மேதகு ஆளுநருக்கு உள்ள அதிகாரம் தெளிவாகத்தான் உள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஓன்று ஒப்புதல் அளிக்கவேண்டும் அல்லது ஒருமுறை திருப்பி அனுப்பி மேல்விளக்கம் கேட்கலாம் . மீண்டும் ஒருமுறை அவருக்கு திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லை. அதுவும் இந்த நீட் சட்டமசோதாவில் ஆளுநரின் ஒப்புதலையே கோரவில்லை. இவரிடம் வேண்டியது குடியரசுத்தலைவருக்கு அனுப்ப மட்டும்தான். இதில் இவரது ஆலோசனை எதுவும் வேண்டப்படவில்லை. சட்டத்தினில் வுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இவர் காலதாமதப்படுத்தி கொண்டு இருக்கிறார். இவர் ஒன்றும் மக்கள் செல்வாக்கில் பதவி பெற்றவர் இல்லை. ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகங்கள் செய்து பதவி சுகத்தை அனுபவிப்பவர். மசோதாவை தபால் பெட்டியில் போடுவதுமட்டும் தான் இவரது வேலை. இதை உணர்ந்து உடனடியாக நல்ல முடிவு எடுப்பர் என்று நம்புவோம்
06-ஏப்-2022 09:21:21 IST
நீங்கள் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டால் யாரும் கேட்கப்போவதில்லை. அரசியல் அமைப்பு கொடுத்த உரிமை. அதை தவறாக பயன் படுத்தினால் அதற்க்கு எதிர்வினை ஆற்றதான் செய்வார்கள்.
20-மார்ச்-2022 07:38:19 IST
கருணாநிதி மட்டும் தான் நம் ஊரில் மஞ்ச பைய கொண்டு ரயில் ஏறி வந்து சம்பாதித்து விட்டார் என்று புலம்புவர்களுக்கு ஓன்று சொல்லிக்கொள்கிறேன், தமிழகத்தில் மட்டும் அல்ல உலகத்தில் எந்த நாட்டிலேயும் வயிற்று பிழைப்புக்காக புலம் பெயர்ந்து வருபவர்கள் வெறுங்கையுடன் தான் வருவார்கள்.அவர் அவர் சொந்த சாமர்த்தியத்தால் முன்னேறுவது தவறு என்று சொல்லுபவர்கள் கூட வெறுங்கையுடன் வந்து சம்பாதித்தவர்கள் தான். மேலும் கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதி வெளி வந்த எத்தனையோ திரைப்படங்களுக்கு சன்மானமாக எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும் தகும். அந்த வசனத்தை போல் நிகராக எவனாவது எழுத பிறந்து இருக்கிறானா . ஆவர் கொள்ளை அடித்தார் என்றே வைத்துக்கொண்டால் அவருக்கு பின் ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் அவர் மீது வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியதுதானே குற்றவாளி என்று கருதி அவர்மீது வழக்கு போடாதவர்களும் குற்றத்துக்கு துணை போனவர்கள் தான்.
18-மார்ச்-2022 07:14:25 IST
அண்ணாந்து பார்த்தே அரசியல் செய்தால் உன்னால் இப்படித்தான் பேசமுடியும். என்றைக்கு நீயும் உன் அப்பனும் கீழ் மட்ட தொண்டனிடம் அணுகி அரசியல் செய்திருக்கிறீர்கள். நீயும் உன் அப்பனும் சிவகங்கை மாவட்டத்துக்கு எத்தனை முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறீர்கள். இன்றுவரை எதாவது ஒரு பெரிய திட்டங்களை செயல் படுத்தி இருக்கிறீர்களா. அல்லது வார்டு உறுப்பினர் வேலையான சாலை போடும் வசதியாவது செய்து இருக்கிறார்களா. நீங்கள் இருவரும் முதலில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தலே தமிழ்நாட்டில் காங்கிரஸ் உற்ப்பட்டுவிடும்.
15-மார்ச்-2022 08:39:12 IST
நாளை காலை நமக்கு வேலை நிரந்தரம் யில்லை என்ற நிலை வந்தால் மட்டுமே இந்த லஞ்ச பிசாசை ஒழிக்க முடியும் தற்போது எந்த அதிகாரியும் நேரடியாக லஞ்சம் வாங்குவது இல்லை. பத்திரப்பதிவு துறைக்கு பத்திர எழுத்தர்கள் மூலமாகவும், கட்டிட அனுமதிக்கு உரிமம் உள்ள சர்வேயர் மூலமாகவும் தண்ணீர் இணைப்புக்கு உரிமம் உள்ள ப்ளம்பர்கள் மூலமாகவும், பட்டா சிட்டா வாங்க, வட்ட ஆட்சியர் ஆபீஸ் முன்பு அமர்ந்து இருக்கும் எழுத்து கூலிகள் மூலமும் தான் லஞ்சம் பெறுகிறார்கள். இவர்களை எந்த கொம்பன் முதலமைச்சர் வந்தாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. இந்த ப்ரோக்கர்களை எந்த விதத்திலும் தண்டிக்க முடியாது. இப்போது முதல்வரை பற்றிய செய்தி என்ன வென்றால் இவரது தந்தை சொத்து சேர்த்து வைத்துவிட்டு சென்று விட்டார். இவருக்கு பணம் பண்ண தேவை இல்லை. நாங்கள் எப்படி வாழ்ந்து கட்சி க்கு சேவை செய்ய முடியும் என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். முதல்வர் உடனடியாக இந்த புதர்களை கலயாவிட்டால் இவர் என்னதான் உழைத்தாலும் சிறந்த முதல்வர் என்ற பட்டத்தை பெற முடியாது.
16-செப்-2021 06:29:18 IST
திரு முருகன் அவர்களுக்கு. தற்போது மஹாபலிபுரம் மற்றும் திருப்பதி தேவஸ்தான சிற்பக்கலை கல்லூரிகளில் அணைத்து இனத்தவர்களுக்கும் தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒரே இனத்துக்கான தொழில் என்பது மாற்றப்பட்டு உள்ளது. கைத்தொழில் குடும்ப தொழிலாக இருந்த காலம் ஓன்று இருந்தது. வேலை வாய்ப்புக்காகவும் பொருளாதார மேம்பாட்டுக்கவும் எல்லா இனத்தவர்களும் தங்களது குடும்பத்தொழிலை மாற்றி கொண்டார்கள். இதில் உயர் வகுப்பு பிரிவினரும் அடக்கம்.
18-ஆக-2021 08:45:26 IST
ஆலய நிர்மாண பணியில் காலம்காலமாக பங்கு கொண்டவர்கள் அன்றய ஆட்சியில் இருந்த மன்னர்களும் ஸ்தபதிகள் மட்டும் தான். நிர்மாணித்து தந்த பின் அரசனை பின்னிருந்து இயக்கிய இந்த முன்னேறிய பிரிவி ஆலயங்களை கபளீகரம் செய்து கொண்டு பிழைப்பு நடத்திகொண்டு இருந்தார்கள். ஆலயங்கள் நிர்மாணிக்கும் பொழுது ஸ்தபதிகள் யாரும் ஆகம விதிகளை கொண்டு நிர்மாணிப்பதில்லை. அவர்கள் மாயன் வடித்துக்கொடுத்த சிற்ப நூல்களை கொண்டுதான் நிர்மாணித்தார்கள். நிர்மாணித்தபின் அந்த வடிவங்களை தொடுவதற்கு கூட இந்த குடிகளுக்கு அனுமதி அளிக்க மறுத்து இந்த உயர் குடிகள் ஆக்கிரமித்து கொண்டார்கள். ஆலயங்களை வடிவைத்தவர்கள் ஸ்தபதிகல் ஆகிய சமையல் காரர்கள் இந்த உயர் குடிகள் சமையலை பரிமாறும் சமையல் காரர்கள் தான் . ஆலயத்துக்கு உயிர் கொடுத்தவன் ஸ்தபதி. அவன் நிர்மாணித்த கால கணக்குதான் அந்த சிலைக்கு அதிர்வுகள் உண்டாகிறது. அந்த கணக்கு தப்பிதமானால் அந்த சிலை சாலை ஓரம் இருக்கும் மைல் கல்லுக்கு சமம். மேலும் இந்த சமைத்த உணவை பரிமாற சம்ஸ்கிருதம் என்ற கரண்டியை தான் உபயோகிப்பது என்று கூறுவது மடத்தனத்திலும் மடத்தனம் தமிழ் என்ற கரண்டியில் பரிமாறினால் சமைத்த உணவு சாப்பிடுபவன் இலைக்கு செல்லதா இவர்களின் பொருளாதாரம் பாதிக்க படப்போகிறது என்ற காரணத்தாலும் சமூக அந்தஸ்து பறிபோக போகிறது என்ற எண்ணத்தால் தான் மல்லுக்கட்டுகிறார்கள். இவ்வள்வு கூப்பாடு போடுபவர்கள் ஒரு கல்லை பிரட்டி போட்டு இவர்கள் துதி பாடும் இறைவனை வடிவமைக்க முடியுயுமா . அப்படி வடிவமைத்தாள் இவர்கள் கூப்பாடு போடுவது நாம் ஒத்துக்கொள்ளலாம்.
18-ஆக-2021 06:59:36 IST
ஒருவர் இங்கு தவறு நடக்கிறது என்று சுற்றி காட்டினாள் நீ என்ன யோக்கியதை என்று கேட்கும் மனோ பாவம் தான் உள்ளது.
உச்சநீதிபதி சுட்டிக்காட்டிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது. அவர் பேசிய கூட்டம் அவர் தொழில் சம்பந்தப்பட்டவர்களின் உறுப்பினர்களுடன் கூறிய ஆலோசனை. பெரும்பாலானா வழக்கறிஞர்கள் அரசியலில் இருந்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அவரது விருப்பத்தை சொல்லுகிறார். உடனே இங்கே ஒரு மூத்த வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு தொலைக்காட்சி விவாத மேடைகளில் உளறிக்கொண்டு, இவர் பாராளுமன்றத்தை விமர்ச்சித்தாள் அவர்கள் நீதி துறையை விமர்ச்சிக்கும் நிலை ஏற்பட்டால் நாடு என்ன ஆகும் என்று கவலை படுகிறார். யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டவேண்டியது ஒரு குடிமகனின் கடமை.அதுதான் ஜனநாயகம். இந்த விமர்சனத்தை ஓர் உயர் ஜாதி நீதிபதி கருத்து கூறி இருந்தால் எல்லாவற்றையும் மூடி கொண்டு இருப்பார்கள். நாட்டின் நிலை இதுதான். எது எதற்கோ சட்ட திருத்தங்களை கொண்டுவரும் மிருக பலம் கொண்ட இந்த ஒன்றிய அரசு ஏன் வழக்குகள் தாமதத்தை குறைக்க சட்ட திருத்தும் கொண்டு வர முயற்சிக்கவில்லை. காரணம் தற்போது உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கலின் வழக்குகள் அவர்களின் பதவிக்காலத்திலேயே முடித்துவைக்கப்பட்டு அவர்கள் பதவி இழக்கும் நிலை ஏற்படும். அதனால் தான் இவர்கள் நீதிமன்ற தாமதங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.எவனும் தனது தலையை தானே வெட்டிக்கொள்ள மாட்டான்
16-ஆக-2021 07:39:16 IST
பி ஸ் என் எல் ன் வளர்ச்சியை சீர்குலைத்து யார். இந்த அரசாங்கம் தான். தனியார் தொலைத்தொடர்பு நிறுவங்களின் வளர்ச்சிக்கு துணை செய்ய, பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு போதுமான நிதி அளிக்காமல், ஊழியர்களை நியமிக்காமல் நிறுவனத்தை சீர் குழைத்து விட்டு இப்போது முன் முயற்சி எடுப்பது போல் நாடகம் ஆடுகிறார்கள். முதலில் நிதி அளித்து விட்டு திறமையான அதிகாரிகளை நியமித்து முன்பு இருந்த வளர்ச்சிக்கு பாடு பட முயற்சி செய்ய வேண்டும்.
19-ஜூன்-2021 08:11:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.