Nanpan : கருத்துக்கள் ( 12 )
Nanpan
Advertisement
Advertisement
ஜனவரி
11
2018
கோர்ட் பஸ் தொழிலாளர் பிரச்னை மத்தியஸ்தர் நியமனம்
தம்பி தனியார் மயமானால் கூட்டமில்லாத இரவு நேரங்களில் கார் வைத்துத்தான் ஊருக்குப் போக முடியும். ஓசியில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குப் போக முடியாது . விசேஷ காலங்களில் தனியார் கேட்பதே டிக்கட் காசு. தட்டிக்கேட்டால் தட்டி வைக்கப்படுவாய்.ஊனமுற்றோர் இலவசப் பயணம் போக முடியாது. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்க முடியாது.அதிலும் இட ஒதுக்கீடு மூலம் அதிகப்படியான வேலை கொடுக்கும் ஒரே நிறுவனம் இந்தப் போக்குவரத்துக்கு கழகங்கள். டீசல் விலை ஏறினால் உடனே டிக்கட் விலை ஏறும் . இல்லாவிட்டால் வண்டிகள் ஓடாது. தனியார் அதிகமுள்ள கேரளத்தில் பார் மாதத்தில் பல நாட்கள் வண்டிகள் ஓடுவதில்லை. அதை விட ஓட்டுநர் நடத்துநருக்கு சம்பளம் சும்மா பேருக்குத்தான் கிடைக்கும் . குடும்பம் நடத்த முடியாது.கொஞ்சம் வயதானால் வேலை கிடையாது.வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். சும்மா பேசத்தான் தனியார் மயம் இனிக்கும் நடைமுறையில் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகுந்த துன்பமாக இருக்கும். அரசுப் பேருந்துகள் இங்கு அதிகமாக ஓடுவதால்தான் தனியார்கள் தங்களது சுய ரூபத்தைக் காட்டாமல் இருக்கின்றனர். நண்பன் பொள்ளாச்சி.   20:03:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2018
பொது போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.750 கோடி
அமைச்சர் வாயிலேயே வடை சுட்டுக்கொண்டுள்ளார். ஏதுவாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற சங்கங்களையும் அழைத்துப் பேசி சுமுக உடன்பாடு கண்டு பொங்கல் பண்டிகையை தமிழக மக்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழி செய்ய வேண்டும்.   13:37:59 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
10
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2018
சம்பவம் பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டம்
இதில் ஏன் இப்படிப் பிடிவாதம் காட்டுகிறார் எடப்பாடி? போக்குவரத்துத் தொழிலாளர்களின் குடும்ப ஓட்டுக்கள் வேண்டாமா? இதுவரை அம்மா சொன்னால் எல்லோரும் ஒட்டுப் போடுவார்கள். இனி அப்படியில்லை செய்யும் நன்மைக்குத்தான் வாக்கு. அண்ணா தொழில் சங்கத்தினர் 80 சதவிகிதம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர். இனியாவது உணர வேண்டும்.   21:49:14 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
9
2018
உலகம் திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்
உலகின் எல்லா இடங்களிலும் பைக் திருடனுங்க இருக்கானுக என்பது தெரிகிறது.   11:25:47 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
8
2018
அரசியல் தனியார் லாபத்தில் இயங்கும்போது அரசுக்கு மட்டும் நஷ்டம் ஏன் தமிழிசை கேள்வி?
ஏனம்மா தொழிலாளர்களின் வயிறெரிச்சலைக் கேட்டு வாங்குறீங்க? நீங்கள் மக்கள் பக்கமா இல்லை எடப்பாடி பக்கமா?   11:23:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
9
2018
பொது ஐகோர்ட் நாளை விசாரணை முதல்வர் ஆலோசனை
RK நகரில் கண்டிப்பாக இடைத் தேர்தல் வரும் என்று தெரிந்தும் அங்கு நல திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்து தோல்வியைத் தழுவினீர்கள். இப்போதும் நீங்கள் ஒன்றும் பெரிய மெஜாரிட்டியுடன் பதவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். அப்படி இருக்க ஏன் போக்குவரத்து தொழிலாளர்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதிக்கிறீர்கள்? உங்களது கூட்டங்களுக்கு சீருடையுடன் வந்து கலந்து கொள்ளும் போக்குவரத்துத் தொழிலாளிக்கு நல்லது செய்ய மறுப்பது ஏன்? யாரோ சொல்லும் சதவிகிதக் கணக்குகளை நம்பாதீர்கள்.உங்களது அண்ணா தொழிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களே 90 சதவிகிதம் பேர் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இப்போது வந்துள்ள கொஞ்சப் பெரும் பல்வேறு மிரட்டல்களுக்குப் பயந்துதான் வந்துள்ளனர். மீண்டும் விரைவில் தேர்தலைச் சந்திக்கவுள்ள நீங்கள் தொழிலாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கலாமா? யோசிப்பீர் நல்லது செய்வீர். நண்பன்-பொள்ளாச்சி. கட்சி சாராதவன்.   11:19:08 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
9
2018
அரசியல் ராஜ்யசபா பதவி 3 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
ஆம் ஆத்மீ கட்சிக்கு இனி வரும் தேர்தல்களில் பணத்துக்குப் பஞ்சமிருக்காது. கட்சிக்குச் சம்பந்தமில்லாத இரண்டு கோடீஸ்வரர்களுக்கு MP பதவி கொடுக்கப்பட்டு விட்டது.இவர்கள் இனி வருங்கால தேர்தல் செலவுகளை பார்த்துக்கொள்வார்கள்.   11:07:15 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
9
2018
உலகம் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை
இத்தாலிய கோர்ட்டு தங்கள் நாட்டுக்கும் தங்கள் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மருமகளாகச் சென்ற சோனியாவுக்கும் நன்மை செய்துள்ளது.   11:03:47 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
8
2018
அரசியல் தனியார் லாபத்தில் இயங்கும்போது அரசுக்கு மட்டும் நஷ்டம் ஏன் தமிழிசை கேள்வி?
சகோதரி தமிழிசை அவர்களே.... இதைக் கண்டிப்பாகக் கவனத்திற் கொள்ளுங்கள். மூன்றாம்தர அரசியவாதி போல நீங்கள் இப்படிப் பேசுவதை நாங்கள் ரசிக்கவில்லை. ஆரம்ப காலத்தில் பஸ்களின் இயக்கம் சில தனியாரிடம் மட்டுமே இருந்தது. அப்போது மிக நன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அதைக் கருணாநிதி அரசுடைமை ஆக்கினார் ஏதோ ஒரு காரணத்துக்காக. ஆனால் அதன் பின்னர் அரசுப் போக்குவரத்துக்கு கழகங்களில் பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகின. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை அள்ளித் தரும் கற்பக விருட்ஷமாக இந்த போக்குவரத்துக்கு கழகங்கள் இருந்தன இருக்கின்றன. லாபம் இல்லாத பகுதிகளுக்கெல்லாம் அரசு பஸ்கள் சென்று வந்து கிராம மக்களின் மேம்பாட்டுக்கு வழிசெய்தன. இரவில் சென்று தங்கியிருந்து விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளையெல்லாம் பட்டணத்துக்கு சுமைக் கட்டணமின்றி கொண்டுவந்து சிறிய விவசாயிகள் பயன் பெற வைப்பது இந்த அரசு பஸ்கள். படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாஸ் கொடுத்து இன்று இந்தியாவில் கேரளத்துக்கு அடுத்து அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்வதற்குக் காரணம் இந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்களே. உடல் ஊனமுற்றவர்களுக்கு இலவசமாகவும் 1/4 கட்டணத்திலும் அழைத்துச் செல்லும் நிறுவனம் இந்த அரசு நிறுவனம்தான். அடுத்த பிரச்சினைக்கு வருவோம் . இந்தப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்ட்டத்தில் இயங்குகிறது என்று வாய் ஓயாமல் சில அரசியல் வாதிகளும் அரசும் சொல்வது வேடிக்கையாக உள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் லாப நோக்கமின்றி செயல்படும் நிறுவனம் நஷ்ட்டத்தில் இயங்குவதாகச் சொல்வதே தவறு. கல்வித் துறை , காவல்துறை,மருத்துவத் துறை இவையெல்லாமே அரசால் இயங்குகிறது. இதனால் அரசுக்கு என்ன லாபம்? காவல்துறை இருந்தால் தான் மாநிலமும் நாடும் அமைதியாக இருக்க முடியும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். கல்விதான் சிறந்த அறிவு மிக்க குடிமக்களை உருவாக்க முடியும். இவற்றால் நஷ்ட்டமென்று தனியாரிடம் கொடுத்து விடலாமா? பாராளுமன்றம் நடந்தாலும் இல்லாவிட்டாலும் பல ஆயிரம் கோடி நஷ்ட்டமடைகிறது . அப்படியானால் பாராளுமன்றத்தை நடத்த வேண்டியதில்லையா? அதையும் தனியாரிடம் ஒப்படைத்து விடலாமா? மீண்டும் வருவோம் தொடங்கிய பிரச்சினைக்கு...போக்குவரத்துத் துறை நஷ்ட்டமடைய காரணமென்ன ? சேவைத் துறை என்றால் லாபம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இந்த அளவுக்கு பேரிழப்பு உண்டாகக் காரணமென்ன? இந்த அரசியல் வாதிகளும் அதிகாரிகளும்தான் காரணம். தேவைக்கும் மிக அதிகமாக அதிகாரிகள். அதிகாரிகளுக்காகவே புதிய புதிய பணிமனைகள். மாவட்டங்களுக்கு ஒரு கழகம் அதற்கு ஒரு MD பல JM கள் நூற்றுக்கணக்கான DM கள் .இவர்களுக்கு தனியாக கார் ஜீப் அதற்கு ஓட்டுநர் டீசல் மற்றும் அலவன்ஸ். ஒரே ஊரில் உள்ள பல பணிமனைகளுக்கு தனித்த தனி கிளை மேலாளர்கள்.தனித் தனி பொறியாளர்கள். போக்குவரத்துக் கழகங்களின் பெரும்பாலான வருவாய் இந்த தேவையற்ற அதிகாரிகளுக்கே போய்விடுகிறது. இதில்தான் சீர்திருத்தம் தேவை. இப்போது வேலை நிறுத்தப் பிரச்சினைக்கு வருவோம்.ஒரு தனியார் கம்பெனியாக இருந்தால் கூட அதன் ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து ( அவர்களது உழைப்புக்கான கூலியில்தான் பிடிக்கிறார்கள்) அதை அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்குவார்கள். ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் பணத்தை அரசு தான்தோன்றித் தனமாக PF இல் போடாமல் செலவழித்து விட்டது.58 வயதில் ஓய்வடையும் அந்தத் தொழிலாளி தன்னிடம் தனது சம்பள பணத்தில் பிடித்து வைத்துள்ள பணத்தைக் கொடு என்று கேட்டால் பணமில்லை கொடுக்க தாமதமாகும் என்று அரசு சொல்கிறது. இது கிட்டத்தத்தட்ட 8 வருடங்களாக நடக்கிறது. பல தொழிலாளிகள் பணத்தை வாங்க முடியாமலே இறந்துபோய் விட்டார்கள். இப்பொழுது தொழிலாளர்கள் இதைக் கேட்டுத்தான் போராடுகிறார்கள். இப்போது பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்துள்ள பணத்தை PF -இல் போடு, பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களிடம் பிடித்த பணத்தைக் கொடு ( இதுதான் அனைத்துத் துறைகளிலும் உள்ள நடை முறை) ,இதுவரை பணம் கொடுக்கப்படாமல் இருக்கும் ஓய்வடைந்த தொழிலாளியின் பணத்தைக் கொடு.இதைத்தான் கேட்கிறார்கள். ஓய்வு பெற்று நிம்மதியாக இருக்க வேண்டிய காலத்தில் தான் சிரமப்பட்டு சேமித்து வைத்த பணத்தை வாங்கிக் காலத்தை ஓட்டக்கூட முடியாமல் தவிக்க விட்டால் அவர்கள் என்ன செய்ய முடியும்? இப்போது பணியில் இருப்பவர்கள் அதிலும் இன்னும் குறுகிய காலத்தில் ஓய்வடையப்போகும் தொழிலாளர்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? ஓய்வுக்குப்பின் பணம் வருமா , மரியாதையுடன் தன் கடைசிக் காலத்தை போக்க முடியுமா? இந்த எண்ணம் தான் ஒவ்வொரு தொழிலாளியின் முன்னுக்கு உள்ள கேள்வி. புயலாலோ, வறட்சியாலோ , விபத்தாலோ இறந்தவர் குடும்பங்களுக்கு அரசு ஓடோடிச் சென்று பல லட்சங்களைக் கொடுத்து உதவுகிறது. ஆனால் சொந்தப பணத்தையே வாங்க முடியாமல் சேத்துக் கொண்டிருக்கும் இந்த போக்குவரத்துத் தொழிலாளிகளுக்கு அரசு உதவாமல் பேச்சு வார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்து கொன்று கொண்டிருப்பதை என்னென்று சொல்வது? இந்த நியாயமான வேலை நிறுத்தத்தின் அவசியம் கருதி உங்கள் கட்சியின் தொழில் சங்கமான BMS -ம் ஆதரித்துக் கலந்து கொண்டுள்ளது. ( முன்னறிவிப்பின்றி ஒரு சில இடங்களில் வெள்ளிக்கு கிழமையன்றே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதை நானும் கண்டிக்கிறேன்.) சகோதரி தமிழிசை அவர்களே சிந்திப்பீர்...   10:26:51 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X