Subramaniyan Balachandran : கருத்துக்கள் ( 69 )
Subramaniyan Balachandran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2020
உலகம் ஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம்
டிரம்ப் மிக பெரிய வெற்றி பெறுவார். சென்ற தேர்தலைவிட அதிக பொதுமக்கள் வாக்குகளையும்,அதிகமான எலெக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும் பெற்று , வெற்றிபெறுவார். தேர்தல் நாளுக்கு முன்னரே , சுமார் ஆறுகோடிக்கும் மேலான வாக்காளர்கள் கொரானா காரணமாக முன்கூட்டியே வாக்கு அளித்துவிட்டனர். இது மிகப்பெரிய சாதனை அளவாகும். மிக அதிக சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் . எனவே டிரம்ப் பெரு வெற்றி உறுதி .   11:42:49 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
28
2020
அரசியல் அ.தி.மு.க., செயற்குழு கூடியது
நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கேட்பதும், இருமொழிக்கொள்கை என்பதும் அதிமுகவை செல்லாக்காசாக்கிவிடும் . இன்னொரு திமுக வேண்டாம் என்றுதான் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கிறார். திமுக என்ற பிரிவினை வாத குடும்ப அரசியல் செய்யும் தீயசக்தி என்ன சொல்கிறதோ அதை அப்படியே பின்பற்றி வழிமொழிவதற்கு அதிமுகவே தேவை இல்லை. மக்கள் அதிமுகவை கைவிட்டு ரஜினி பக்கம் போவது அதிகரித்து, அதிமுகவே மே 2021 இல் காலி ஆவதற்கு மட்டுமே இது வழிவகுக்கும்.   13:13:38 IST
Rate this:
7 members
0 members
11 members

ஏப்ரல்
28
2020
உலகம் மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?
லால்பகதூர் சாஸ்திரியுடன் பிரபாகரனை ஒப்பிடுவது சரி அல்ல . பிரபாகரன் இலங்கை தமிழர்களிலேயே அமிர்தலிங்கம் போன்ற அமைதி வழி தலைவர்கள் பலரை கொன்றதுடன், இந்தியாவுக்கு ஆள் அனுப்பி, பத்மநாபா மற்றும் 15 பேரையும், ராஜீவ் காந்தி மற்றும் 20 பேரையும் படுகொலை செய்து , விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் இருந்த ஆதரவை இழந்தார் .ராஜீவ் கொலைக்கு பின்னர் உலக நாடுகளில் பெரும்பாலானவை புலிகளுக்கு எதிராக அணிதிரண்டு , பிரபாகரனுக்கு எவ்வித உதவியும் கிடைக்காமல் செய்துவிட்டன .இதில் அமெரிக்காவை மட்டும் குற்றம் சொல்வது சரியாக இருக்காது .   19:23:40 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
28
2020
உலகம் மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?
அமெரிக்காவும், ரஷ்யாவும் எதிரிகளாக இருந்தன. ஆனால் உலகப்போரின் போது, இருநாடுகளும் ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் எதிராக ஒன்று சேர்ந்து உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்தன . வட கொரிய அதிபர் இதயநோயால் உடல் பாதிக்கப்பட்டு செயல் இழந்துவிட்டார் என்று செய்திகள் மறைமுகமாக கூறுகின்றன. ரஷ்யா பல துண்டுகளாக சிதறி சுமார் 15 க்கும் மேற்பட்ட நாடுகளாக உடைந்து போனபின்னர், ரஷ்யாவில் கம்யூனிசம் காணாமல் போனது . இப்போது இருக்கும் ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடு அல்ல .ஜனநாயக நாடும் அல்ல .அங்கு புடின் வைத்ததே சட்டம் . ரஷ்ய பார்லிமென்ட் புடின் சொல்வதற்கு ஆமாம் சாமி போடும் ஒரு அமைப்பு தான் . எனவே மறைமுக சர்வாதிகார ஆட்சிதான் அங்கே நடக்கிறது . வடகொரியா, சீனா ஆகிய இரு நாடுகளிலும் பத்திரிகை சுதந்திரம் கிடையாது . உண்மைகளை எழுதினால், அது அரசுக்கு பிடிக்காத தகவலாக இருந்தால் உடனே பரலோகத்துக்கு அனுப்பிவிடுவார்கள் . எனவே கொரானா பாதிப்பில் பல லட்சம் பேர் இறந்ததை மூடி மறைத்து , சீனா தில்லுமுல்லு செய்ததை போல, வடகொரியாவுக்கு கொரானாவில் எவ்வளவு பாதிப்பு என்பது யாருக்கும் தெரியாது அது ஒரு மர்ம குகை போல .   19:09:35 IST
Rate this:
0 members
1 members
3 members

மார்ச்
28
2020
உலகம் கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
2.9 மில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் 2100 கோடிக்கு மேல் வரும். இன்று ஒரு அமெரிக்க டாலர் 74 ரூபாய் 88 பைசா ஆகும்.   15:23:43 IST
Rate this:
11 members
1 members
3 members

நவம்பர்
2
2019
பொது பாக்தாதியை வேட்டையாடிய பெல்ஜியம் மலினாய்ஸ் ரக நாய்
வேட்டை நாய்க்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட பக்தாதி பல லட்சம் மக்களைக் கொன்ற கொலைகாரன்.   20:49:34 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
2
2019
சம்பவம் ‛பிகில்-க்காக ‛ஜெயில் கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர் ‛கம்முனு, ஜம்முனு விஜய்
என்ன வேடிக்கை ஆக இருக்குது. பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கும் விஜய் ரசிகர்களை குறைந்தது பத்து வருடம் சிறையில் தள்ளுங்க.   20:46:27 IST
Rate this:
0 members
0 members
14 members

அக்டோபர்
20
2019
சம்பவம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது
அவர் கைது செய்யப்பட்டுள்ளது விளம்பரப்பலகையில் தமிழில் எழுத சொன்னதற்காக அல்ல. பிரிவினை நச்சுக் கருத்துக்களை முகநூலில் பதிவு செய்ததற்காக என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.   19:26:02 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
4
2019
கோர்ட் மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிக்க தடை
அப்பா , no such god , தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகள் தான் வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார்கள். முன்பு காகிதத்தில் உள்ள அச்சிடப்பட்ட வாக்கு சீட்டுக்களை எண்ணும் போது, அதில் சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது வாக்கு எண்ணிக்கை என்பது மின்வாக்கு பதிவு இயந்திரம் காட்டும் ரிசல்ட் பட்டனில் தெரியும். அதனை இருமுக்கிய போட்டியாளர்களின் பிரதிநிதிகளும் சரிபார்த்துத் தான், கை எழுத்து போடுகிறார்கள். எனவே இதில் தவறு நடக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. நீ சொல்வதைப் பார்த்தால் ஆளும் கட்சியின் கையில் தான் நீதிமன்றம் இருக்கிறது என்றால், திமுக வேட்பாளர் எதற்காக உயர்நீதிமன்றம் செல்லவேண்டும்? நீதி கிடைக்காது என்று ஒதுங்கி போகவேண்டியது தானே? 2009 -ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே பசி இப்படி முறைகேடுகள் செய்து வெற்றிபெற்றார் என்று வழக்கு நடந்தது. பத்துவருடம் முடிந்து அவர் இப்போது இரண்டு மாதங்களாக திகார் சிறையில் டெல்லியில் தவம் இருக்கிறார். ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பு இன்னமும் வந்ததாக தெரியவில்லை. உன்னை போல வாய்க்கு வந்தபடி, கெட்டநோக்கத்துடன் பதிவுகள் போடுவதால் தான் , தெய்வம் மிக பெரிய தண்டனையை தரும்.   15:47:20 IST
Rate this:
12 members
0 members
7 members

செப்டம்பர்
23
2019
பொது பாலாகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி ராணுவ தலைமை தளபதி
பாகிஸ்தான் பாலக்கோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அமைத்தால் எவ்வித தயக்கமும் இன்றி உள்ளே புகுந்து அவற்றை அழிக்கவேண்டியது நமது கடமை.   17:42:48 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X