கவர்னர்கள் பிஜேபியின் நேரடி பிரதிநிதியாக செயல்படுபவர்களை, பதவிக்காக மரியாதை கொடுக்கலாம், மற்றபடி அவர்களின் தரத்தை கொண்டு பெரிதுபடுத்தி கொள்ள வேண்டியதில்லை.
ராஷ்டிரபதி அரசியல் செய்யமுடியாது, இவர்களே கொண்டு வந்தவர்கள் அரசியல் ரீதியாக அரசியல் கட்சிகள் அவரை தேர்தலில் எதிர்த்தாலும், நடைமுறை கவ்ரவத்தை எந்த அரசியல் கட்சியும் நிராகரிக்கவில்லை.
நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ளவரை அரசியலுக்கு அப்பாற்பட்டவரை கொண்டுவந்தவர்களே உதாசீனப்படுத்துவது ஏற்புடையதில்லை. பார்லிமென்ட் கட்டியது பிஜேபி பணமல்ல மக்களின் பணம்.
சர்வாதிகார மனப்பான்மையை தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன, சின்ன விஷயம் மோடிக்கு பதில் ராஷ்டிரபதி திறந்தால் அந்த கட்டிடத்திற்கு மிகப்பெரும் கவ்ரவமாக இருக்கும். தமிழக சட்டமன்றத்தை கட்டிய முதல்வர் கலைஞர் தானாகவே அதை திறக்க வில்லை.
பதவியால் கவ்ரவம் வாய்ந்தவர்களை விட்டே திறந்தார் என்பது குறிப்பிட தக்கது.
27-மே-2023 16:28:24 IST
ஒன்றிய அமைச்சர்களின் மற்றும் அதிமுக்கியத்துவம் பெற்ற மோடி, நட்டா, அமித்ஷாவின் ஊர்வலம் கர்நாடகாவில் ஏகப்பட்டது நடந்தும், அக்கட்சி அனைத்து மாநில முதல்வர்கள், ஒன்றிய அனைத்து அமைச்சர்கள் கர்நாடகாவிலேயே இடம் பெயர்ந்திருந்தும், விடை எப்படி இருந்தது முப்பதுக்கும் மேல் வாய்ப்பு தொகையே பறிகொடுக்கும் அளவில் இவர்களின் ஆட்சிக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி வெகுதூரம் என்பதை எதார்த்தத்தில் உணர்ந்து அமைதியாக தீர்ப்பை எழுதினார்கள் ஏற்கனவே மக்கள் இல்லாத இடத்திலும் கையாட்டி சென்ற கூத்தை போல், நடை பயணத்திலும் ஏராளமான காமெடி காட்சிகளை ரசிக்கலாம்.
21-மே-2023 11:50:17 IST
வாழ்த்துக்கள், கர்நாடகா ஆரம்பமாக இருக்கட்டும், வரும் 12 மாதங்கள் பல இடர்பாடுகளை துச்சமென கருதி தொடர்ந்து சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி 2024 பொது தேர்தலில் நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க, மக்களின் ஏகோபித்த அன்பை பெற உறுதி எடுத்து கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஆஷா பாசங்களை புறக்கணித்து சட்ட ஆட்சியை நிலை நிறுத்துங்கள்.
20-மே-2023 18:28:10 IST
கள்ளப்பணத்தை ஒலிக்கின்றேன் என்ற போர்வையில் அதற்க்கு மேலும் மெருகூட்டவே செய்வதற்காக 2000 அறிமுகப்படுத்தப்பட்டபோதே விமர்சனம் ஆனது.
அப்போதைய கவர்னர் இருந்த போதே வேறு ஒரு கவர்னரின் பெயரில் வெளிநாட்டில் வைத்து 2000 நோட்டு அடிக்கப்பட்டதும், அதன் மூலம் வங்கிகளுக்கு கிடைக்கும் முன்பே பெரும் முதலாளிகளிடம் பெரும் தொகைகளில் கைமாறியது, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பணத்தை கொண்டுவந்தது என்று பல தில்லுமுழல்களை இந்த அரசு செய்தது,
கர்நாடகாவில் வாக்கிற்கு 10000 வழங்கியுள்ள காட்சிகளை கண்டோம். அப்படி இருந்தும் மக்கள் வாக்களிக்காமல் கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் ஜாமீன் தொகை கூட கிடைக்காத அளவிற்கு ஆளும் கட்சியை கேவலப்படுத்தினார்கள்.
இப்போது 5000 நோட்டை வெளியாக்கி அதிலும் சுருட்ட திட்டம் போட்டிருக்க கூடும். உலகம் கண்டிராத மாபெரும் ஊழல்களை அடுத்த ஆட்சி மக்களுக்கு தெரிவிக்கும் காலம் வரும் மக்கள் காத்து கொண்டிருக்கின்றார்கள்.
20-மே-2023 17:12:20 IST
இது போன்று அடிக்கடி நடக்கின்றது, தமிழகம், கேரளம் மற்றும் தென் தென் மாநிலங்களில் திட்டமிட்டு குண்டு வெடிக்க செய்தும் மத கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு சமூக விரோதிகள் செயல் படுவது போல் தெரிகின்றது. NIA ரொம்பவும் அமைதி காத்திருக்கின்றது.
17-மே-2023 17:19:18 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.