ponssasi : கருத்துக்கள் ( 358 )
ponssasi
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
5
2020
சம்பவம் ரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள்
விகேஷ் துபே நீ ஒன்றும் கவலைகொள்ளவேண்டாம்   17:23:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
2
2020
உலகம் ஹாங்காங் விவகாரம் ஐ.நா.,வில் கவலையை பதிவு செய்த இந்தியா
முதல் முறையாக சீனாவிற்கு எதிராக சர்வதேச அரங்கில் தனது எதிர்ப்பை இந்தியா பதிவுசெய்துள்ளது வரவேற்கத்தக்கது   13:55:41 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
3
2020
சம்பவம் ரவுடியை கைது செய்ய முயன்ற 8 போலீசார் சுட்டுக்கொலை
போலீஸ் அதிகாலை வருவது அவனுக்கு எப்படி தெரிந்தது, உடன் சென்ற காவலர்களின் மொபைல் போன் எண்களை ஆராயவேண்டும். இது தான் வளர்தகடா மார்பில் பாய்வது என்று சொல்லுவார்கள்.   09:16:21 IST
Rate this:
0 members
2 members
15 members

ஜூலை
3
2020
அரசியல் சாதாரண குடிமகனுக்கு ரூ.20 லட்சம் பிரியங்காவுக்கு ரூ.37,400!
இங்கு நிறையபேர் வாடகைக்கு வந்த வீட்டையே தனக்கு சொந்தம்னு சொல்லிக்கிட்டு திரியுறான்   09:12:02 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூலை
2
2020
சம்பவம் வியாபாரிகள் மரண வழக்கு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 2 போலீஸ் கைது
தப்பியோடியவன் பிடிக்கவந்த காவலர்களை தாக்கும்போது தற்காப்பிற்காக நான்கு ரவுண்டு சுட்டு கொல்லப்பட்டார் என்று செய்தி வந்திருக்கவேண்டும்,   10:25:48 IST
Rate this:
9 members
0 members
20 members

ஜூன்
30
2020
சம்பவம் மாஸ்க் அணியுங்கள் என கூறிய பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி
ஒரு குற்றவாளி கைதுசெய்யப்படவேண்டும் என்றால் அது ஊடகத்தில் வரவேண்டும் மக்கள் அதை பார்த்து காரி உமிழ வேண்டும் அப்போதுதான் அரசு அவர்களை கைது செய்யும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது பேராபத்து   10:14:53 IST
Rate this:
0 members
0 members
20 members

ஜூன்
30
2020
கோர்ட் சாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு
முதலில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை செல்லவேண்டும், சிறையில் அடைக்க உத்தரவு இட்ட நீதிபதி உட்பட. கூடுதலாக கடை திறந்திருந்தது தவறுதான், அதற்கு சிறைத்தண்டனையா? ஏன் அந்த நீதிபதி கேள்வியெழுப்பவில்லை. போலீஸ் எதை காட்டினாலும் கையேழுத்து போடுவாரா? சான்று அளித்த மருத்துவ விடுப்பில் போனது ஏன்? இவர்கள் யாரும் கடமையை செய்யவில்லை, இறந்து போன ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ் நோய் பரவல் பற்றி கவலை கொள்ளாமல் கடைதிறந்தது முதல் தவறு, அதற்காக காவல் நிலையம் அழைத்து சென்று விடிய விடிய அடித்தது இரண்டாவது குற்றம், விசாரிக்காமல் சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மூன்றாவது குற்றவாளி, சான்றளித்த மருத்துவர் நான்காவது குற்றவாளி, அனுமதித்த சிறைத்துறை அதிகாரி ஐந்தாவது குற்றவாளி, முதல்வருக்கு தவறான தகவல் அளித்த விஸ்வநாதன் ஆறாவது குற்றவாளி, பழனிச்சாமி இடத்தில ஸ்டாலின் இருந்திருந்தாலும் இப்படித்தான் இருப்பார், இவர்கள் என்ன கக்கன்நா? இல்லை காமராசரா? மனசாட்சிப்படி நடப்பார்கள் என எதிர்பார்க்க. நாமும் அவர்களை வீட்டில் முடக்கிவிட்டு தான் இவர்களை தேர்தெடுதோம் ஆக முதல் குற்றவாளி நாம் தான்.   10:40:54 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூன்
30
2020
கோர்ட் சாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு உயிரும் எடப்பாடி பழனிச்சாமியின் குடும்ப உறுப்பினர் உயிர்தான், பதவி மோகத்தில் இதை மறந்துவிட்டார் போலும். அவர் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் இப்படித்தான் இருப்பாரா? காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக பொறுப்பு வழங்கப்பட்டது பழனிச்சாமிக்கு தெரியுமா? சிறையில் அடைக்கும் முன் சான்று அளித்த நீதிபதியும், அரசு மருத்துவர் மீதும் குற்றத்திற்கு துணை போனதாக கருதி கைது செய்யவேண்டும். இனியாவது காவல் துறை மற்றும் நீதி துறை சீர் செய்ய வேண்டும்.   09:40:08 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூன்
30
2020
பொது தென் மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., மாற்றம்
காவல் துறை கண்ணியத்தை காக்கவேண்டிய கடமை ஒவொரு குடிமகனுக்கும் அரசுக்கும் உள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் நம்மை காப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து உள்ளம் நொறுங்கிப்போகிறது. இவர்களை வளர்த்து விட்டது நீதித்துறை, அந்த நீதித்துறை மாவட்ட நீதிபதியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டும் தொனியில் பேசுவது காவல் துறையின் அகங்காரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சாதாரண மனிதன் நிலையை பிணமாக கண்டோம். காலம் கடந்த நீதியும் இதற்க்கு ஒரு காரணம். அதை நீதித்துறை என்று சரிசெய்யும். வேலை செய்யாத காவலர்களை கண்டித்து பணிநீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது. இனியாவது தமிழகம் விடியட்டும், விழிக்கட்டும் நீதித்துறை, கறைபடிந்த காவலர்களை சிறையில் வைப்போம்.   15:09:03 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூன்
27
2020
சிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?
நான் சென்னை வந்து ஒரு பிராமின் ஆடிட்டர் இடம் வேலைக்கு சேர்ந்தேன் அங்கு என்னை தவிர அனைவரும் ப்ராமண வகுப்பை சேர்ந்தவர்கள், ஒருசில பிரச்சனைகள் இருந்தாலும் எனக்கு எல்லாம் சொல்லி குடுத்தார், எனது ஆர்வத்தையும், வேலையும் பார்த்து இரண்டு வருடங்களில் அந்த அலுவலகத்தில் என்னை மேலாளர் ஆக்கினார். அதன் பின் அவர் குடும்பத்தில் ஒருவராக ஆனேன். அவர் வீட்டில் எது நடந்தாலும் என்னை தவிர்த்து செய்யமாட்டார்கள், நானும் அவர்களது குடும்பத்திற்கு விசுவாசமாக இருபது ஆண்டுகளாக இருந்தேன், அவருக்கு வயது ஆகிவிட்டதால் அந்த அலுவலகத்திற்கு என்னை முதலாளியாகி அழகு பார்த்தார், அவரது உறவினர்கள் பலர் ஆடிட்டராக இருந்தும் இந்த அலுவலகத்தை விலை பேசினர், ஆனால் எதற்கும் சம்மதிக்காமல் எனது அனுபவத்தை மட்டுமே நம்பி முழு அலுவலகத்தையும் ஒப்படைத்தார். ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து எனக்கு அனைத்தும் சொல்லிக்கொடுத்தார் என்றும் எனது குரு அவரே.   10:22:11 IST
Rate this:
1 members
0 members
36 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X