Girija : கருத்துக்கள் ( 1955 )
Girija
Advertisement
Advertisement
Advertisement
மே
19
2019
வாரமலர் ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (3)
அமெரிக்காவில் வசித்தவள் என்ற முறையில் சொல்லுகிறேன் அங்கு பெருமைப்பட என்று ஒன்றும் இல்லை. வாழ்க்கை மிகவும் இயந்திரத்தனமானது. இங்கிருந்து அங்கு சென்றவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் விடுமுறைக்கு குடும்பத்துடன் வருகின்றனர், சில குடும்பங்களில் கணவனோ அல்லது மனைவியோ மட்டும் தான் எப்போதாவது வருவார்கள் சேர்ந்து வருவதே இல்லை காரணம் செலவு அதிகம், சிங்கப்பூர் சூப்பர், கல்வித்தரம் இந்தியா பெட்டர், பெரும்பாலான அப்பா அம்மாக்களுக்கு தங்க கரிசன அழைப்பு குழந்தைகளை பார்த்துக்கொள்ளவதற்கு தான்.   16:02:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
"நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே." கந்தர் அலங்காரம் படியுங்கள்.   14:30:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
சிலர் வந்தால் அல்லது வருகிறேன் என்று சொன்னாலே ஒரு உற்சாக வைபரேஷன் தொற்றிக்கொள்ளும் ஒரு நாள் தங்குகிறேன் என்பவரை நாள்பட இருக்கச்சொல்ல வைக்கும், சிலர் வருகிறேன் என்று சொன்னாலே அதுவரை நன்கு நடந்துகொண்டிருந்த செயல்கள் தடைபடும், புது பிரச்சனைகள் தோன்றும், சொன்னது போல் அந்த நபர் வந்துவிட்டால் அவரது பேச்சையும் செயலையும் பொறுக்கமுடியாமல் சரி வந்தாச்சு பாத்தாச்சு கிளம்பு என்று சொல்ல தோன்றும், தாய் மண்ணைமதிக்க தெரியாதவர்களுக்கு மனிதர்களை மதிக்க தெரியாது அதனால் அவர்களுக்கு இப்படிப்பட்ட விருந்தோம்பல் தான் கிடைக்கும். சென்னையில் வீடு வாங்கிவிட்டால் என்ன? மகன்கள் ஏன் உங்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள பிரியப்படவில்லை? நேர்மையான மற்றும் நேர்மையற்ற ஆட்கள் எங்கும் உண்டு. கேரளாவில் ஒட்டு போட ஒருவரும் பணம் பெறுவதில்லை. தமிழகத்தில் பல இடங்களில் தனியார் இலவச அன்னதான கூடங்கள் உள்ளது, மதுரையில் கூட வள்ளலார் அடியவர் ஒரு பெண் தினமும் மூட்டைதூக்கும் மற்றும் கூலிஆட்களுக்கு மதியஉணவு இலவசமாக அளித்துவருவதாக பொக்கிஷம் பகுதியில் வந்தது. ஒருவரின் தனிப்பட்ட நடத்தைத்தான் அவருக்குண்டான சூழ்நிலையை தோற்றுவிக்கிறது, "க்ளோபல் வார்மிங் போல" அன்பு என்னும் மரம் செடிகளை பேணுங்கள், வாழ்க்கை வசப்படும்.   14:29:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
20
2019
சிறப்பு பகுதிகள் பதவி பந்திக்கு முந்தும் பா.ம.க., வேட்பாளர்கள்!
ஜாங்கிரி அதிகாரி ஏற்கனவே பிட் போட்டு வைத்திருக்கார்.   10:21:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
சினிமா ஒரு செருப்பு வந்துவிட்டது, இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்...
உன் மேல விழுந்த செருப்பை எடுத்து கூட்டத்தை நோக்கி திருப்பி வீசி இருந்தால் சூப்பராக இருந்திருக்கும். வடை போச்சே ? அந்த இன்னொரு செருப்பினால் செருப்படி உனக்கு சீக்கிரம் கிடைக்கும்.   10:14:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
18
2019
அரசியல் தேர்தல் ஆணையத்தில் மோடிக்கு சலுகையா? ஆணையர் அசோக் கடிதத்தால் சர்ச்சை
டெர்ரர் சேஷன் போன்ற ஒற்றை அதிகாரிதான் வேண்டும்   16:35:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் நான் அடிமையில்லை!
மூன்று தலைமுறை கதைகளில் இருந்து சம்பவங்களை எடுத்து கதையாக்கிருக்கிறரர். அண்ணன்கள் பொறுப்பாக தங்கைகளுக்கு திருமணம் செய்தது படிக்கவைத்தது எல்லாம் இரண்டாம் தலைமுறையில் 1990 க்கு முன், இப்போது பெரும்பாலான மம்மிகள் எல்லாம் வேலைக்கு போகிறோம், யார் முதலில் வீட்டுக்கு வருகிறாரோ அவர்தான் காபி மற்றவருக்கும் போட வேண்டும். பிரிஜ்ஜில் மீதம் உள்ள உணவுகளை அனுசரித்து இரவு மெனு அல்லது வெளியிலிருந்து ஆர்டர். குழந்தைகள் படிப்பு மேற்பார்வை, ஷாப்பிங் வேலைகள் இருவரும் சேர்ந்து தான் செய்ய வேண்டியுள்ளது .   14:55:46 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரிக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும் நீ இவ்வளவு தூரம் உன் தங்கைகளை முன்னேற்றிவிட்டாய் இன்னும் கொஞ்ச தூரம் தான் மீதம் உள்ளது . அவர்களை இப்பொழுது வேலைக்கு அனுப்பினால் படிப்பு பாதிக்கும் பிறகு அவர்களும் உன் போல ஏற்றுமதி கம்பெனியில் தான் சேரவேண்டும். நீ பாடுபட்டது எல்லாம் வேஸ்ட் அதனால் உன் தங்கைகளுக்கு குடும்பநிலையை புரியவைத்து நன்கு படிக்கும்படி அறிவுறுத்து. அரசு வேலை வங்கி வேலை போன்றவற்றில் தான் சேர வேண்டும் என்று உறுதி எடுத்து படிக்க சொல். உன்தங்கைகள் இந்த லட்சியங்களை அடைய இன்னும் மூன்று முதல் ஐந்து வருடம் ஆகலாம் உனக்கு அப்போது முப்பத்திரண்டு வயதாகும், அந்த சமயத்தில் உனக்கு வாழ்வில் வெறுமையான எண்ணத்தைக்கொடுக்கும், உன் சகோதரிகள் உனக்கு முன்பே திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டி பெறும் நிகழ்வும் ஏற்படலாம், ஏன் அவர்களும் உறவுகளும் உன்னை அலட்சிய படுத்தலாம், விசேஷங்களுக்கு சென்றால் ஏன் வந்தாய் என்று முகத்தை காட்டலாம் கல்யாணம் பிற விசேஷங்களுக்கு அழைப்புகள் அனுப்பாமல் கூட இருக்கலாம். ஆனால் உன் தியாகம் உனக்கு நல்ல வாழ்க்கையை பின்னாளில் அமைத்துக்கொடுக்கும். எந்தநிலையிலும் இரண்டாம், மூன்றாம் தாரமாக போகாதே. இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் தான் திருமணம் அமைகிறது. நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்த அலுவலகத்தில் திருமணம் ஆகாத நாற்பது வயதை நெருங்கிய ஒரு பெண் அதிகாரி இருந்தார், பார்க்கவும் நன்றாக இருப்பார், யாரிடமும் அளவாகத்தான் பேசுவார், குடும்பத்திற்க்காக தனது திருமணத்தை தவிர்த்துவிட்டதாக பிறர் சொல்வார்கள். அவரை பற்றி கிண்டலும் கேலியும் ஆண் பெண் இருபாலாரிடமும் அதிகம், இதை அவரும் உணர்ந்திருந்தார். அவருக்கும் ஒரு காலம் வந்தது, வரன் தேடி வந்தது ஐ ஐ டி ப்ரொபஸர் அழகான அஜித் கலர் மாப்பிள்ளை சமவயது முதல்தாரம் ஜாதக பொருத்தத்துடன் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர், ஒரே வாரத்தில் கல்யாணம் , அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பேறு. உடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களில் சிலருக்கு இன்றுவரை குழந்தை பேறு இல்லை . அதனால் கடமையை செய் பலனை எதிர்பாராதே. வாழ்த்துக்கள், வாழ்வில் நம் பாதங்களின் தடம் பதிக்க வேண்டும்.   14:23:03 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
@ர.ஐவண்ணம், போளூர், திருவண்ணாமலை, இதுபோன்ற மிக முக்கியமான கடிதங்களை போஸ்ட் ஆபீஸ் மூலம் பதிவு தபாலில் AD கார்டுடன் தான் அனுப்பவேண்டும். ஒரு வேளை கூரியரில் அனுப்பினால் சுய விலாசமிட்ட தபால் கார்டை இணைத்து, இந்த தபால் கிடைக்கபெற்றதற்கு ஒப்புகை அளிக்க வேண்டுகிறேன் என்ற கோரிக்கையுடன் அனுப்பினால் பெறுபவர் அதில் அலுவலக முத்திரையிட்டு எளிதாக தபாலில் சேர்த்துவிடுவார், ஆன்லைன் பார்சல் ட்ராக்கிங் இல்லாத கூரியர் கம்பெனிகள் மூலம் எதையும் அனுப்பக்கூடாது.   13:11:05 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
19
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
ஒருவர் திடிரென்று மயங்கி விழுந்தால் உடனடியாக மருத்துவரிடம் போவதுதான் பாதுகாப்பு மற்றும் பெரிய செலவுகளை குறைக்கும். அந்தநேரத்தில் குடும்ப டாக்டருக்காக காத்திருக்கமுடியாது முன்பு செய்த மருத்துவ பரிசோதனைகள் ரிசல்ட் களை வைத்து டாக்டரிடம் பிறகு போகலாம் என்று தள்ளி போட்டால் சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லிவிட்டு போவதற்கு சமம்.   12:53:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X