நல்ல முயற்சி...இதுபோல அனைத்து நீர்நிலைகளிலும் செய்யப்பட வேண்டும்...ஏனெனில் சில ஆண்டுகளில் சென்னை ஒரு நீரில்லா வறட்சி பகுதியாக மாற வாய்ப்புண்டு என சொல்லப்படுகிறது...
14-நவ-2019 07:48:23 IST
இந்த நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரவேண்டும்.....பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலக்காமல் நிலத்துக்குள்ளேயே சென்றால் சர்வ சாதாரணமாக மேலும் பல அடிகள் உயர்த்த முடியும்....அரசின் செயல்கள் மட்டுமல்லாமல் பொது மக்களாகிய நாமும் இவைகளை நமது வீடுகளிலேயே செய்ய துவங்கலாம்.
14-நவ-2019 05:37:05 IST
உள்ளாட்சி தேர்தலுக்காக மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளா? கல்வியோடு விளையாடாதீர்கள்...எந்த ஆண்டோ நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவதற்கு யோக்கிதை இல்லை...அதற்காக குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் மாணவர்களின் தேர்வினை முன்கூட்டி நடத்த வேண்டுமா? விளங்கிடும் நாடு.தேர்வுகளின் தேதியை அனுசரித்து உங்கள் உள்ளாட்சி தேர்தல் தேதிகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
13-நவ-2019 07:56:40 IST
மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ள இந்த செயல் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள ஜார்கண்டில் எதிரொலிக்கும். பிஜேபி ஆட்சிக்கு அங்கே மீண்டும் வருவது கடினமே.
13-நவ-2019 07:17:47 IST
அக்டோபர் மாதம் 24ஆம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்கு பிறகுதான் குடியரசு தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது.இத்தனை நாட்கள் காங்கிரஸ்-பவார்-ஆகியோரோடு பேசி சிவசேனா கட்சி ஏன் ஆட்சியமைக்க முயற்சி எடுக்கவில்லை?இறுதி அவகாச நாளில் மட்டுமே தடாலென முயற்சி எடுக்க துவங்கியது ...அவர்கள் மூவரும் ஒரு வழியாக இசைந்து அமைச்சரவையில் பங்குகள் குறித்து பேச துவங்கியவுடன் தடாலென ஆளுநர் குடியரசு தலைவர் ஆட்சிக்காக மடமடவென பரிந்துரை செய்ததும்..அதை உடனே ஒரு சில நிமிடங்களில் குடியரசு தலைவர் மிக வேகமாக கையெழுத்திட்டதும் அரசியலாகவே தெரிகிறது...
13-நவ-2019 06:46:28 IST
சரத்பவாருக்கு நேற்றிரவு எட்டரை மணிவரை அவகாசம் அளித்துவிட்டு அதற்கு முன்னரேயே குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சரியல்ல...எட்டரை மணிக்கு சரத்பவாரால் இயலவில்லை என்றால் பிறகு அறிவித்திருக்கலாம்...டில்லியிலிருந்து அனுப்பப்பட்ட தலைவர் மும்பை வந்து சேரும் முன்னரே அவசர கதியாக குடியரசு தலைவர் ஆட்சியால் பரிந்துரை செய்ததிலிருந்து ஆளுநர் தனது கடமையை சரியாக செய்ய தவறிவிட்டார் என்றே எண்ணுகிறேன்...பவார்,சேனா,காங்கிரஸ் ஆகிய மூன்றும் ஆட்சியமைக்க ஒரு முடிவிற்கு வந்துவிட்டன என்னும் செய்தி ஆளுநரின் காதிற்கு எட்டியதுதான் காரணமோ என்னவோ? ஆக ஆளுநர் ஆளும் கட்சியின் புல்லாங்குழலாகவே செயல்பட்டிருக்கிறார்.
13-நவ-2019 06:38:56 IST
தமிழகத்திலேயும் ஒரு மருத்துவ பூங்காவா? அதை எங்கே அமைக்கவேண்டும் என அனைத்து கட்சிகளும் அரசியல் செய்து அதை முடிவு செய்யவே ஓரிரு ஆண்டுகள் ஆகிவிடும்...ஏற்கனவே செங்கல்பட்டில் ஒரு மருத்துவ பூங்கா என பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செய்தி வந்ததே?அதேதானா இது?
12-நவ-2019 09:28:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.