இளங்கோ : கருத்துக்கள் ( 429 )
இளங்கோ
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2016
உலகம் ஹிந்து மதத்தின் ரசிகன் நான்டொனால்டு டிரம்ப் பெருமிதம்
இவர் இடத்துக்கு தகுந்தாற்போல் பேசுவதை போல் தெரிந்தாலும், இந்துக்களை பொறுத்தவரை வேலை வாய்ப்பு சம்பந்தமாக தான் இவருடைய எதிர்ப்பு தெரிகிறது. இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு காரணம் அவர்கள் திறமையும், உழைப்புமே என்பது அவருக்கு தெரியாததல்ல. இது எதிர்க்கட்சி நிலை.ஆளும் கட்சியானால் அமெரிக்கர்களும் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டி வரும்.இந்தியர்களுக்கு ஓரளவு மட்டுமே பாதிப்பு ஏற்படும்.   12:22:04 IST
Rate this:
3 members
1 members
13 members
Share this Comment

அக்டோபர்
16
2016
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் கால்பதிப்போம் பா.ஜ., செயற்குழுவில் திருப்புமுனையா ?
BJP மத்திய அரசு நிலைப்பாட்டை தமிழகத்துக்கு விளக்குவதை விட, மத்திய அரசுக்கு தமிழகத்தின் காவிரி உள்ளிட்ட பிரச்னைகளின் முக்கியத்துவத்தை மத்திய அரசுக்கு உணர்த்துங்கள். அது தான் இப்போதைய தேவை.   12:03:15 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
13
2016
பொது பொது சிவில் சட்டம் கூடாது முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு
இந்து மதத்தில் உள்ளவர்கள், அதே மதத்தில் உள்ள சிலர் ஏற்று கொள்ள வில்லை என்றால், மதத்துக்கு வேண்டாதவர்கள் ஆகி விடுவார்களா? உரிமை என்பதை நாம் தான் எடுத்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்க கூடாது. தன்னம்பிக்கை இருந்தால் பிறர் தயவு தேவை என்ற எண்ணமே வராது. பிறர் உதவியை எதிர்பார்த்தால் ( குறிப்பாக அரசியல் வாதிகள் ) அவர்கள் சுய லாபத்துக்கு தான் பலியாக நேரிடும். முதலில் அரசியல் சட்டத்தில் உள்ள உரிமைகளை தெரிந்து கொள்ள முயற்சித்தால் போதும்.   16:28:42 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2016
பொது தேவைப்பட்டால் மீண்டுமொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் ராணுவம்
தேவைப்பட்டால் சர்ஜிக்கல் தாக்குதல் நடக்கும் என்று ராணுவ அதிகாரி சொல்வது பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை மற்றும் நம் மக்களுக்கு விளக்கம் மட்டுமே. வேறு தகவல்கள் இதில் கிடையாது, இது விளம்பரமும் இல்லை.   12:23:04 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
13
2016
பொது பொது சிவில் சட்டம் கூடாது முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு
இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களை போல இந்து மதத்துக்கு ஒரு பொதுவான வலுவான அமைப்பு இல்லை. அதற்க்கு காரணம் இந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி/பாரம்பரியம் உள்ளவர்களின் வாழ்க்கை முறைகள் இணைந்ததாக இருப்பது தான். ஆனாலும் அனைவருக்கும் பொதுவான சில அடிப்படை அம்சங்கள் இருப்பது தான்.அது தான் இந்துக்கள் அனைவரையும் பன்முக தன்மை இருந்தாலும் ஒன்று படுத்துகிறது. இந்து மதத்தை தோற்றுவித்தவர்கள் இல்லை.. பல ஆயிரம் வருடங்களை கடந்து இன்றய நிலையை எட்டியிருக்கிறது. இதன் காரணமாகவே காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அவ்வப்போது ஏற்று கொண்டிருக்கிறது.ஜாதிகள் தவறில்லை, வேற்றுமைகளை தான் களைய வேண்டும்...தீண்டாமை ஒழிக்க சட்டம் இருக்கிறது, ருசி கண்ட பூனைகளாக சில பிரிவினர் ஆதிக்க மனப்பான்மையை விட்டு தர மறுப்பதும், ஒட்டு வங்கிக்காக அரசாங்கம்/அரசியல் கட்சிகள் தீவிரமாக சட்டத்தை கடைபிடிக்காததும் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்காததற்கு காரணம். மேலும் தாழ்த்த பட்டவர்களும் சமத்துவம் தங்கள் உரிமை என்ற எண்ணத்துடன் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்.-. பொது சிவில் சட்டம் என்பது மத சார்பற்ற ஒரு நாட்டுக்கு நிச்சயம் அவசியம். அது ஒரு மத கோட்பாடுகளை மட்டும் மற்றவர்கள் மேல் திணிப்பதல்ல. இந்து மதம் பொதுவான ஒரு சட்டத்தை ஏற்று கொள்ளும், அதே போல் அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள பிற மதங்களும் இதை கவுரவ பிரச்னையாக கருதாமல் ஏற்று கொள்ள வேண்டும். இப்போது கருத்து தான் கேட்க பட்டுள்ளது, அனைவரும் ஒப்பு கொள்ளும் வகையில் ஒரு பொது சட்டம் உருவாக அதிக காலம் தேவை படலாம், ஆனால் உருவாக்க படுவது தான் நல்லது., மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அனைவரும் உணர வேண்டும்.   13:29:40 IST
Rate this:
3 members
0 members
53 members
Share this Comment

அக்டோபர்
13
2016
பொது பொது சிவில் சட்டம் எதற்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பு
இது அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட ஒன்று தான். மேலும் உச்ச நீதி மன்றமும் வலியுறுத்தி வரும் சட்டமும் கூட. ஆனால் BJP சொல்லும் போது மட்டும் சந்தேகம் வந்து விடுகின்றது. தற்போது மக்கள் கருத்துக்களை தான் அரசு கேட்டிருக்கிறது. சொல்ல விரும்புவதை அங்கே சொல்லவும்.   15:30:36 IST
Rate this:
7 members
0 members
61 members
Share this Comment

அக்டோபர்
12
2016
பொது அரசு பஸ்சா இது... பயணிகள் ஆச்சரியம்! ஓட்டுனர், நடத்துனருக்கு குவியுது சபாஷ்
செய்யும் தொழிலே தெய்வம் என்று செயல்படும் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துக்கள்.   15:18:51 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

அக்டோபர்
12
2016
அரசியல் எல்லா புகழும் மோடிக்கேஅமைச்சர் பரீக்கர் பெருமிதம்
இந்திய ராணுவம் என்றுமே திறமையானது தான். சுதந்திரம் கிடைத்த புதிதில் லாகூர் வரை இந்திய ராணுவம் சென்றது அன்றய சூழ் நிலையில் இராணுவமே செய்த முடிவு. நேரு அவர்களுக்கு அது தெரிந்த பின் படேல் அவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய எல்லைக்கு திரும்ப உத்தரவிட்டார். ஆனால் அவருடைய பெருந்தன்மைக்கு பாகிஸ்தான் தரப்பில் என்ன மரியாதை கிடைத்தது? அன்று நேரு அவர்கள் அதை தடுத்திருக்கா விட்டால் அதை வைத்து பாகிஸ்தான் இடம் பேசி POK பறிபோனதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும். மோடி அவர்களும் முதல் இரண்டு வருடங்களில் பாகிஸ்தானுடன் பேசவே விரும்பினார். அது பலனளிக்காமல் போன போது தான் ஒரு வாரமாக திட்டமிட்டு இந்த தாக்குதலை இந்தியா செய்திருக்கிறது. கடந்த இரு வாரங்களாக பாகிஸ்தானுடைய பேச்சும் நடவடிக்கைகளும் போதும் வாங்கிய அடி எப்படி பட்டதென்று அறிய.   13:02:29 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
10
2016
அரசியல் பொறுப்பு முதல்வர் குறித்து அ.தி.மு.க., முடிவு செய்ய வேண்டும் வெங்கையா
எந்த ஒரு பதவிக்கும் சில நாட்களுக்கு மேல் நேரடியாக கவனிக்க முடியாத நிலையில் பொறுப்பாளரை நியமிப்பது சாதாரண நடைமுறை. இதை ஏதோ சொத்து பரிமாற்றம் போலோ அல்லது, உரிமை பறிபோவது போலோ கருத வேண்டியது இல்லை. மந்திரிகளே கவனித்து கொள்ள முடியும் என்றால்,முதன்மை செயலாளர் தலைமையில் மற்ற அதிகாரிகள் கூட தான் (மந்திரி சபையே இல்லாமல்) இன்னும் சிறப்பாகவே செய்ய முடியும் என்றும் சொல்லலாம். அது சரியாகுமா?   12:44:29 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
9
2016
அரசியல் இந்திய ராணுவ தாக்குதலில் லஷ்கர் அமைப்புக்கு... செம அடி! சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து பரபரப்பு தகவல்கள்
இன்னும் முழு உண்மை வெளிவர வில்லை. JEM க்கு எவ்வளவு பாதிப்பு என்று தெரியவரும் போது நம் ராணுவம் முதலில் சொன்ன 30-35 சரியான தகவல் என்று அறியப்படும்.   12:30:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X