இந்த அம்மணிக்கு ஒரு வேண்டுகோள் நடந்தது நடந்ததுதான் ..குறைந்தபட்சம் அவர் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக உண்மைகளை எப்படியாவது கசியவிட்டு " அதற்க்கு காரணமான " பெரிய மனிதர்களின் முக மூடிகளை கிழித்தெறியவேண்டும் ..இப்பவாவது இதை இவர் செய்யவில்லை என்றால் இவரை பாவ செயலுக்கு விமோச்சனம் இல்லை ..இவர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ..சிந்திக்க வேண்டும்
12-மார்ச்-2019 19:27:16 IST
வெளியில் நடக்கும் இந்த அவலம் சினிமா துறையில் சத்தமே இல்லாமல் அறைக்குள் கச்சிதமாக நடக்கிறது ..இப்ப கருத்துச்சொல்லும் சினிமா பிரபலங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒருவராவது உண்மையை சொல்லட்டும் பார்க்கலாம்.. எத்தனை பெண்கள் வெளியில் சொன்னார்கள் ..இவர்கள் எவருக்கும் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளைப்பற்றி கருத்துச்சொல்ல தகுதி இல்லை. இத்தனை சீர்கேடுகளுக்கும் இந்த சினிமாத்துறையினரின் பங்கு மிக அதிகம் ..சினிமா பிரபலத்தால் இன்று இவர்கள் கூற்று மின்னுகிறது..மனசாட்சி இல்லாத மனிதர்கள்..5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள சுவர்களை கேட்டால் கூட இவர்களின் முகமூடிகளை கிழிக்கும் .
12-மார்ச்-2019 19:11:48 IST
ஏங்க தலைவரே கனிமொழி நேர்காணலில் பங்கேற்றது கேலிக்கூத்தா தெரியலையா? எல்லாம் முறையாக செய்வதாக நினைப்பு..நேர்காணலில்தான் வேட்பாளர்கள் முடிவாகிறார்களா? ஏற்கனவே ஒவ்வொருதொகைதிக்கும் முடிவாகிவிட்டபோது ,நேர்காணல் என்பது நாடகமே எங்கே நேர்காணல்மூலம் கடந்தகாலத்தில் கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி இந்த தேர்தலிலும் சீட்டு கேட்க்கும் கனிமொழி,ராஜா மற்றும் தயாநிதிதிமாறன் மூவருக்கும் சீட்டு கொடுக்காமல் விடுங்கள் பார்க்கலாம் எங்க இந்த நாடகம் ..சின்ன பசங்க சிரிக்கிறார்கள்..
11-மார்ச்-2019 07:59:26 IST
இதை கடந்த 5ந்தேதியே ஓத்துக்கொண்டிருந்தால் கண்ணியமாக இருந்திருக்கும் ..சில வேண்டாத நிகழ்வுகளும் ,விமர்சனங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் .ஊடகங்களுக்கும் ,எதிர்க்கட்சிகளுக்கு மெல்லுவதற்கு தீனிபோட்டுவிட்டு அதே 4 சீட்டுக்கு ஒத்துக்கொள்வது பெட்டி பேரத்தையே குறிக்கும் ..பாவம் விஜயகாந்த் ..அவர்கையில் ஏதும் இல்லை.. எல்லாம் மனைவி ,மைத்துனரின் கண்ட்ரோலுக்குள் வந்துவிட்டது..
10-மார்ச்-2019 21:02:58 IST
மண்ணாங்கட்டி..கைது செய்து "" விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்தி ,இந்த பொறுக்கிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .அவர்கள் எந்தவித குற்ற செயலும் செய்யவில்லை -அவர்கள் அப்பாவிகள் -அவர்கள்மீது இந்திய அபாண்டமாக பழிசுமத்துகிறது -அவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை.. "'-இதுதானே நீங்கள் காலங்காலமாக செய்து வருவது .போங்கடா நீங்களும் உங்கள் சட்ட நடவடிக்கைகளும்
05-மார்ச்-2019 20:29:01 IST
திமுக தன்கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகளை ஒதுக்கி பேரத்தை முடிக்கும்வரை அண்ணாதிமுக வியகாந்துடன் கூட்டணி பேரத்தை இழுத்தடித்துக்கொண்டே இருக்கும் ,..பின் விஜயகாந்தை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் ..விஜயகாந்த் வேறுவழியில்லாமல் TTV தினகரனுடன் அல்லது கமல் கட்சியுடன் கூட்டணி வைத்து ஓட்டுக்களை பிரித்து வெற்றிபெறுவார்கள் ..இதுவே அண்ணாதிமுகாவின் திட்டம் ..மிகவும் ஓவராக கனவுகாணும் பிரேமாவுக்கு பாடம் கற்றுக்கொடுக்கப்படும் ..
05-மார்ச்-2019 06:31:25 IST
எந்த கருத்தை பதிவு செய்வது ? இவளைப்போன்ற பெண்கள் இந்திய கலாச்சரத்திற்கு ஆற்றிவரும் " சேவை " சேவை மகத்தானது .பெண்களின் சுதந்திரம் என்ற பெயரில் இவர்களுக்கு இந்திய திருநாட்டின் பாரம்பரியமும், கலாச்சாரமும் பற்றி தெரிய ஞாயமில்லை .இவர்களை குற்றம் சொல்வதைவிட இவர்களை வளர்த்த விதத்தை மட்டுமே குறைசொல்லவேண்டும் ..ஆனால் ஒன்று. ..இதை முளையிலேயே கிள்ளியெறியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ள அதிகாரவர்க்கமும்- சமுதாய கண்ணோட்டமுள்ள ஊடகத்துறையும் இதுபோன்ற கலாச்சார சீரழிவுக்கு பொறுப்பேற்கும் காலம் வரும் ..சிலபேர் எதையும் இந்த நாட்டில் செய்யலாம் என்ற மனப்பாங்கினை வளர்த்து மீடியாக்களின் பார்வையில் மிளிர்ந்து புகழடையலாம் என்று எண்ணுகிறார்கள் ..
03-மார்ச்-2019 01:09:42 IST
எல்லாம் சரி..திரு மோடி அவர்களே அமித்ஷா -அவர் மகன் சேர்க்கும் சொத்து இடிக்கவில்லையா? அவர் மகன் செய்வது பிசினஸ் என்று சொல்லி சப்பைக்கட்டு வேண்டாம் .இந்த நான்கரை ஆண்டு காலத்தில் அவரின் சொத்துமதிப்பு எப்படி இவ்வளவு வளரமுடியும் ? மறுஎண்ணிக்கை சிதம்பரம் குடும்பத்தை கடுமையாக விமர்சிக்கும் தங்களுக்கு உங்கள் கட்சி தலைவரின் குடும்ம்ப கொள்ளை கண்ணுக்கு தெரியவில்லையா? இதுபோன்றே உங்கள் கட்சியின் பல குடும்பங்களை சொல்லலாம் ..இப்ப உங்கள் திறமையான நிர்வாக தந்திரங்களால் அவை வெளியில் வராமல் இருக்கலாம் ..உங்களின் திறமை-நேர்மையில் யாருக்கும் சந்தேகம் இல்லை ..ஆனால் உங்களுடன் பயணிக்கும் பல பேரை ,அவர்களின் கொள்ளைகளை தாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மனஉறுத்தல் தானே? எதிர்கட்சி கொள்ளை தலைவர்களை இனம் கண்டுகொள்ளும் நீங்கள் உங்கள் கட்சியி உள்ள புல்லுருவிகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் இந்திய மிளிரும்-உங்கள் தலைமையில்
03-மார்ச்-2019 00:44:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.