Nagercoil Suresh : கருத்துக்கள் ( 596 )
Nagercoil Suresh
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2022
அரசியல் பழனிசாமி அப்பீல் வழக்கு ஆக.,22ல் விசாரணை?
தற்போதய தீப்பும் உச்சநீதிமன்றதின் வழிகாட்டுதலின் படி தான் தீர்ப்பு வழங்கப்பட்டது ஆகையால் திங்கள்கிழமை தீர்ப்பை சில காலங்களுக்கு தள்ளி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது, நீதிபதிகள் சூழ்ச்சி செய்பவர்களுக்கு ஒருநாளும் துணை போக மாட்டார்கள். தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி போராடிய மக்களை சுட்டுக் கொல்லும் பொழுது இதே பழனி தான் காவல்துறைக்கு தலைவராக இருந்துள்ளார், பழனிக்கு தெரியாமல் கண்டிப்பாக துப்பாக்கி சூடு நடத்தியிருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை,"100 நாட்கள் போராடிய மக்களை சுடுவதற்கு முதல்வர் அனுமதி வழங்காமல் இருந்தால் எந்த காவல் துறை அதிகாரியும் இதை செய்திருக்க முடியாது, முதல்வரிடம் கேட்காமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை " 13 பேரை சுட்டு தள்ளியதற்கு பழனி தான் முழு பொறுப்பும் ஏற்கவேண்டும்..தற்போதய தமிழக அரசு தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு உடனே நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் அதில் யார் ஆட்சியில் இந்த கொடிய துயரம் அரங்கேறியது, பெயரும் தேதியும் பதிக்க வேண்டும், அதேபோல் கோட நாடு வழக்கையும் CBI இடம் கொடுக்க வேண்டும்...   09:20:21 IST
Rate this:
6 members
0 members
6 members

ஆகஸ்ட்
18
2022
லைப் ஸ்டைல் தூக்கத்தில் நடப்பவரா நீங்கள்? காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்
"எனவே கனவில் துரத்தும் யானையிடம் இருந்து தப்பிக்க நாம் ஓட முயலுவோம்" யானையை கண்டால் ஓடாமல் பிறகு என்ன செய்வது? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்...   08:34:59 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
17
2022
அரசியல் பழனிசாமி நடத்திய கூட்டம் விழுந்தது தடை!
பன்னீர், பழனி இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து பயணியுங்கள், தமிழகத்தில் ஆ தி மு க எனும் கட்சி நிலைக்க வேண்டும்.. பழனி ஒத்துழைக்க மறுத்தால் சசிகலாவோடு சேர்ந்து பன்னீர் பயணிக்க நேரிடும் அதற்கு பழனி இடம் கொடுக்கக்கூடாது. பழனி ஜெயலலிதாவைப்போல் இரண்டு விரல்களையும் இரட்டை இலைக்கு சமமாக அசைத்து காட்டிய உடன் மக்கள் ஜெயலலிதா வந்து விட்டார் என நினைப்பார்கள் என நம்புகிறார் ஆனால் ஒருநாளும் பழனி எம்ஜிஆரும் ஆக முடியாது ஜெயலலிதாவும் ஆக முடியாது. வரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணித்தால் மட்டுமே தி மு க விற்கு போட்டி கொடுக்க முடியும். பழனியின் தப்பு கணக்கினால் அதிக லாபம் பெறுவது தேசிய கட்சிகள் மட்டுமே. பன்னீரும் பன்னீரோடு சேர்ந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விடும் நேரமிது எதுவாக இருந்தாலும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் தனியாக வாழ்ந்தால் தாடி மட்டும் தான் மிஞ்சும்...   08:34:33 IST
Rate this:
4 members
1 members
6 members

ஆகஸ்ட்
17
2022
பொது ஜென்டில்மேன் பாணியில் வங்கி கொள்ளை முக்கிய குற்றவாளி முருகன் வாக்குமூலம்
போன முறை லலிதா ஜுவல்லரி கொள்ளை அடித்தவனும் இதே பெயருடையவன் தான்.. இப்படியே விட்டால் இவங்களைப்போல் இன்னும் நிறய கொள்ளை கும்பல்கள் முளைக்கும் அதற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், வெறும் மாவு கட்டு மட்டும் பத்தாது கும்பலின் தலைவனை மட்டுமாவது...   10:36:46 IST
Rate this:
2 members
0 members
10 members

ஆகஸ்ட்
15
2022
பொது "25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும்" - பிரதமர் மோடி சுதந்திர தின உரை
அடுத்த 25 ஆண்டின் வளர்ச்சி குறித்து பேசியது வரவேற்பிற்குரியது, குறிக்கோள் வைத்து பயணிப்பது வெற்றியை தரும் அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் IT துறையில் உலக அளவில் முத்திரை பதித்தார்கள் குறிப்பாக பெங்களூர் மாநகரம் உலகத்திற்கு முன்னோடியாக விளங்கி சாதனை படைத்தது இந்த துறையின் வளர்ச்சிக்கு சிறிய பங்கு வாஜ்பாயாய் அரசுக்கும் சொந்தமாகும், இந்த துறையில் தற்போது வரையிலும் எந்த நாடாலும் போட்டி இட விடமுடியாத இடத்தில் இந்தியா உள்ளது அதற்கு முழு கிரெடிட்டும் காங்கிரஸ் கட்சியையே சேரும்.. ஏதாவது ஒரு துறையில் காங்கிரஸ் கட்சி சாதனை படைத்ததைப்போல் பாஜ க அரசும் உலக அளவில் பெயர் வாங்கி சாதனை படைக்கவேண்டும்...   09:51:23 IST
Rate this:
3 members
0 members
13 members

ஆகஸ்ட்
13
2022
அரசியல் நத்தம் அருகே வினோத எறும்புகள் வனவிலங்குகளை சாகடிப்பதால் மக்கள் பீதி
ஒரு வகையான காட்டு எறும்பாக இருக்கலாம், இவைகள் கருமை நிறத்தில் இருக்கும், பெரிய படையோடு மிக வேகமாக பயணிக்கும், இதற்கு மோப்ப சக்தி அதிகம், இவைகள் பொதுவாக மரங்களின் மூட்டு பகுதிகளில் வாழும், இவைகளை பார்த்து தான் முன்னோர்கள் கூறுவார்கள் எறும்பு ஊர அம்மியும் கரையும் என்பார்கள்...இதனை கட்டுப்படுத்த எறும்பு பொடிகளை அதன் கூடுகளில் தூவி கட்டுப்படுத்தலாம்...   09:53:33 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
12
2022
அரசியல் தாய்பாலுக்கும் ஜி.எஸ்.டி., வரும் காங்., மாஜி தலைவர் காட்டம்
ஒரு கேள்வி கேட்டாலும் சும்மா நறுக்குன்னு கேட்டுள்ளார், அண்ணாமலையும் இதே போல் கேள்விகளை கேட்கணும். அரிசி 26 கிலோ பாக்கெட் வந்தது இளங்கோவனுக்கு தெரியாதுபோல...   09:27:34 IST
Rate this:
3 members
1 members
4 members

ஆகஸ்ட்
11
2022
அரசியல் கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறியதால் பா.ஜ.,வுக்கு பின்னடைவு
மசோதாக்களை விட முக்கியம் குஜராத் மாநில தேர்தல், பிரதமர் இலவசங்களை குறித்து திரும்ப திரும்ப பேசுவதிலிருந்தே தெரிகிறது ஆம் ஆத்மீ கட்சி குஜராத்தில் நுழைகிறது என்பது... குஜராத் மாநில தேர்தலின் வெற்றி 2024 தேர்தலுக்கு மிக முக்கியமானது அதற்கு டெல்லி ஆட்சியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்துவது பாஜகவின் எதிர்காலத்திற்கு உதவும்..குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மீ கட்சி பதம் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...   09:32:54 IST
Rate this:
2 members
1 members
10 members

ஆகஸ்ட்
8
2022
அரசியல் வேட்டி, சேலை திட்டம்அண்ணாமலை குற்றச்சாட்டு
இலவசம் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு இப்படி பேசுதுவது பிரதமருக்கு தெரியுமா? கருணாநிதி டிவி, ஜெயலலிதா ஆடுகள் இலவசமாக கொடுத்து ஏழைகளுக்கு உதவினார்கள் அதை மறக்க முடியுமா. ஏழைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய நேரத்தில், கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தால் அதனால் பல ஏழைகள் பயன்பெறுவார்கள் அதே போல நேரடியாக வேட்டி சேலை நெய்பவர்களும் சேர்ந்து பயன்பெறுவார்கள்...   09:42:59 IST
Rate this:
5 members
1 members
7 members

ஆகஸ்ட்
8
2022
அரசியல் இது உங்கள் இடம் பிள்ளையை கிள்ளியவர்கள் தொட்டிலை ஆட்டுவதா?
"மாணவியரின் தற்கொலைகள், தொலைக்காட்சிகளில் முதன்மை செய்தியாக அடிக்கடி காட்டப்படுகின்றன" இது உண்மையான கருத்துதான், தற்கொலை செய்பவர்களை ஒரு போதும் பொதுவெளியில் விளம்பரப்படுத்தக்கூடாது அது மென்மேலும் பலரை தூண்டிவிடும். உதாரணமாக ஒரு சிறு குழந்தையிடம் 10 பாத்திரங்களை மூடி வைத்துவிட்டு அதில் ஒரு பாத்திரத்தை மட்டும் குறிப்பாக திறந்து பார்க்கக்கூடாது என கூறிவிட்டு மறைந்து நின்னு பாருங்கள் அந்த குழந்தை அதை தான் முதன் முதலில் திறந்து பார்க்கும்...அதே போல மீனாட்சி பட்டாபிராமனின் கருத்தும் உண்மை தான் முற்காலங்களில் உள்ள சினிமாக்களின் முடிவுகளில் டைரக்டர் தற்கொலையோடு படத்தை முடித்திருப்பார் அது மிகவும் தவறான செயல் ஆக மொத்தத்தில் கஸ்தூரியின் கருத்தும் மீனாட்சியின் கருத்தும் வரவேற்பிற்குரியது இரு கைகளையும் சேர்த்து தட்டினால் தான் ஒலி வரும் என்பதைப்போல இவர்களின் கருத்தும் செய்தியில் குறிப்பிட்டவர்களிடம் ஓங்கி ஒலிக்கட்டும்..   09:29:40 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X