இது twitter செய்த மடத்தனமான முடிவு. மோடி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கு தக்க தண்டனை கொடுத்து அந்த செயலியை அதனிடத்தல் வைக்க வேண்டும்.
21-பிப்-2021 23:07:01 IST
இப்படி வதந்தி பரப்பி அரசியல் செய்வதற்கு பதிலா பிச்சையெடுத்து பொழங்கடா வெறுப்பாகுது படிக்கறதுக்கே. ஒவ்வொரு டாக்டரும் செவிலியரும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விஞ்ஞானியும் துப்புரவு தொழிலாளரும் இரவு பாகால் பாக்காமே , மாசக்கணக்குல ஓய்வு இல்லாமே வேலை செய்யவேண்டி இருக்கு. ஏதோ இந்த தடுப்பூசி தக்க சமயத்துல வந்து மொத்தமாவோ ஏன் பாதியளவாவது சரி செஞ்சுதுன்னா ஓரளவுக்கு நாங்க நிம்மதி பெறலாம். இந்த சமயத்துல இந்த காங்கிரஸ் ஆளுங்க சும்மா ஒரு வேலைக்கும் ஆகாத கமெண்ட் அடிப்பது எரிச்சலூட்டும் வெட்க்கக்கேடு. முருகா இவர்களுக்கும் மனா நிம்மதி கொடப்பா
17-ஜன-2021 08:06:51 IST
அதென்ன கார்பொரேட் கம்பெனிகள்? கம்பெனிகள் இருப்பதினால்தான் நம் நாட்டில் இரும்பு தொழிற்சாலை, மோட்டார் தொழிற்சாலை, ஜவுளி துணிமணிகள், பிளாஸ்டிக் சாமான்கள், எல்லாவிதமான வாகனங்கள், தளவாடங்கள், மருந்து மாத்திரைகள், ரசாயன பொருட்கள் .....எல்லாம் உற்பத்தியாகின்றன, கொடிக்கணக்கானவர்களுக்கு வேலை வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது. கணினி மென்பொருள் மற்றும் மருந்து வகைகள் கார்பொரேட் கம்பனிகளால்தான் இவ்வளவு பெரிய இடத்தை உலகில் நமது நாட்டிற்கு கொடுத்து இருக்கின்றன. தொலைபேசி, டெலீவிஷன், மின்விசிறி என்று எதை தொட்டாலும் கார்பொரேட் கம்பெனிகள் இல்லையென்றால் சிறுதொழிலாலோ அல்லது குடிசைத்தொழிலாலோ நடக்குமா? சும்மா அரசியல் செய்வதற்காக உளறக்கூடாது
27-டிச-2020 19:04:22 IST
நான் படித்த பள்ளியில் மாணவர்களை நான்காக பிரித்து விளையாட்டு மற்றும் வினாவிடை, பேசிச்சுப்பபோட்டி போன்றவற்றை நடத்துவார்கள். அந்த நாலு என்ன தெரியுமா ? கலைஞர்கள் (ஆர்டிஸ்ட்ஸ்), விஞ்ஞானிகள் (சயின்டிஸ்ட்ஸ்), மறவர்கள் (வாரியர்ஸ்), தலைஞானிகள் (ஸ்டேட்ஸ்மேன்). பார்த்தல் உடனே தெரிந்துவிடும் இந்த நாலு விதமான குழுக்களுக்கு நான்கு விதமான அறிவுகள், குணங்கள் வேண்டும். அப்படிதானே வர்ணாஷ்ரமம் சொன்னதும்? இதில் என்ன ஒரு தவறிய என்றால், பிறவியால் மட்டும் என்று கொள்வது. உபநிசதுகளில் எவ்வளவு பேர் பிறவியால் ஒன்றாய் இருந்தாலும் வாழ்வும் வேறு குழுவின் வேலை செய்தார்கள் இன்ஜினீரிங் அறிவு சார்ந்த தொழில்தான் - அது அந்தணர்க்கு பொருந்தும், ஆனால் அந்தணர் பிறந்தவர்க்கு மட்டும் என்று சொல்ல கூடாது ஆனால் கலைஞர்கள் இன்ஜினீர் ஆகா முடியுமா ? அதே போல் அந்தணர் போர்க்குணத்துடன் சண்டைதான் போடா முடியுமா? ஏதோ ஒரு விதி விலக்கான சமயத்தில் அவர்கள் வாளேந்துவார்களே ஒழிய அதை தொழிலாக கொள்ள மாட்டார்கள். சரி, சூத்திரர்களை ஏன் மட்டமாக நினைக்கவேண்டும்? வர்ணாஷ்ரமம் அவர்களை மட்டமாக கூறவே இல்லை - மற்ற மூன்றை போல அதுவும் ஒரு இயற்கையான பாகுபாடுதான். கால் என்றால் மட்டம் என்று யார் சொன்னது ? எல்லாம் இந்த அறிவிலி அரசியல்வாதிகள் மற்றும் வெறுப்பை வளர்த்து பிழைப்பு நடத்தும் ஈவேரா குvizhaம்பல் செய்யும் கைக்கூலி வேலை
27-டிச-2020 18:50:47 IST
அரசு அனைத்து வியாபாரங்களில் இருந்தும் வெளியேற வேண்டும். வர்த்தகம், உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட வேண்டும். அரசு இந்த தனியார் துறைகளை சட்ட திட்டங்கள் வகுத்தும், சீரான சமத்துவமான கண்காணிப்பை உருவாக்கவேண்டும். இப்படி செய்யாத பட்சத்தில், நமது மக்கள் / இளைஞர்கள் அரசு வேலைகளையே நாடி உருப்படியாக ஒன்றும் கண்டு பிடிக்காமல், உருவாக்காமல் தற்போது நடப்பது போல லஞ்சதிலேயே உழல்வார்கள். இதை ஒழுங்காக மக்களுக்கு விளக்கி சொல்ல மத்திய மாநில அரசுகள் தமது அமைச்சர்களுக்கு வேண்டிய பயிற்சி அளிக்க வேண்டும்.
16-டிச-2020 09:02:59 IST
நல்லவர், நல்லவர் அல்லாதோர் தோல் நிறத்தால் இல்லை. ஏன் இப்படி ஒரு மட்டமான எண்ணம்? நான் 30+ வருடங்களாக அமெரிக்காவில் தெற்கு வடக்கு இரு பகுதிகளிலும் இருக்கிறேன். நல்லவர்களும் மட்டமானவர்களும் எல்லா வகுப்பிலும் பார்த்திருக்கிறேன். அடிமைகளாக அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அடித்து உதைத்து, கப்பலில் சங்கிலியால் பிணைத்து கறுப்பினத்தவரை பருத்தி கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதற்காக கடத்தி வந்துவிட்டு அவர்களின் சந்ததிகளுக்கு கோபம் வரக்கூடாது என்று எதிர்பார்க்க முடியுமா? நாம் இந்தியாவில் வெள்ளையரே வெளியேறு என்று போராட்டம் ஏன் நடத்தினோம்? அடிமைத்தனம் கூடாது என்றுதானே ? இன்றுவரை முகலாயர் மீதும் ஆங்கிலேயர் மீதும் நமக்கு சிறிதளவேனும் கோபம் இருக்கிறதா இல்லையா ?
14-டிச-2020 08:34:31 IST
எது முதல், எது இரண்டாவது என்பது முக்கியமில்லை. இரண்டு மொழிகளும் நமது கண்கள். இவர் நன்றாக படித்து, பட்டம் வாங்கி, ஒரு கொள்கை பிடிப்போடு இருப்பது நமக்கு மகிழ்ச்சி தானே. சும்மா பழையது பெரியது என்று வெட்டி பேசுபவர்களும் அம்மொழியை கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம் - அப்படி செய்தால் புரியும் பல உண்மைகள்
26-நவ-2020 08:15:20 IST
தில்லி விமான நிலையத்தில் கண்கூடாக கண்டது: வரும் பயணிகள் ஒரு ஹாலில் நான்கு மேஜைகளுக்கு முன்னால் நான்கு வரிசைகளில் நான்கு பரிசோதனைகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள். ஒன்றில் ஆரம்பித்து நான்கு வரிசைகளில் ஒவ்வுருவரும் நின்று வரவேண்டும். வரிசைகளில் நிற்க இடமில்லாமல் ஒருவரை ஒருவர் இடித்திக்கொண்டுதான் நிற்கிறார்கள் . கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு ஐம்பது அறுபது சீருடை பணியாளர்கள் நிற்கிறார்கள் - ஆனால் அவர்கள் ஒன்றும் செய்வதில்லை, தமக்குள்ளேயே சிறு சிறு குழுக்களாக வாமபாதித்துக்கொண்டும், டீ குடித்துக்கொண்டும், மொபைலில் என்னமோ செய்துகொண்டும் நிற்கிறார்கள். மேஜைகளுக்கு பின்னால் இருக்கும் அதிகாரிகளை கேட்டால் "சார் அது அட்மினிஸ்டரேஷன் வேலை, எங்கள் சொல்லாதீர்கள்" என்கிறார்கள். நமது மக்களும் அறிவில்லாமல் வரிசைக்கு முன்னால் முந்துகிறார்கள். இந்த கேவலமான விமான நிலையத்துக்கு ஏண்டா வந்தோம் என்றாகிவிட்டது. இத்தனைக்கு நாட்டின் தலை நகர் விமான நிலையம் என்று பெயர்
24-நவ-2020 09:07:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.