ஜெருயான் யோகராஜா : கருத்துக்கள் ( 6 )
ஜெருயான் யோகராஜா
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2018
சம்பவம் தமிழிசை முன் பா.ஜ., வுக்கு திட்டு விமானத்தில் வந்த மாணவி கைது
உலக வழக்கத்தையும் உண்மையையும் சொன்னால் ஏன் பலருக்கு உரைக்கின்றது. நான் திராவிடக் கட்சிகளை விட பாஜக வையும் பிரதமர் திரு மோடி அவர்களையும் மதிக்கின்றேன். ஆனால் என் மனசாட்சிப்படி தவறு என்று உணரும்போது அதை தவறென உரைக்கின்றேன். மேலும் நீங்கள் சொல்வது உங்களது கருத்துக் சுதந்திரம். அது தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல் என்னுடைய கருத்துக்கு மறுகருத்தாக சொன்னால் அது பேச்சுக்கு அழகாக இருக்கும். அதைவிட கருத்தே இல்லாத காரணத்தால் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் இரத்தபாசம் எனப் பச்சை குத்துவது முட்டாள்தனம்.   10:33:35 IST
Rate this:
2 members
0 members
3 members

செப்டம்பர்
4
2018
சம்பவம் தமிழிசை முன் பா.ஜ., வுக்கு திட்டு விமானத்தில் வந்த மாணவி கைது
என்ன தான் இருந்தாலும் ஒருவரின் கருத்து சுதந்திரம் ஒரு ஜனநாயக நாட்டில் மிகவும் பாதுகாக்க வேண்டிய உடைமை. அவரது கருத்துக்கு அவரது விபரங்களையாவது எழுதி வாங்கி விட்டு அவரை விட்டிருக்கலாம். ஆனால் அவரைக் கைது செய்து கொலைக்குற்றவாளி போல அழைத்துச் செல்வது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. மேலும் இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு பிணி போன்றது. அதை பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை அம்மையார் அறிந்திருக்க வேண்டும். காவல்துறை அரசியல்வாதிகளின் ஏவல்துறையாகித் செயல்பட்டிருக்கின்றது.   10:38:38 IST
Rate this:
24 members
0 members
15 members

ஆகஸ்ட்
24
2018
அரசியல் ராகுல் படங்களை ரீடுவீட் செய்து பா.ஜ., கிண்டல்
ஜெர்மனியில் ஹிட்லர் படம் பொது இடங்களில் வைப்பது கடுங்குற்றம். அதேபோன்று அவரது கருத்துக்களை வெளிப்படையானது தெரிவிப்பதும் குற்றம். ஜெர்மனியைப் பொறுத்தவரை ஹிட்லர் தான் உலகிலேயே மிகப் பெரிய குற்றவாளி. அவர் செய்த பாவங்களுக்கு இன்னமும் பரிகாரம் தேடிக்கொண்டிருக்கின்றனர் ஜெர்மனி மக்கள்.   13:16:07 IST
Rate this:
113 members
0 members
16 members

பிப்ரவரி
8
2018
சினிமா 90 வயது கிழவராக மாறினார் திலீப்.....
இவர் செய்த குற்றங்களை மக்கள் மறக்கும்படி செய்வதற்கும் திரும்பவும் பழையபடி கனவு காணும் வாழ்க்கைக்கு திரும்புவதற்கு, அவரது செய்தியை இங்கே பிரசுரித்து வழியமைத்த தினமலருக்கு ஆயிரம் நன்றிகள்.   12:14:50 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
8
2018
சம்பவம் தாயை அடக்கம் செய்ய வழியின்றி தவித்த சிறுவர்கள் - நோயாளிகளிடம் உதவி கேட்ட பரிதாபம்
உயிர் பதறுகிறது என்ன நிலைமையடா இந்த மண்ணில்? தினமலரும் தனது படங்களை எடுப்பதற்காக ஓடுபடக்கருவி முன் சிறுவர்களை பிச்சையெடுக்க வைத்து அதை இசையுடன் வியாபார யுக்திக்குப் பயன் படுத்திவிட்டார்கள். எந்த உலகில் வாழ்கின்றோம் என்றே தெரியவில்லை. ஒரு பக்கம் எல்லையற்ற செல்வம். மறுபக்கம் கரையற்ற வறுமை. அதற்கு இந்தச் சிறுவர்கள் உதாரணம். சில செய்திகள் கணவன்மார் தமது மனைவியரின் உடலை அடக்கம் செய்வதற்கு வழியற்று இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தச் சிறுவர்களது நிலைமை இன்று வாயடைக்க வைத்து விட்டது. மரணம் என்பது இயற்கை. ஆனால் இது ஒரு அவமரணம். இது மனிதனால் கொண்டு வரப்பட்ட செயற்கை. இந்தப் பெரிய நாட்டில் ஒரு தாயை அடக்கம் செய்வதற்கு சொந்தங்கள் தான் வேண்டுமா? ஒவ்வொருவரும் பாரதத் தாயின் பிள்ளைகளில்லையா? அங்கே உயிர் பிரிந்திருப்பது உன் சகோதரியில்லையா? என்னய்யா இந்த மானிடர்கள்?   12:05:31 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
14
2018
அரசியல் தொண்டர்களை பார்த்து கையசைத்தார் கருணாநிதி
இந்திய பூமியிலோ அல்லது இலங்கையிலோ வாழும் கிறிஸ்தவர்கள் சில நூற்றாண்டுகளிக்குள்ளேயே மதம் மாற்றப்பட்டவர்கள் அல்லது இந்தக் காலகட்டத்தில் தாமாகவே மதம் மாறியவர்கள். அவர்கள் மூதாதையர் இந்துக்களாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். அப்போதே சாதிகள் வரையறுக்கப் பட்டு மக்கள் அதைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதிலே சிலர் பயன்கொண்டதும் பலர் வழிகொண்டதும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலைமை மதம் மாறிய பின்னரும் சிலருக்குப் பயனளித்ததால் தொடர்ந்து பேணப்பட்டு வந்து இன்று வரை நம்மை ஆட்டிப்படைக்கின்றது. மனிதனாகப் பிறந்த எவனும் தன் சுயபுத்தியோடு சிறிது மனிதத்தையும் சேர்த்து சிந்தித்தால் இந்த சாதி மதப் பிரிவினைகள் எவ்வளவு முக்கியமற்றவை எனப் புரியும். நானும் எனது வயதையொத்தோரும் எங்களுக்கடுத்ததாக வருவோருமாவது இவற்றை விடுத்து மனிதத்தைப் போற்ற முயற்சிக்கின்றோம்.   20:19:11 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X