூசி போடும் முகாம்களில், பிரதமரின் பேனர் இல்லை. ஆனால் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேனர் உள்ளது. பேனர் வைக்க கூடாது என்று உத்தரவு போடாமல் அனுமதியின்றி என்று கொக்கி வைக்கிறீர்கள் எல்லா பேனர்களும்அனுமதியோடு தான் என்று சொல்வார்கள் பல உயிர்கள் பலி போன பிறகும் நீதிமன்றம் வெறும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை எங்குமே பேனர் இருக்கக்கூடாது என்று உத்தரவிடுங்கள் மீறி எங்கேனும் பேனர் இருந்தால் அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என்று உத்தரவு போடுங்கள் இது போல ஒவ்வொரு முறையும் பேனர் வைக்க கூடாது என்று நீங்கள் சொல்வதால் எந்த பலனும் இல்லை.   15:54:08 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2021
பொது அரை டிராயருடன் வங்கிக்கு போகலாமா? சமூக வலைதளத்தில் காரசார விவாதம்
வங்கியின் நடவடிக்கை சரியானது. சுதந்திரம் என்பது எல்லைக்குட்பட்டது. பணிக்கு செல்லும்போது டிராயர் போட்டுக் கொண்டு செல்வாரா? வங்கியில் மட்டுமல்ல பலர் ஆலயங்களுக்கு அரை டிராயருடன் போகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது அரை டிராயர் என்பது இரவில் வீட்டில் உபயோகப்படுத்த வேண்டிய உடை. இது போன்ற அரை டிராயர் போட்டுக் கொண்டு கவலைப்படாமல் ரோட்டில் தெரிவது, அவரையே அவர் கேவலப்படுத்தி கொள்வது. இந்திய நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள் தயவு செய்து வெளியில் வரும்போது அரை டிராயர் போட்டுக் கொண்டு வராதீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம் எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது வங்கியில் ஏதேனும் விதிமுறை உள்ளதா என்று கேட்ட புத்திசாலியே எல்லாவற்றுக்கும் விதிமுறை தரமுடியாது அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். என்னுடைய கேள்வி இந்த மேதைகள் எல்லாம் ஏன் பணிக்கு செல்லும்போது அரை டிராயருடன் செல்வதில்லை? .   17:33:53 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
17
2021
முக்கிய செய்திகள் நெற்றியில் திருநீறு... கழுத்தில் ருத்ராட்சம் மாணவர்களை அடித்த ஆசிரியர்
ஒரு விஷயம் நன்றாக புரிகிறது. இதே பிரச்சனை இந்துக்களால் நடத்தபடும் பள்ளியில், பிற மதத்தை சேர்ந்தமாணவனுக்கு ஏற்பட்டிருந்தால், இந்நேரம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் உடனடியாக, பள்ளி ஆசிரியரை கைது செய்ய வேண்டும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் அந்தப் பள்ளி சனாதன தர்மத்தை போதிக்கிறது என்று சொல்லி அறிக்கை மீது அறிக்கை விட்டிருப்பார்கள். மீடியாக்கள் அனைவரும் இதுகுறித்து விவாதித்து பள்ளியின் மீது களங்கம் கற்பித்து, நடந்தது என்ன என்பதை இவர்கள் அறிந்தது போல, முடிவு செய்து பள்ளிக்கு தண்டனையும், கொடுத்திருப்பார்கள். என்ன செய்வது இப்பொழுது பிற மத பள்ளியில் அல்லவா இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. எனவே முட்டுக் கொடுக்க வேண்டும். .பள்ளி நிர்வாகத்தின் அறிக்கையைப் பாருங்கள் மாணவர்களை ஆசிரியர் கண்டித்து இருப்பார் எனவே மாணவர்கள் அவர் மீது பழி போடுகிறார்கள் விசாரணை நடத்தப்படும் இனி இதுபோல நடப்பது போல தவறு நடக்காது என்றுதான் கூறுகிறாரே தவிர தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்று அந்த அந்த நிறுவனத்தின் அதிகாரி கூறவில்லை மாவட்ட கல்வி அலுவலரும் பட்டும் படாமல் அறிக்கை கொடுக்கிறார் இதே இந்துக்களால் நடத்தபடும் பள்ளி என்றால் இந்நேரம் மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர், கல்வி அமைச்சர் அனைவரும் சேர்ந்து அந்த ஆசிரியரே குற்றவாளி என்று முடிவு செய்து, இவர்களே தண்டனை வழங்கி இருப்பார்கள் மேலும் எந்த மாணவனும் பொய் சொல்ல மாட்டான் என்று இவர்கள் சான்றிதழ் வழங்குவார்கள் இதுதான் தமிழ்நாடு என்று ஒரு அரசு, குற்றத்தை பாத்து தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு, குற்றத்தை யார் செய்கிறார்கள் என்று பார்த்து, தண்டனை கொடுக்கின்ற நிலையில் இருக்கும்போது, அந்த நிலையை விட்டு வெளியே வருகிறதோ அன்றுதான் தமிழ்நாட்டுக்கு விடிவு காலம். ஒரு சந்தேகம் எங்கே போய்விட்டார் கல்வியமைச்சர்.   12:34:29 IST
Rate this:
3 members
0 members
18 members

அக்டோபர்
12
2021
பொது பொய் புகாரில் வஞ்சம் தீர்க்கும் சார் - பதிவாளர்கள்!
சமீபத்தில் வெளிவந்த ருத்ர தாண்டவம் படம் இந்த பிரச்சனையை தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அப்போது இயக்குனர் மோகனை விமர்சித்த மீடியாக்கள் இப்போது என்ன சொல்லும்? ஒரு மேலதிகாரி, அவரிடம் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து, அது உண்மை என்று அறிக்கை அளிக்கும்போது, அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்தால், உடனே உயர் அதிகாரி மீது "சிறப்பு அந்தஸ்தை" பயன்படுத்தி அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தால அது எவ்விதத்தில் நியாயம்? அதிகாரிகள் நேர்மை இல்லை என்று சொல்கிறோம். இதுபோல நடந்தால் எந்த அதிகாரி நேர்மையாக இருப்பார் நமது அரசியல் சட்டமே பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்றுதான் சொல்கிறது ஆனால் இங்கு ஒவ்வொரு வழக்கிலும் தான் செய்த தவறை மறைக்க சட்டத்தை பயன்படுத்தி நிரபராதிகளை தண்டிக்க துவங்கிவிட்டால் அதிலிருந்து தெரியவில்லையா அந்த சட்டம் எப்படி பயன்படுத்த படுகிறது என்று. ஆனந்த விகடன் காலத்தில் நேர்மையின் மறு வடிவமாக இருந்து தற்பொழுது ருத்ர தாண்டவ படத்திற்கு 29 மதிப்பெண் கொடுத்து தன்னைத் தாழ்த்தியது. இந்த செய்தியை விகடனுக்கு அனுப்புங்கள் நேர்மையான பத்திரிக்கை என்றால் 29 மதிப்பெண் கொடுத்து திருத்தி 92 கொடுக்கட்டும்.   10:29:34 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
9
2021
அரசியல் நீட் விலக்கு பெற்றே தீருவோம் அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
அமைச்சர் அவர்களே, காமெடி பண்ணாதீங்க. நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுவிட்டது. முந்தைய அண்ணா திமுக அரசு, நீட் தவிர்க்க முடியாது என்பதை அறிந்துகொண்டு, பயிற்சி மையங்கள் அமைத்தது ,7.5 சதவீத உள் இட ஒதிக்கீடு அமைத்தது. தற்பொழுது நீங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருக்கிறீர்கள் இதுபோல பல தீர்மானங்கள் அனைத்தையும் அதிமுக அரசு ஏற்றி விட்டது நீங்கள் ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடம் கண்டிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது இது உங்களுக்கு தெரியும் தயவு செய்து மக்களை திசை திருப்பா தீர்கள் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்த பின், குடியரசு தலைவர் கையெழுத்து போடுவார் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு ஆலோசனை உங்கள் கட்சியில் திரு உதயநிதி அவர்கள் மேடையில் பேசும்போது நீட்டை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார் அது என்ன என்று கேட்டு முடிந்தால் ரத்து செய்யுங்கள் தயவுசெய்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்   13:23:28 IST
Rate this:
0 members
1 members
4 members

அக்டோபர்
7
2021
கோர்ட் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதம் கழித்து இவர்கள் ஒரு சிலையை கூட அகற்ற மாட்டார்கள். நீதிமன்றமும் அதைப் பற்றி கவலைப்படாது . தீர்ப்பு மட்டும் வீராவேசமாக இருக்கும். .இப்படித்தான் மூன்று மாதங்களுக்கு முன் இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். மூன்று மாதம் ஆகிவிட்டது நீதிமன்றம் சொன்னது எதையும் அரசுசெய்யவில்லை. நீதிமன்றம் கேட்டுக் கொள்ளவில்லை. அதையும் மீறி விசாரணைக்கு வந்தால் அரசு தரப்பில் ஒரு வருட அவகாசம் கேட்பார்கள். நீதிமன்றம் இரண்டு வருடம் கொடுப்பார்கள். அதோடு சரி. தனிநபர் என்றால் நீதிமன்ற அவமதிப்பு, கைது ,சிறை எல்லா தண்டனையும் உண்டு. அரசைப் பொருத்தவரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் அவ்வளவுதான். அரசு அலட்சியமாக இருக்கும்.இதுதான் இப்பொழுது நடக்கிறது.   20:52:02 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
7
2021
அரசியல் கொரோனா பரவல் குறைந்ததும் அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படும் சேகர்பாபு
அமைச்சர் அவர்களே. பாஜக அரசியல் செய்யவில்லை சரியாகத்தான் பேசுகிறது நீங்கள்தான் அரசியல் செய்கிறீர்கள். வாரத்தில் மூன்று நாட்கள் ஆலயங்களை அடைத்துவிட்டு மத்திய அரசு உத்தர விட்டது என்று நடிக்கிறீர்களே மத்திய அரசு உங்களை மதுக்கடைகளை திறக்க சொன்னதா? பெரிய பெரிய நிறுவனங்கள் திறக்க சொன்னதா? ரோட்டிலே இப்பொழுது எவ்வளவு கூட்டம் கூடியது என்று தெரியுமா எல்லா இடத்திலும் கூட்டம் கூடுகிறது ?ஆனால் ஆலயத்தில் மட்டும் கூட்டம் கூடுவது போல தங்களது அறிக்கை மிக மிக கேவலமாக இருக்கிறது. எல்லா மதத்திலும் மூடி விடுகிறோம் என்று சொல்கிறீர்கள். மற்ற மதங்களில் இந்துக்களைப் போல வழிபாடு முறைகள் இல்லை. குறிப்பாக அமாவாசை தர்ப்பணம் விநாயகர் சதுர்த்தி நவராத்திரி தீபாவளி பண்டிகை வரும் மாதங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் அடைப்பது என்பது இறைவன் மீது தங்களது நம்பிக்கை எவ்வளவு போலியானது என்பதை வெளிப்படுத்துகிறது. கண்டிப்பாக அனைத்து செயல்களுக்கும் இறைவன் தகுந்த தண்டனைகளை வழங்கி விடுவான் என்பது எங்கள் நம்பிக்கை. மத்திய அரசு சொன்ன அனைத்து உத்தரவுகளையும் கேட்டு விட்டீர்களா ?மத்திய அரசு நீட் வேண்டும் என்கிறது ஒப்புக் கொள்கிறீர்களா? மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறது ஒப்புக் கொள்கிறீர்களா ? மத்திய அரசு விவசாயிகளுக்கான சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது ஒப்புக் கொள்கிறீர்களா ?மத்திய அரசு அனைத்து கோயில்களும் மத்திய அரசின் டிவி வரவேண்டும் என சட்டம் ஏற்றுகிறது ஒப்புக் கொள்கிறீர்களா? எல்லா விஷயங்களிலும் மத்திய அரசு சொல்வதை கேட்க மாட்டீர்கள் ஆனால் ஆலய மூடுவது என்பது நீங்கள் எடுத்த முடிவு மத்திய அரசு பொதுவாக நோய்தொற்று காலத்தில் பாதுகாப்பு நிறைவைக் எடுக்கும்படி சொல்லியிருக்கிறது அதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தாதீர்கள்   16:44:32 IST
Rate this:
3 members
0 members
20 members

செப்டம்பர்
16
2021
பொது சிறந்த சாலை தேவையென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் அமைச்சர் கட்கரி
சரி அமைச்சர் அவர்களே சார் நல்ல தரமான சாலை வேண்டுமென்றால் பணம் செலுத்த வேண்டும் என்கிறீர்கள். எனக்கு தரமான சாலை தேவையில்லை அப்படியானால் வாகனங்கள் வாங்கும்போது சாலை வரி என்று எதற்காக வாங்குகிறீர்கள் அப்படியே உங்கள் பேச்சை ஒப்புக்கொள்கிறோம் தரமில்லாத சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் நாங்கள் பயணம் செய்கிறோமே அதற்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா அதேபோல எத்தனை வருடங்களுக்கு சாலை வரி காண்ட்ராக்ட் அமௌன்ட் எவ்வளவு எப்பொழுது முடியும் என்ற விவரங்களை ஏன் தெரிவிக்க மறுக்கிறீர்கள் பலர் சுங்கச்சாவடிகளில் இயந்திரம் பழுதடைந்து பல நிமிடங்கள் காத்திருக்கிறோம் அதற்கு யார் பொறுப்பு   13:18:49 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X