பணத்தையும், மண்ணையும், தங்கத்தையும் தின்று வாழும் அரக்கர்கள், வெட்கமே இல்லாமல் மக்கள் சொத்தை அபகரித்து உயிர் வாழும் கேவலமான ஜீவிகள், இவர்களை பின் தொடரும் தொண்டர்கள் எனும் அப்பாவிகள்தான் நிலை தான் பரிதாபம், இவர்களிடமே இவ்வளவு என்றால் இவர்களின் பினாமிகளாக வாழும் நிறையபேர் எத்தனைகோடிகளுக்கு சொத்து வைத்திருப்பார்கள் என்பதை நினைத்தாலே கோபம் தான் வருகிறது, அறிவுஜீவிகள் சின்னம்மா என்று வாய்கூசாமல் அழைப்பத்தைவிட கேவலம் வேறு என்ன வேண்டும் ? இவர்கள் காலத்தில் வாழும் நாம் தான் பரிதாபத்துக்கே உரியவர்கள் இவர்களை எந்த சக்தி தண்டிக்கும் என்று தெரியவில்லை. வாழ்க தமிழகம் .
02-ஜூலை-2022 12:55:08 IST
அவங்க ஊழல்லனா, நீங்க சுரண்டல் வருமான வரிக்கட்டும் நடுநிலை கார்பொரேட் ஊழியர்களின் வயிற்றெரிச்சல் பற்றி ஆய்வு நடத்துங்கள் அப்போது தெரியும் உங்கள் ஆட்சியின் லட்சணம், GST பெட்ரோல், காஸ் விலை என்னாச்சு ? எவ்வளவு படித்த தகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டடாகினீர்கள் ? உங்களால் வளர்ந்தது சில கார்பொரேட்களும் அம்பானி, அதானிகளும், ஷaaக்களும் தான் தான், வெட்டி பேச்சுக்கு அளவே இல்லை, உங்கள் இயலாமையை மறைக்க அவர்களை குற்றம் சொல்லி காலம் கடத்துவதை நிறுத்தி ஆவண செய்யுங்கள், சாமானிய மக்கள் பாவம். ஜைஹிந்த்
31-மே-2022 16:15:32 IST
விலைவாசி இனி ஒருபோதும் குறையப்போவதில்லை, ஆனால் மாதவருமானம் பெரும் தனியார் ஊழியர்களான வரிகட்டுபவர்கள் மீது திணிக்கப்படும் வரிகளும், அத்தியாவசியங்களுக்காக அவர்கள் பெரும் கடனுக்கான வட்டியும் போக வாழ்நாள் முழுதும் உழைத்த பணத்தை வரி, விலைவாசி உயர்வு அத்தியாவசிய செலவுகள் என்று செலவழித்துவிட்டு இறுதிக்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்கவைத்தது தூக்கமின்றி உடல்நலம் குன்றவைத்து வேடிக்கை பார்ப்பது தான் இதுவரை ஆண்ட எல்லா அரசுகளும் செய்த சாதனை, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு (லஞ்சம் வாங்காத நேர்மையானவர்கள் இதை தயவு செய்து பொருட்படுத்தவேண்டாம்) சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன, முறைப்படுத்தாத வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் சொத்துக்கு மேல் சொத்துக்களாக சேர்க்கிறார்கள், வட்டிக்கு வழங்குபவர்கள் கண்டுகொள்ளப் படுவதில்லை, ஆனால் தனியார் துறையில் சம்பளம் பெரும் நடுத்தரம் தான் இவர்களது பலியாடுகள், புலிவால் பிடித்த வாழ்க்கை, கிடைப்பதைக்கொண்டு தரம் குறையாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கட்டாயம் எண்டு கஷ்டப்படும் வரிகட்டுபவர்களின் கஷ்டம் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு என்றும் புரியாது
10-ஏப்-2022 16:41:07 IST
கோவை எல் & டீ பைபாஸ் கிட்ட தட்ட முப்பது வருஷங்களாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது சாலை போட ஆன செலவு நூறு மடங்காக வசூலிக்கப்பட்டிருக்கும் ஆனாலும் வசூல் நிறுத்தப் படவில்லை பாரதிய ஜனதா ஆட்சி சாமானியரை பொருட்படுத்துவதே இல்லை பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகளை வாரி வழங்குகிறது சாலி மேம்பாடு அரசின் கடமை, உள்கட்டமைப்புகள் அரசின் கடமை ஆனால் செலவுகளை சாமானியரின் தலையில் சுமத்துவது எல்லா அரசின் வாடிக்கை ஆகிவிட்டது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சாமானியன் படும் பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
31-மார்ச்-2022 10:38:10 IST
இட்லிக்கு சாம்பார் / சட்னி சேர்த்துக்கொண்டாரா அல்லது வெறுமனே சாப்பிட்டாரா? என்ற விவரமாவது சரியாக தெரியுமா ஓ பி எஸ் சார்? நீங்கள் முக்கியமான பொறுப்பில் இருந்த நாட்களில் தானே அமரர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தார்? விஷயம் எல்லாம் தெரிந்து நீங்கள் நழுவுவது போல தெரிகிறது, இது தான் நீங்கள் உங்கள் புரட்சித்தலைவிக்கு காட்டும் விசுவாசமா? என்ன கொடுமை சார் மொத்தத்தில் அமரர் ஜெயலலிதா என்ற ஆளுமையின் மரணத்தின் பின்னணிகளை இருட்டடிப்பு செய்யாத புண்ணியம் உங்களுக்கு நிறைய கிடைக்கும், அம்மாவின் ஆன்மா பார்த்துக்கொண்டிருக்கிறது .
21-மார்ச்-2022 16:50:04 IST
கேவலமான யுக்திக்கு கேவலமான எச்சரிக்கை, டிஜிட்டல் யுகத்தில் மாஜிக் பேணா யார் காரணம்? எச்சரிக்கை விடுதிருப்பவர்களுக்கு எப்படி இவ்விஷயம் தெரியும்? உறுதியான கண்காணிப்பு மற்றும் கணக்குப்பதிவிற்கான வழிகளை உருவாக்காமல் எப்படி உரிமங்கள் வழங்கப்படுகின்றன? ஒருபக்கம் வரிப்பணத்தை வீணடிக்க மறுபுறம் பொது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட அப்பாவி மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது இவர்களுக்கு சாதகமாக்தான் இருக்கிறது, மக்களை சுரண்டும் கொள்ளையர்களை தெய்வம் நின்று கொல்லும்
14-மார்ச்-2022 12:20:18 IST
இதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது? சாதாரணமாக நடப்பது தானே? உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி பெரும்பான்மை பெறுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் இந்த தேர்தலுக்கு பிறகு தி மு க கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் கட்சி தலைமையின் உத்தரவை மீறி பிடிவாதமாக சென்று பதவியில் அமர முயற்சி செய்யப்பட்டது தான் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காலத்தில் நடக்காத ஒன்று, டீமாண்பு மிகு முதல்வர் தர்ம சங்கடத்துக்கு உள்ளானதை பொருட் படுத்தாது பதவி வெறி பிடித்து அலைந்தவர்களில் சிலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தியிருப்பது போதாது, இதன் பின்னணியை ஆராய்ந்து இப்படிப்பட்ட சங்கடத்தை ஏற்படுத்திய எல்லாரையும் இரந்தரமாக நீக்கவேண்டும், மக்களிடம் வெறுப்பை தூண்டும் வகையில் கட்சியினர் ஈடுபடுவது அவசரமாக கவனிக்கப்பட்டு நடவடிக்கைகளை கடினமாக்க வேண்டிய அவசியம் தி மு க தலைமைக்கு வந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
14-மார்ச்-2022 12:09:01 IST
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற மாதிரி இருக்கிறது, இந்துவாக இருந்தாலும் வாழ்ந்தாலும் தான் கோவில்களுக்காக செய்யும் பனி பாராட்டப்படும் என்பது போல எழுதியிருக்கிறார் திருநீறு பூசி வேஷம் போடுவதை விட கேவலமானது என்ன இருக்கிறது ? குடும்பத்தார் கோவிலுக்கு போகக்கூடாது என்று சொன்னதற்கு ஆதாரம் உண்டா ? சரியான கண்ணோட்டத்தில் அரசின் நடவடிக்கைகளை பார்ப்பது பொதுமக்களின் கடமை
19-பிப்-2022 13:33:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.