Krish : கருத்துக்கள் ( 6 )
Krish
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2022
சினிமா பொன்னியின் செல்வன் இசைக்கருவிகளுக்காக இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான்...
பொன்னியின் செல்வன் கதைக்கு இளையராஜா தான் நல்ல சாய்ஸ். ராஜா போன்ற மாமேதையின் அருமை நம் இயக்குநர்களுக்கு புரிவதில்லை. பின்னனி இசை என்றாலே ராஜா மட்டும்தான்.   21:45:19 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
27
2020
சினிமா
அருமையான நேர்மையான விமர்சனம். இந்த விமர்சனத்திற்காக தினமலரை எப்படி பாராட்டினாலும் தகும். காவல் துறையை கேவலப் படுத்தி படம் எடுத்தால் "முற்போக்கு" என்று புகழ்வார்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அதில் இந்த படத்தின் இயக்குநரும் அடங்குவார். இது போன்ற தவறான கண்ணோட்டத்துடன் படம் எடுத்தால் நேர்மையான சில காவலர்களும் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் மேலும் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காவல் துறையினர் செய்யும் தவறுகளை படம் எடுப்பது தவறல்ல. அதற்காக ஒட்டுமொத்த காவல் துறையை களங்கப்படுத்துவது தவறு. இயக்குனரின் வன்ம எண்ணம்தான் இதை காட்டுகிறது. ஏன் நாளையே இயக்குனருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் காவல் துறையின் உதவியை நாட மாட்டாரா? அப்படி குறை சொல்ல ஆரம்பித்தால் நாட்டில் நடக்கும் எல்லா குறைபாடுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கு இயக்குனருக்கு தைரியம் இருக்கிறதா. இது போன்ற வன்ம எண்ணத்துடன் எடுக்கப்படும் படங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த பதிவு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு ஆதரவான பதிவல்ல. எல்லா காவலர்களும் கெட்டவர்கள் அல்ல, நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதே என் பதிவின் நோக்கம். மறுபடியும் சொல்கிறேன், இது போன்ற நேர்மையான விமர்சனம் எழுதிய தினமலரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.   17:31:32 IST
Rate this:
19 members
0 members
11 members

ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
சுயமரியாதையற்ற அடிமைத்தனத்திலே ஊறித்திழைத்தவனால் மட்டும்தான் பெரியாரை குறை கூற முடியும். இங்கு பெரியார் பெயரை கேட்டவுடனே சிலருக்கு அடியில் பற்றிக் கொண்டு எரிகிறது. காலம் காலமாக திராவிடத்தை ஒழிக்கிறேன் என்று கூறியவர்கள் எல்லாம் அவர்கள்தான் ஒழிந்தார்களே ஒழிய திராவிடத்தை ஒழிக்க முடியவில்லை. உண்மையில் உங்களுக்கு பெரியாரை ஒழிக்க ஆசையிருந்தால் இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகளை களையுங்கள். எல்லா மக்களையும் ஒன்றாகப் பாருங்கள். பிறகு பெரியாரை தானாக மறந்து விடுவார்கள். ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு இந்துக்களாக ஒன்றினைவோம் என்று கூறி விட்டு சக மனிதனை ஜாதியின் பெயரால் இழிவு படுத்துவதை எப்படி ஏற்க முடியும். இதையெல்லாம் ஒரு மனிதன் கூறினால் அவனை இழிவு படுத்துவதா. ரஜினிக்கு எல்லா இனத்திலும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவரோ ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அறிவாளிகள் என்று கூறி விட்டார். பெரியாரை விட்டுத் தள்ளுங்கள். அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகங்ளை வாசியுங்கள். அவர் இந்து மதத்தில் உள்ள குறைகளை புட்டு புட்டு வைத்துள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் படிக்க மாட்டீர்கள். ஏனென்றால் காலம் காலமாக அடிமையாக இருப்பதற்கே பழக்கப்பட்டவர்கள். ரஜினியை எல்லாம் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று நினைக்கும் உங்கள் மூளையை என்ன சொல்வது.   15:28:08 IST
Rate this:
17 members
0 members
5 members

ஜனவரி
23
2020
பொது நாத்திகர்களை வாங்குவாங்கென வாங்கிய கண்ணதாசன்
கண்ணதாசன் என்ன அம்பேத்கர், Stephen Hawkins ஐ விட பெரிய ஆளா? அவர் ஒரு சினிமா கலைஞர் அவ்வளவே. விஞ்ஞானி ஹாக்கின்ஸ் அவர்கள் நாத்திகவாதிதான். அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தை கடுமையாக சாடியவர்தான். அதற்க்காக அவர் என்ன கெட்டவரா? இந்து மதத்தில் உள்ள வர்ணாஸ்ரதர்மத்தை அவர் எதிர்த்தார். கண்ணதாசனுக்கு என்றைக்குமே சமூகப் பார்வை இருந்ததில்லை. பெரியார் வசதியான குடும்பத்தில் பிறந்து சமூக நீதி காக்க வந்தவர். அம்பேத்கர் அவர்களே பெரியாரை என் நண்பர் என்று புகழ்ந்துள்ளார். அதனால் கண்ணதாசன், ரஜினி போன்றோருடைய ஆஃபாயில் கருத்துக்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நானும் இந்து மதத்தைச் சார்ந்தவன்தான். கடவுள் எதிர்ப்பாளன் அல்ல. ஆனால் பெரியாரைப் பிடிக்கும். இங்கு பெரியாருக்கு ஆதரவாக பேசும் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். அதுதான் பெரியார். பெரியாரை வெறும் கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் சுருக்குவது தவறு. இங்கு மனிதத்தை தவிர புனிதம் வேறொன்றும் இல்லை.   09:28:23 IST
Rate this:
35 members
0 members
5 members

ஜனவரி
21
2020
சம்பவம் சிவகாசி அருகே 3ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை
என்ன ரொம்ப அறிவுபூர்வமாக பேசுவதாக நினைப்போ.   14:22:47 IST
Rate this:
7 members
0 members
0 members

ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
ரஜினி யாருக்கு கைப்பாவையாக உள்ளார் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ரஜினியின் படங்களை அனைத்து மக்களும் விரும்பி பார்த்தார்கள். ஆனால் அவரோ குறிப்பிட்ட பிரிவினர் அறிவாளிகள் என்ற தோணியில் பேசினார். இனிமேல் இவர் படங்களை யாரும் பார்க்கப் போவதில்லை. இவர் அரசியலுக்கு வந்தால் பூஜ்ஜியம்தான். இவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். அசிங்கப்பட வேண்டும். அப்போதும் இவரை பின்னால் இருந்து இயக்குபவர்களுக்கு அறிவே வராது. நான் தீவிர ரஜினி ரசிகன். ஆனால் என்றைக்கு ஒரு குறிப்பிட்ட பத்திரிகை படிப்பவர்கள் அறிவாளிகள் என்று கூறினாரோ அப்போதே இவர் படங்களை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். மனிதனாகப் பிறந்தால் சுயமரியாதை அவசியம். அது ரஜினிக்கு இல்லை.   13:49:10 IST
Rate this:
26 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X