SINGA RAJA : கருத்துக்கள் ( 128 )
SINGA RAJA
Advertisement
Advertisement
மே
22
2018
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
மிகச்சரியான விளக்கம் குட்   07:18:11 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2017
விவாதம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறுவாரா?
ரஜினிகாந்த் உடல்நிலை ஒத்துழைத்து அவர் அரசியலில் இறங்கி செயல்பட்டால் அவரை எதிர்த்து எவரும் ஜெயிக்க முடியாது. அப்படியொரு நம்பிக்கை தமிழக மக்களுக்கு உண்டு. அவர் சொன்னால் ஓகேதான். ஏனென்றால் அவரிடம் அத்தகையதொரு தீட்சண்யம் நிச்சயமாக தென்படுகிறது. வரவேண்டும். வரவேற்கிறோம்.   20:26:49 IST
Rate this:
25 members
1 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
விவாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது சரியா?
தற்போது ஓராண்டிற்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் தங்களை நீட் தேர்விற்கு சரிவர தயார் படுத்திக்கொண்டிருக்கவில்லை. ஆனால், அடுத்த வருடம் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களது மாநிலத்திட்ட கல்வியில் +2 தேர்வில் பெற்ற பாடங்களின் (சப்ஜெக்ட்) மதிப்பில் 95 % ஐ தகுதி மதிப்பீடாக கட்டாயம் வைக்க வேண்டும். அப்படி வைத்து நீட் தேர்வு எழுத வைப்பதே நேர்மையாக இருக்கும். அப்படி செய்யாவிட்டால், மாணவர்களின் இரண்டு வருட படிப்பில் பல நிலைகளில் நடத்தப்படுகின்ற மாநிலத்தேர்வுகளை மாணவர்கள் பொருட்படுத்தாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு நீட் தான் பிரதானம் என்று ஆகும் பட்சத்தில், நீட் தேர்வை குறிவைத்து நிறைய இன்ஸ்டிடூஷன்ஸ் உருவாக ஆரம்பிக்கும். கல்வியின் போக்கு திசை திரும்பும். ஒரு நாளில் மூன்று மணி நேரத்தில் ஒரு அறையில் அமர்ந்து எழுதப்படும் நீட் தேர்வுகளில் ஊழல் நடக்க வாய்ப்புகள் மிகமிக அதிகம். ஆகவே நீட் தேர்வை அரசு பிரதானமாக்கினால் பிளஸ் டு மதிப்பெண்களை 95 % தகுதி மதிப்பெண்களாக வைத்தே தீரவேண்டும்.   22:00:41 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
11
2017
விவாதம் ஜெ., அண்ணன் மகள் தீபா அரசியலில் ஈடுபடலாமா?
புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையைப் போல, ஜெயலலிதாவைப் பார்த்து, அவரைப்போலவே உடையுடுத்தி, மேல்மாடி முற்றத்தில் நின்றுகொண்டு இரட்டை விரலசைத்தால் தீபா, ஜெயலலிதா ஆகிவிட முடியுமா? அரசியலில் தீபா ஆழம் தெரியாமல் சிறுபிள்ளைபோல் காலைவிடப் பார்க்கிறார். அதிமுகவின் வாக்குகளை சிதைப்பதற்கு எதிரிகள் தொடுத்திருக்கும் பாணம்தான் தீபா. பாவம் எதிரிகளின் கைப்பாவையாகி, கடைசியில் நொந்துபோவார்.   22:21:25 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
9
2017
சிறப்பு பகுதிகள் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது?
ஒரு முறை மிகப்பிரபலமான பேச்சளர் ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். என்னருகில் இருந்த என் நண்பர் ஒருவர் அவரது ஒவ்வொருமுறைப் பேச்சையும் கேட்டு, ரசித்து சிலாகித்துக்கொண்டிருந்தார். அரைமணி நேரம் சென்றபின்பு, நானும் அவரும் சாலையில் இறங்கி நடக்கத்துவங்கினோம். நீங்கள் பேச்சாளரின் நல்ல ரசிகரோ என்று நண்பரிடம் வினவினேன். அவர் என்னைப்பார்த்து சிரித்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, வெறுமனே அவரது பேச்சை கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு உற்சாகம் உண்டாகும். என்னை நானே ரெப்ரெஷ் பண்ணிக்கிட்டா மாதிரி இருக்கும் என்றார். மேலும், அவரது உரைகள் எனக்கு ஒரு எனர்ஜி பூஸ்டர் மாதிரி என்றார். ஆகவே, அவரது மீட்டிங்குகளை நான் ஒருபோதும் தவிர்ப்பதில்லை என்றார். அவரது, உளவியல் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை. மக்களில் பெரும்பாலோரும், பிரசங்க உரைகளை இப்படித்தான் கேட்டுக்கொண்டே போகிறார்கள் என்ற அபிப்ராயம், கொஞ்சம் எனக்குண்டு. வாழ்க்கையில் நுனிப்புல் மேய்வது சிலசமயங்களில் ஆனந்தத்தை மனிதனுக்கு நல்கிவிடுகிறது. தனிமனித செயல்பாடுகளை தவறென்று சொல்வதற்கில்லை. நாம், சிலநேரங்களில், நிறைய ஆழமுள்ள விஷயங்களை உள்வாங்கி, அதை முழுவதிலும் பகிர்வதற்குரிய ஆட்களை தேடினால், அருகில் எவருமே இல்லை அவரவர் உலகம், தினுசு தினுசாக மகிழ்ச்சியை தங்களுக்கே உரிய சுய அடையாளங்களிலேயே அடைந்துகொண்டிருக்கின்றது. ஆலயங்களில், சர்ச்களில், மசூதிகளில் என அனைத்து இடங்களிலும் மக்கள் சாரை சாரையாக செல்கின்றனர், வழிபடுகிறார்கள்.ஆயினும் வழிபாட்டிற்கான உட்பொருளை, அதன் உள்ளார்ந்த விஷயங்களை, அதன் சித்தாந்தங்களை, உள்கட்டமைப்பை, அதன் நோக்கங்களை, அது ஏற்படுத்தும் உள்மனத்தின் அகன்ற வெளிகளை, அதன் நீட்சியை, மிகமிக அரிதானவர்களே அறிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். இப்படி உள்முகமாக செல்லாமல், சம்பிரதாயமாகவே நம்மில் பலரும் செய்கின்ற பலவிஷயங்கள் யாவும், நமக்கு எந்தவிதத்திலும், எந்த நிலையிலும் சிறிதும் பலனளிக்கப்போவதில்லை. வெறுமனே அவர்களிடம் எடுத்துரைப்பினும், அதைப்பற்றிய கவலைகளும் அவர்களுக்கில்லை. ஆனால், அவர்கள் நாடிவருகின்ற குருமார்களுக்கு அத்தகைய கடமை இருக்கிறது. அவர்கள், சீடனின் மனத்தில் ஊடுருவிச் செல்ல வேண்டும். உணர்விக்க வேண்டும். ஆன்மீக பயிற்சிகள் ஏன் ஒரு மனிதனுக்கு அவசியம் என்பதை புரிய வைக்க வேண்டும். சகஜ வாழ்வில், ஒருவன் வெற்றியுடனும், மகிழ்வுடனும் பயணிக்கும் வண்ணமாய் அவனை உள்உருமாற்றம் செய்வதற்கே ஆன்மிகம் என்பதை புலப்படுத்த வேண்டும். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், இத்தகைய தூண்டல் அவசியம் தேவைப்படுகிறது. நாம் முழுத்திறமைகளையும் வெளிப்படுத்தி காரியமாற்றுகின்றபோது, அதில் ஜொலிக்கின்ற அறிவு, திறம்,நேர்த்தி, உறுதி இவை வாழ்வில் நம்மை மென்மேலும் செம்மைப்படுத்தி, பொறுப்புணர்ச்சி மிக்க மனிதனாக மாற்றியமைக்கும். ஆகவே, ஆன்மீகத்தின் நோக்கத்தை சாமான்யனுக்கும் தெளிவித்து, உணர்வாக்கி அவனை புது மனிதனாக, சமுதாயத்தில் பொறுப்புமிக்க நபராக கடமையாற்றிடச் செய்வதே குருமார்களின் பணி. சத்குருவே நமஸ்காரம்.   22:34:15 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
9
2017
பொது மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் நீக்கம்
இதேபோல், இந்தியா முழுவதிலும் பண்டிகைகள் அனைத்திற்கும், வேலைக்கு வந்தால் ஓகே, வராவிட்டால் டபுள் ஓகே என்று, மத்திய அரசு தைரியமாக இந்த நடைமுறைகளை பின்பற்ற முடியுமா?   21:12:57 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
7
2017
அரசியல் அரசியலில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்துவதில் மோடி...திட்டவட்டம்!கட்சிகளுக்கு நிதி கிடைப்பதை முறைப்படுத்த முடிவு
பாகுபாடின்றி, சிறிய பெரிய அளவில் இந்தியா முழுமையிலும் கறுப்பும், வெள்ளையும் கலந்து இருந்தது உண்மை. இப்போது அனைத்துப் பணமும் வங்கிக்குள் வந்துவிட்டது. அரசிற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இனி, அரசு மக்களை முழுவதுமாக, உண்மையான பண நடைமுறைக்குள் திருப்பிவிடமுடியும். இந்தியா முழுவதும் டிஜிட்டலைசேஷன் 100 % என்ற இலக்கோடு அரசு செயல்பட வேண்டுமானால், முதலாவதாக, கறுப்புப்பணம் இந்தியாவில் தோன்றியதன் முக்கிய காரணத்தை களைய வேண்டும். சுதந்திர இந்தியாவில், மிட்டாமிராசுகளைத்தவிர, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தோரும், பெரிய அளவில் தொழிலதிபர்களும் மட்டுமே, அரசுக்கு வருமான வரி காட்டுகின்ற நிலையில் இருந்தனர். அன்றிலிருந்து, சூழலுக்கேற்பவே வரி வரைமுறைகளை சிறுசிறு மாற்றங்களுடன் அரசு பின்பற்றி, நடைமுறைப்படுத்தி வந்தது. ஆனால், நாட்டில் பல ஆண்டுகாலமாக, படிப்படியாக ஏற்பட்ட தொடர் வளர்ச்சியின் ஊடாக, மக்களிடையே லஞ்சமும், ஊழலும் பல்கிப்பெருகிவிட்டன. இது மக்களில் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு எல்லா மட்டங்களிலும் ஊடுருவி இருந்தது என்பதே முற்றிலும் உண்மை. இதை யாரும் மறுத்தால், அவர்கள் பொய்கூறுகிறார்கள் என்றே புரிந்துகொள்ளலாம். சரி, அரசு இப்போது முழுதாக மக்களையும், நாட்டையும் புடம் போட்டுப்பார்த்துவிட்டது. இதில், அரசு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பது மிகச்சரியான உண்மை. ஏனெனில், அரசு இனி மக்களை மிகச்சரியான பண நடைமுறைக்கு திருப்பிவிட முடியும். இருப்பினும், பெரிய மதிப்பிலான பணம் மீண்டும் மக்களின் கைகளில் புழங்கும்போது, அதே பழைய தவறுகள் நடக்குமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அதற்குரிய தொழில்நுட்பம், தற்போது அரசு வெளியிட்டுள்ள உயர் மதிப்பிலான பணங்களில் மறைந்திருக்கிறது. ஆகவே, பழைய தவறுகள் இனி நடக்காது என்றே நம்பலாம். மேலும், படிப்படியாக பரிவர்த்தனைகள் அனைத்துமே டிஜிட்டலைசேஷன் ஆக மாறும்போது, அவரவர் கணக்கின் நடைமுறைகளை அரசு தனது கைவசம் உள்ள மானிடர் மூலமாக எளிதில் கண்காணித்து, தேவையெனில் எளிதாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆகவே, இனி இந்தியாவில் கறுப்பும் கிடையாது, கள்ள நோட்டுக்கும் வேலையில்லை, ஹவாலா பரிவர்த்தனையும் நடத்த முடியாது, போலிப்பொருட்களின் சந்தையும் கிடையாது, லஞ்சமும் இல்லை, ஊழலும் இல்லை என்ற நிலைக்கு நாடு முழுவதும், முற்றிலுமாக வந்துவிடும். இது பிரதமர் மேற்கொண்ட தொலைநோக்குத்திட்ட நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா? பிறகு ஏன் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்துகின்றன? ஆங்.. அங்குதான் இருக்கிறது ரகசியமே அது அப்படியே போகட்டும், பழைய ஐநூறு, ஆயிரம் தாள்களை போலவே இனி அது பற்றி நாம் பேசுவது நாட்டிற்கு தேவையில்லை. விசயத்திற்கு வருவோம், நம் மக்களும் பழைய பண நடைமுறையில், அரசிடம் கொஞ்சம் மறைத்தே பழக்கப்பட்டவர்கள்தான். அதனை மறுப்பதற்கில்லை. அதனால்தான், டிசம்பர் 30 ல் பிரதமர் பேசும்போது மக்களைப்பார்த்துக் கேட்டார், நாட்டில் பத்துலட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் இருபத்துநான்கு லட்சம் பேர்தானா? என்று இது பண நடைமுறையில், மக்களிடையே மறைந்திருக்கும் போலித்தனங்களை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது. இது முற்றிலும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றுதானே ஆனால், இதற்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்க வேண்டுமல்லவா? ஆகவே, அரசு தனது வரி வரம்பில் ஏற்கனவே உள்ள பழைய அட்டவணைகளை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். நாட்டிலுள்ள பெருவாரியான மக்களையும், அரசு அரவணைத்து, தாராள, தயாள மனதோடு, வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். மக்களின் வருமானத்தை காலத்திற்கேற்ப புரிந்துகொண்டு, குறைந்த சதமானம் வரியை அரசு நிர்ணயிக்க வேண்டும். வரி குறைவாக இருந்தால், மக்கள் ஏன் அரசிடம் தங்களது உண்மை வருமானத்தை மறைக்கப்போகிறார்கள். ஆக, இத்தனை ஆண்டு காலமாக இருந்த வரியின் அளவு, தங்களால் செலுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருப்பதாக மக்கள் கருத்தியதால்தானே, நாட்டில் கறுப்புப்பணம் இந்த அளவிற்கு உலவியது. தேவைக்கு மீறிய அளவில், மக்களின் முதலீடுகள் மறைவாக தங்கத்திலும், வீட்டு மனைகளிலும் குவிந்தது. இதனால்தானே அரசு வங்கிகளுக்கு மக்களின் முதலீடுகள் செல்லவில்லை. நாட்டில், அனைத்துப்பொருட்களின் விலைவாசியும் கட்டுப்பாடின்றி, தாறுமாறாக உயர்வு கண்டது. மேலும், நாட்டில் தங்கத்தின் அதிகளவு இறக்குமதியால், நடப்புக்கணக்குப் பற்றாக்குறையும் அரசிற்கு ஏற்பட்டு வந்தது. இனி இந்த நிலை நாட்டில் நீடிக்கலாமா? ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில், அரசு இதனை முற்றிலுமாக புதுவிதமாக மாற்றிஅமைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து, அரசானது மக்களின் மீது கனிவான பார்வையோடு இதனை பரிசீலித்து, மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும். வருமானவரி நிர்ணயத்தைப் பொறுத்தவரையில், 'அதிக அளவு வரி செலுத்தும் மக்கள் - குறைந்த சதமானம் வரி - அரசுக்கு அதிக வருவாய் என்பது ', அரசின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். அரசின் வரி நிர்ணயம், ஒருபோதும் மக்களை மிரட்டுவதாகவோ, மென்னியைப் பிடிப்பதாகவோ இருந்திடக்கூடாது. மக்களாட்சியில் அரசுக்கு கொஞ்சம் நீக்குப்போக்கு அணுகுமுறை அவசியம். ஆகவே நமது அரசு, இதனை நன்கு பரிவோடு ஆராய்ந்து செயல்பட்டால், இந்திய அரசியல் வரலாற்றிலும், உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கிலும், அது ஒரு புதிய சரித்திரப் புகழ் வாய்ந்த பெருமையை, மாபெரும் சகாப்தத்தை உருவாக்கிய திறமைமிக்க அரசாக, பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் திகழும்.   21:59:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
6
2017
சம்பவம் வறட்சி காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்
தற்போது, விவசாயிகளின் மீது அரசியல் ரீதியிலான பார்வை தேவையற்றது. இப்போது அவர்களுக்கு தேவை வாழ்வாதாரம். அவர்களின் பணம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய அச்சங்கள். அவற்றை அரசாங்கம் நிச்சயமாக உடனடியாக தீர்க்கவேண்டும். மேற்கொண்டு, விவசாயிகளின் நிலைமைகளை உரிய அளவில் ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவர்களுக்கு மாற்றுத்தொழில் ஒன்றை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். மழை மற்றும் நதிகளின் நீர்வரத்து பாதிப்புகள் உருவாகும் பட்சத்தில், அதன் தாக்கத்திலிருந்து மீள்வதற்கோ, அதை மாற்றி வேறு தொழில்கள் புரிவதற்கோ விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் உற்பத்தி அவற்றிற்கான மிகப்பெரிய விற்பனைச் சந்தைகளை அரசு விவசாயிகளுக்காக நிறுவ வேண்டும். அதற்குரிய, அனைத்துக் கட்டமைப்பையும் இந்தியா முழுவதிற்கும், சீரிய முறையில் சிந்தித்து அரசாங்கம் புதிய வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும். விவசாயிகளின் நீர்ப் பயன்பாட்டு முறைகளை, புதிய நவீன மாற்று விவசாயத்திட்டங்களின் மூலமாக செம்மைப்படுத்த வேண்டும். குறைந்த நீர்ப்பயன்பாட்டில் அதிக மகசூல் பெரும் வழிமுறைகளை வேளாண்துறையினர் ஆராய்ந்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். மேலும், நிலப்பகிர்வு விவசாயத்தை, இதுபோன்று நீர் அருகிடும் காலங்களில், விவசாயிகள் மேற்கொள்ள ஒரு அமைப்பை விவசாயிகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, சாதாரண விவசாயி வரையில் பாதிப்பு அடையாத அளவிற்கு, நிலத்திற்கான பாசன அளவில், நீரின் வருகைக்கேற்ப குறைத்து விவசாயம் செய்யவேண்டும். இதன்மூலம், குறைந்தபட்ச விவசாய நிலங்களைக்கொண்ட ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பைப் பெறும். மழையின் அளவு என்ன? நீரின் வரத்து எத்தனை டிஎம்சி என அனைத்தையும் கணக்கிட்டு, பெருந்தனக்கார நிலச்சுவான்தாரர்கள், ஏழை எளிய விவசாயிகளின் நலன் கருதி, தங்களது நிலத்தின் விவசாயப்பரப்பளவை இயற்கையின் சூழலுக்கேற்ப, குறைத்து விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீரின் பயன்பாடு அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் சென்று சேர வைப்பதே ' நிலப்பகிர்வு ' விவசாயத்தின் நோக்கம். இதை அடுத்தடுத்து வருகின்ற காலங்களில், விவசாயிகள் ஒருமித்து நடைமுறைப்படுத்தினால், நிலைமைக்கேற்ப விவசாயமும் காப்பாற்றப்படும், விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள். விவசாயம் சார்ந்த இரண்டாம் நிலை தொழில்களை உருவாக்கி, விவசாயிகளின் வருமானத்திற்கு அரசு வழிவகை செய்கின்றபோது, மேலும் விவசாயிகளின் வாழ்வில் நிரந்தரமாக புத்தொளி வீசும்.   21:43:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
6
2017
சம்பவம் இலங்கை சிறையிலிருந்து 51 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
இந்திய மீனவர்கள், இந்திய கடல் எல்கைக்குள், இந்திய கடலோர காவல்படையின் கண்காணிப்பில் மீன்பிடித்தால், இத்தகைய அவலநிலை இந்திய மீனவர்களுக்கு எப்படி ஏற்படும்? இப்படி அரசின் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் மீன்பிடிப்பதற்கு கடலில் என்ன தடை இருக்கப்போகிறது? எல்லாம் சட்டப்படி அரசின் மேற்பார்வையில் நடக்கும்போது, எதற்கு இத்தனை சிக்கல் உருவாகப்போகிறது? இந்திய கடலோரக் காவல்படையை மீறி, இலங்கை அரசு இந்திய மீனவர்களை கைது செய்திட முடியுமா? இந்தியாதான் அதற்கு இடம்கொடுத்துவிடுமா?ஆகவே, மத்திய மாநில அரசுகள் இத்தகைய புதிய நடைமுறை மாற்றங்களோடு சட்டப்படியான மீன்பிடித்தலுக்கு, மீனவர்களை பாதுகாப்புடன் வழிநடத்திட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்திய மீனவர்களின் மீன்பிடிப்பு பிரச்சினைகளுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.   21:15:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
5
2017
அரசியல் சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது
அதிமுகவை பலகீனப்படுத்த அரசியல் எதிரிகள் சதிவேலைகளை துவங்கியிருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் தீபா. அதிமுகவில் பிளவை உண்டாக்கிவிட்டால், யாராருக்கெல்லாம் லாபம்? அதன் பிறகு என்ன நடக்கும்? அரசியல் எதிரிகள் விரும்பிய சரியான சூழல் வந்தபிறகு, திடீரென தேர்தல் நடந்தால் அதிமுகவின் நிலைமை என்ன? தீபாவை நம்பி வந்த அம்மாவின் சில அபிமானிகளின் எதிர்காலம் என்னாகும்? தீபாவிற்கு கட்சி நடத்திச் செல்லும் அளவிற்கு தொலைநோக்குப் பார்வை இருக்கிறதா? இன்றைய சூழலில் கட்சி நடத்தி செல்வது என்பது அத்தனை எளிதா? அதை பெரிய அளவில் வளர்த்துச் செல்லும் அளவிற்கு தீபாவிற்கு பக்குவம் இருக்கிறதா? இவையெல்லாம் தீபாவின் முன் வைக்கப்படுகின்ற கேள்விகள். தீபாவை தூண்டுபவர்கள், காரியம் கைகூடிய பிறகு ஓடிவிடுவார்கள். அதன்பிறகு தீபாவின் நிலை என்ன? ஆகவே, தீபா உண்மையிலேயே, தனது அத்தை ஜெயலலிதா அம்மாவின் மீது பாசம் உள்ளவராக இருந்தால், அதிமுகவின் மீது மாறாத அன்பு கொண்டவராக இருந்தால், தற்சமயம் அமைதி காக்க வேண்டும். தன்னைத் தூண்டுபவர்களின் சூட்சுமத்தை, திட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. அம்மா ஜெயலலிதா அதனை கட்டிக்காத்தவர். இப்போது சசிகலா தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறார். அவரது ஆளுமைத்திறத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கடந்த காலங்களில், அதிமுகவை அம்மா வழிநடத்தியதில், அவருக்கு பின்புலமாய் இருந்து செயல்பட்டவர்தான் சசிகலா. அம்மாவிற்குப் பிறகு கட்சியின் தலைமைப்பொறுப்பிற்கு வருகின்ற கட்சிப்பிரதிநிதிகள் அனைவருமே பொறுப்பாளர்கள் தான். அவர்களை, அம்மாவின் மீது அன்புகொண்டோரெல்லாம் ஆதரிக்கவே செய்யவேண்டும். எதிர்காலத்தில் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்கள் எவரும், தலைமைப் பொறுப்பிற்கு எளிதில் வரமுடியும். அதிமுகவெனும் ஜனநாயக கட்சியில், சாதாரண தொண்டனுக்கும் கூட, அத்தகைய பாக்கியத்தை அம்மா உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆகவே, இதனை நன்றாகக் புரிந்துகொண்டு தீபா செயல்பட வேண்டும். தேவையில்லாமல் கட்சிக்கு எதிரான போக்கில் செல்லாமல், பொறுமையாக இருக்கவேண்டும். கட்சியின் பொதுச்செயலாளரை எதிர்த்துப் பேசி, எதிரிகளின் தூண்டிலில் மாட்டி கட்சிக்கு இழுக்கு நேர அனுமதித்திடக் கூடாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், லட்சிய நோக்கத்துடன் ஏழை எளிய பாட்டாளி மக்களின் நலனுக்காகவும், சாதி சமயமற்ற சமத்துவத்தை பேணிக்காக்கவும் உருவாக்கப்பட்ட அதிமுக எனும் சமதர்மமிகு ஆலமரத்தை, யாரும் அவ்வளவு எளிதில் சாய்த்துவிட, எவருக்கும் இடம்கொடுத்து விடக்கூடாது.   20:37:28 IST
Rate this:
14 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X