அரசு ஊழியர்கள் மிகக்குறைந்த சதவீதத்தினரே நேர்மையான முறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். மற்றவர்கள் விலைக்கு வாங்கி அமர்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அரசியலாளர்களைப் போலவே நடந்து கொள்வார்கள் என்பது உண்மை தான். மறுப்பு உண்டா?
08-டிச-2021 20:25:22 IST
நெல்லை மனோகர் அவர்களுக்கு அளித்த பதில் மிக மிக ஒரு தலை பட்சமானது. அரசியல்வாதிகளுக்கு எதிராக நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். மாநில அரசு அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள முடியாததற்கு இது ஒன்றே சிறந்த காரணம். அதிகாரிகள் '55' வயது வரை உழைக்கிறார்கள். நேர்மையாக இருக்க முயற்சிக்கிறார்கள். முடிவதில்லை. பதவிக்கு வரும் அரசியலாளர்களோ சந்தர்ப்பத்தை சுலபமாக பயன்படுத்திக்கொள்ளவே முயல்கிறார்கள். வருமான வரி துறையினரும் பெயருக்கு ஒரு சில அரசியல்வாதிகளை விரும்பிய பக்கம் திருப்பிக்கொள்ள சோதனை என்ற பெயரில் நாடகமாடுகிறார்கள். இது தான் உண்மை. மாற்றுக்கருத்து உண்டா?
08-டிச-2021 20:21:35 IST
கவிதை சோலைக்கு சன்மானம் கிடைத்தது மிகச்சரியானதே முக்கியமாக அந்த "புல்லை திங்க போகும் மாடு, கொம்பால் புல்லை கட்டி போவதில்லை" வரிகள் "Ultimate"........... விக்கிரவாண்டி பார்கவி அவர்களுக்கு உற்சாகமூட்டும் வாழ்த்துக்கள்... கவிதை சோலை மென்மேலும் தொடரட்டும்....
30-நவ-2021 21:43:29 IST
மீரா - பழமொழி கதைகள் - மிகவும் பிடித்திருந்தது. சற்றே கதையை இன்னும் நீட்டியிருக்கலாம் என்று தோன்றியது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு பற்றி மற்ற நாட்டினர் புகழ்ந்து பாடும் சூழல் இன்னும் நிலவுகிறது என்பதற்கு இச்சிறுகதை சிறந்த எடுத்துக்காட்டு. மதனை ஒரு ஏமாற்றுக்காரனாக சித்தரித்திருக்க வேண்டியதில்லை. மீராவை மனம் மாற்றியதாக காட்டியிருக்கலாம்.
30-நவ-2021 21:10:56 IST
மதுரை கப்பலூர் - கூத்தியார்குண்டு நெடுஞ்சாலை சந்திப்பில் '(டொயோட்டா ஷோ ரூம் அருகில்) ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அதி உயர ஒளிவிளக்கு கம்பம் சுமார் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் மோதியதில் கம்பம் முற்றிலும் சேதமடைந்து அப்புறப்படுத்த பட்டபின்னர் இதுவரை சரி செய்து உபயோகத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இரவு நேரங்களில் சாலையை கடப்பதற்கு மக்கள் மிகவும் அவஸ்தை படுகிறார்கள். தொடர்ச்சியான போக்குவரத்து போலீஸ் வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை. போக்குவரத்து போலீசார் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. எந்த நேரமும் விபத்து ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் நிலவுகிறது. சம்பந்தப்பட்டோர் தலையிட்டு தீர்த்துவைத்தால் நலமாக இருக்கும். செய்வார்களா?
29-நவ-2021 20:17:18 IST
மதுரை கப்பலூர் - கூத்தியார்குண்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளாகிய தெருவிளக்குகள், குடிநீர் குழாய் போன்ற வசதிகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. எல்லா பகுதிகளுக்கும் முழுமையாக கிடைக்கவில்லை. சில பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படவே இல்லை. குழாய் வசதி செய்யப்பட்டிருந்தும் குடிநீர் 'supply' இன்னும் வழங்கப்படவில்லை. தெருக்களில் தார் சாலைகளும் பராமரிக்கப்படவில்லை. நிர்வாகம் கண் திறந்து மக்கள் குறைகளை நிவர்த்தி செய்தால் மகிழ்ச்சியடைவர். எதிர்பார்க்கலாமா?
29-நவ-2021 20:09:44 IST
மதுரை பெரியார் நிலையத்திலிருந்து வாடிப்பட்டிக்கு பஸ் வசதி இருப்பதைப்போல், திருமங்கலத்திலிருந்தும் வாடிப்படிக்கு நெடுஞ்சாலையில் பஸ் வசதி இருந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள். தற்சமயம் வாடிபட்டியிலிருந்து திருமங்கலத்திற்கோ விருதுநகர் மற்றும் ராஜபாளையம், திருநெல்வேலி செல்ல விரும்புபவர்கள் ஆரப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களை கடந்தே செல்ல வேண்டியிருக்கிறது. நேரம் வீணாகிறது. வாடிப்பட்டி திருமங்கலம் நேரடி பஸ் வசதி இருந்தால் நேர விரயம் மற்றும் கட்டணம் மிச்சம் போன்றவற்றால் மக்கள் மகிழ்வர். நிர்வாகம் யோசிக்குமா?
29-நவ-2021 20:01:26 IST
ஏற்கனவே பதிவிட்ட அதே 'subject' தான். மதுரையில் நகர பேருந்துகளில் தாழ்தள பேருந்து என்ற பெயரில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மதுரை டு திண்டுக்கல் செல்லவே ரூபாய் '70' தான் அதிகபட்சம். அதே போல் ஆரப்பாளையம் முதல் திருமங்கலம்-கப்பலூர்க்கு ரூபாய் '14' தான் சாதாரண கட்டணம். ஆனால் தாழ்தள பேருந்தில் ரூபாய் '29' வசூலிக்கிறார்கள். மேலும் தாழ்தள பேருந்துகள் தான் அதிகமாக புழக்கத்தில் சென்று வருகின்றன. ஏழை எளிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தித்தான் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இலவச பஸ் வசதி அளிக்கும் அதே தருணத்தில் அதிக கட்டணம் வசூலிப்பது நிச்சயமாக நியாயமாகப்படவில்லை. அரசு நிர்வாகம் தலையிட்டு சாதாரண பஸ்களை அதிகப்படுத்திவிட்டு, சாதாரண கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்தால் ஏழைகள் மனம் குளிரும். செய்யுமா அரசு நிர்வாகம்?
29-நவ-2021 19:55:54 IST
அருமையான கதை. அரசியல் கலக்காமல், அதே சமயம் தமிழை சிறப்பு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட கதை. தமிழ் சுவை இன்னும் சற்று காட்டமாக காட்டப்பட்டிருந்தால் இந்த கதை நிச்சயம் முதல் பரிசை தட்டி சென்றிருக்கும். அந்த வகையில் கவனமுடன் ஆசிரியர் அடக்கி வாசித்திருக்கிறார். கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. அடக்கமுடன் எழுதியுள்ள கதாசிரியருக்கு இந்த கதைக்காக முதல் பரிசே கொடுத்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி
12-அக்-2021 12:32:49 IST
ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கல் மற்றும் கடத்தல் என்று தினம் தினம் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகவே தெரியவில்லை. நிர்வாகம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. காவல்துறையும் நிர்வாகமும் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் நடக்காமல் தடுக்க முடியும். முதலில் மக்களுக்கு வழங்கும் முறையை செம்மை செய்தால் போதும் என்று படுகிறது.
09-ஜூலை-2021 17:53:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.