அரசியல்வாதி ஆவதற்கு தகுதி தேவை இல்லை, ஆனால், அட்மினிஸ்ட்ராட்டோர் என்ற நிர்வாகி ஆவதற்கு தான் தகுதி வேண்டும். எனவே, இவருவும் குட்டையில் ஊறிய மட்டை தான்.
17-நவ-2019 18:11:35 IST
சென்னை எழும்பூர் - சேலம் இடையே (விழுப்புரம், விருத்தாச்சலம் வழியாக) பகல் நேர இன்டெர்சிட்டி இயக்கவேண்டும். மேலும், சில கூடுதல் ரயில்களை சென்னை தாம்பரத்திலுள்ள மூன்றாவது டெர்மினலிருந்து, சேலம் வழியாக இயக்கலாம். இதனால் சென்னை சென்ட்ரல் - சேலம் இடையினால ரயில்களில் கூட்டம் குறையும். மேலும், இந்த தடத்தில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.
26-அக்-2019 09:04:16 IST
அளவுக்கு அதிகமாக சம்பாதித்தால், நிம்மதி இருக்காது என்றார். இது கூலிவேலை செய்பவருக்கு மட்டும்தான் பொருந்துமா ? இவருக்கு இல்லையா ?? உபதேசிப்பது எளிது, ஆனால் பின்பற்றுவது கடினம். ரசிகர்கள் அன்னாடம் காய்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால், இவர் மட்டும், விடாமல் கோடி கோடியாக சம்பாதிப்பாராம். இதை உணராத ரசிகன் எல்லாம் ஒரு மனிதனா ??
12-அக்-2019 14:03:13 IST
அதேபோல், சென்னை எழும்பூர் - சேலம் இடையே காலை / மாலை நேர இன்டெர்சிட்டி இயக்கவேண்டும். இதனால் கோவை எஸ்பிரஸில் கூட்டம் குறையும். இரவு நேரத்தில், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் தேவை. மேலும் சில ரயில்களை இந்த வழித்தடத்தில் திருப்பி விடுதல் போன்றவையும் தேவை. ஆனால், நமது முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் தென்னகத்திருக்கு ரயில்களை இயக்க விடாமல், டெல்லியில் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகின்றனர். காரணம், இவர்கள் தென்மாநிலங்களில் இயக்கம் தங்களது தனியார் பேருந்துகளில் வருவாய் நசிந்துவிடும் என்பதற்காகத்தான். சந்தேகம் இருப்பவர்கள், டெல்லியில் ரயில் பவன் அதிகாரிகளை கேட்டு தெரிந்துகொள்ளவும். பயணியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து, ரயில்வே துறை மீது பொது நல வழக்கு தொடர்ந்தால், இந்த பிரச்சினை உடனே முடிவுக்கு வரும். ஊதும் சங்கை ஊதியாகி விட்டது, இனி விடியலை நோக்கி போகவும்.
24-செப்-2019 07:04:32 IST
நல்லா கவனிங்கன்னா. அடுத்த நடவடிக்கை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மேல தானுங்கன்னா. நீங்க ஒட்டுமொத்தமா, பொட்டியை கட்டவேண்டிய நேரம் வந்தாச்சுங்கண்ணா. ஏற்கனவே, உங்க குடும்பத்துக்கு இத்தாலி குடியுரிமை இருக்கறதா கேள்வி. எப்போங்கன்னா புளிசாதம், தயிர்சாதம் கட்டிக்கிட்டு பொறப்படறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ??? ஒரு உறைல ரெண்டு கத்தி இருக்க முடியாம, உங்க தாத்தா நாட்டை ரெண்டு கூறா போட்டு, உங்களுக்கு ஒரு உறை கத்தி, உங்க அந்த பின்பக்க வீட்டுக்கு ஒரு உறை கத்தின்னு ஏற்பாடு செஞ்சி கொடுத்தாரு. இப்போ உங்க ரெண்டு உறையை மொத்தமா கிழிச்சிட்டாங்கன்னா. நீங்க ரெண்டு பேரும், கத்திய மடக்கிட்டு, நீங்க இத்தாலி பக்கம் போய்டுங்கன்னா. அந்த பின்பக்க ஜாடைல இருக்கற, உங்க பங்காளி, பிரியாணி பார்சல் செஞ்சிகிட்டு, பாகிஸ்தான் பக்கம் போய் சேரட்டும். சீக்கிரம் ஊரு போய் சேருங்க ரெண்டு பேரும். வண்டிக்கு நேரமாச்சு.
07-ஆக-2019 05:48:43 IST
நிச்சயமாக முடியும். இதை செய்ய ஒரு சில விஷயங்கள் மட்டும் போதும். காவிரி விவசாயத்திற்கு உதவி (மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் ஒழிப்பு), காவிரி நீர் மேலாண்மை திட்ட மேம்பாடு, விவசாய தொழில் நவீன மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய உதவி திட்டம், தென்தமிழகத்தில் தொழிற்பேட்டைகள், இவற்றிற்கு தரமான சாலை மற்றும் ரயில் இணைப்பு அருகிலுள்ள நகரங்களுடன், தமிழக முக்கிய நகரங்களுக்கிடையில் புதிய ரயில்கள் இயக்கம், நீட் தேர்விற்கு தரமான மற்றும் இலவச பயிற்சிமுறை. இவை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நடைமுறைபடுத்திவிட்டு, இவற்றை மக்களிடம் தெரிவித்து போதிய விழிப்புணர்வு செய்துவிட்டு, பின்னர் வோட்டு கேட்டு பாருங்கள். நடக்கிறதா இல்லையா என்று ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது ?? தாமரை மலர்ந்தே தீரும் என்று வாய்ச்சவடால் விட்டால் போதாது. நம்பிக்கை வேறு, நடைமுறை வேறு. மேற்சொன்னவற்றை செய்ய விருப்பம் இல்லையெனில், தமிழக பா.ஜ. க. வை கலைத்துவிட்டு, அலுவலகத்திற்கு பெரிய திண்டுக்கல் பூட்டு வாங்கி உடனே பூட்டவும்.
28-ஜூலை-2019 11:12:46 IST
இந்த பிரிவு அடாவடி மாணவர்களுக்கு, ஜாதியின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள இடவொதுக்கீட்டை, 100 % மேம்படுத்தவேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறேன். மேலும், அனைத்து சலுகைகள் உட்பட, பதவிகளில் மிக மிக உச்சபட்ச உயர்வு அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறேன்.
24-ஜூலை-2019 10:50:59 IST
அப்படி வாங்க வழிக்கு. திராவிடம் அப்படினு பேசிட்டு, ஆங்கில மொழி பேசும் பயிற்சியை ஆரம்பிச்சீங்களா? இது தான் யதார்த்தம். தமிழ் தமிழ் னு சும்மா சொல்லிட்டு முட்டாளாக்கிட்டு, ஆங்கிலம் கற்காம இருந்தா, உலகளாவிய வாய்ப்பு பெறமுடியாது என்பது தான் உண்மை. கமலுக்கு வாழ்த்துக்கள். தாய்மொழி மிக முக்கியம், அதன் மூலம் தான் மற்ற மொழிகள் கற்க முடியும். ஆனால் அதற்காக மற்ற மொழிகளை கற்காமல் இருப்பது தவறு அல்லவா?? அதுசரி, திராவிடம், தமிழ் என்று பேசுபவர்கள், தங்கள் வாரிசுகளுக்கு மட்டும், ஆங்கில வழி கல்வி போதிப்பது ஏன் ??
23-ஜூலை-2019 13:02:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.