Krish Ramadas : கருத்துக்கள் ( 3 )
Krish Ramadas
Advertisement
Advertisement
ஜனவரி
3
2017
சிறப்பு பகுதிகள் கோவிந்தராசனின் மணக்கும் தாழம்பூ
மண மணக்கும் தாழம்பூவின் வாசத்தை இத்தனை சீக்கிரம் முகர்ந்து நிஜக் கதையில் வெளிக் கொண்டு வந்த தினமலர் நாளிதழுக்கும், பதிவு செய்துள்ள திரு.முருகராஜ் அவர்களுக்கும் சிற்றிதழ்கள் உலகம் பாராட்டுதலையும், வாழ்த்துதலையும் தெரிவிக்கிறது. 38 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து இதழ் நடத்துவது என்பது ஒரு தவம், வெறி, காதல், அர்ப்பணிப்பு, உழைப்பு, தீராத மோகம் என்று அடுக்கி கொண்டே போகலாம். இது ஒரு இமாலய சாதனை. இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் அடையாளம் கண்டபோது, இந்த சாதனையாளர் உலக அளவில் அடையாளப்படுத்தபட வேண்டியவர் என்று தீர்மானித்தேன். அவரைப் பற்றி என் முக நூலில் அறிமுகம் செய்து வைத்தேன். இதழுக்கு சைன்ஹதா கட்ட நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன். இவர் பாராட்டப்பட வேண்டியவர். உலக அளவில் அறியப்பட வைக்க வேண்டியவர். இன்று கூட என் பொறுப்பில் 10 இதழ்களுக்கு என் சந்தா கட்ட கொடுத்ததில் தாழம்பூ இதழுக்கும் பரிந்துரைத்துள்ளேன். தினமலரில் வெளி வந்த அதிர்ஷ்டம், இன்று அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் என்ற இதழில் முகப்புப் படத்தில் தாழம்பூ கோவிந்தராஜன் இடம் பிடித்திருக்கிறார். தாழம்பூ ஆசிரியர் திரு.கோவிந்தராஜன் , அவருக்கு உற்ற துணை புரியும் அவர் மனைவி, மகன்கள், இந்த இதழுக்கு ஆதரவு நல்கிய எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் சிற்றிதழ்கள் உலகம், வாழ்த்தையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று அவருடன் செல் பேசியில் பேசிய பொது அனைவருக்கும் தன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். கடைசியாக சொன்ன வார்த்தை தினமலரும், நீங்களும், ஒரு குக்கிராம சிற்றிதழாளனை ஒரே நாளில் உலக அளவில் கொண்டு சென்று விட்டீர்கள். உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் என்று சொன்ன பொது அவருடைய வார்த்தையில் அடக்க முடியாத உணர்வின் வெளிப்பாட்டை உணர்ந்தேன். இது போன்ற எத்தனையோ சாதனையாளர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும். அதில் தினமலர் முன்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி. - கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ்கள் உலகம், பெரம்பலூர் [இருப்பு துபாய்], 05 .01 .2017 .   19:47:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
12
2016
சிறப்பு பகுதிகள் ஒரு பழைய கதையும், அது இப்போது ஏற்படுத்திய சந்தோஷக்கதையும்...
ணக்கம். வாழ்த்துக்கள் நண்பர். துயர நினைவுகளிலும் ஒரு ஆறுதல் அளிக்கும் வெற்றி. மீண்டும் வாழ்த்துகின்றேன். தினமலரின் தொடர் வாசகன் என்ற முறையில் நான் படிக்கும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் சொல்கிறார்கள், பொக்கிஷம், நிஜக் கதை பகுதியாகும். செய்தித் தாளை மேலோட்டம் விடும் போதே இந்த பகுதிகளில் என்ன உள்ளது என்பதை அவசியம் பார்த்து விடுவேன். நீங்கள் எழுதும் நிஜக் கதை பகுதி உண்மையிலேயே என்னக் கவர்ந்த பகுதி. நீங்கள் குறிப்பிடுகின்ற பலரை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றேன். உண்மைக்கும், சத்தியத்திற்கும் என்றுமே வெற்றி உண்டு. அது தான் இப்போதும் நடந்துள்ளது. மேலும் பல வெற்றிகளை குவித்து சிறப்புடன் வாழ சிற்றிதழ்கள் உலகம் சார்பாக என் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம். கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி, 14.11.2016. குறிப்பு : சிற்றிதழ் தொடர்பான நிஜக் கதை ஒன்று நீங்கள் எழுத வேண்டும். அதற்கு உரிய நபரை உங்களுக்கு நான் அடையாளப்படுத்துகின்றேன். திரு.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம், அறந்தாங்கியிலிருந்து 28 வருடமாக " தாழம் பூ " என்ற சிற்றிதழை கையெழுத்து பிரதியாக நடத்தி வருகின்றார். சாதாரண வாடகை மிதி வண்டி நிலையம் உரிமையாளர். இன்றைய பல பிரபல எழுத்தாளர்கள் அவர் இதழில் எழுதியவர்கள். அவரின் இலக்கிய ஆர்வம் உலகிற்கு அடையாளப்படுத்தப் பட வேண்டியது அவசியம். தயவு செய்து அவரை பற்றி ஒரு கட்டுரை எழுத தாழ்மையுடன் வேண்டுகின்றேன் அவருடைய செல் பேசி எண் : 9688013182   09:22:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
26
2016
பொது நவீன தமிழ்மொழியின் தேவை அரசியல் மொழி!
வணக்கம் கௌதம். நவீன தமிழ் மொழியின் அரசியல் மொழிக்கான தேவை குறித்த தங்கள் கட்டுரை மிகச் சிறப்பானது. கடந்த காலங்களில் வெளிவந்த சிற்றிதழ்கள் அன்றைய காலக் கட்டத்திற்கு தேவை எனக் கருதியதால் தான் அவை இலக்கியம், கவிதை என தங்கள் எல்லையை வரையறுத்துக் கொண்டன. அதில் அவை எண்ணிலடங்கா பல சாதனைகளை செய்துள்ளன என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். தேவைகள் மாறும் போது பிரக்ஞை போன்ற இதழ்கள் தோன்றுகின்றன. சிற்றிதழ்களின் வாசகர் வட்டம், தொடர் வெளியீடு குறைவான தன்மை, தனி நபர் முயற்சியில் வெளியாவதின் காரண்ம், போன்ற காரணங்களால் இந்த சூழ்நிலை தவிக்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் நவீன தமிழ் இலக்கிய வெளியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி மேலை நாட்டு இலக்கியங்களை அறிமுகப்படுத்தியவைகள் சிற்றிதழ்கள்தான். அது சிற்றிதழ்களால் மட்டும் தான் முடியும் என்பது என் திடமான எண்ணம். என்னைப் போன்ற சாதரண வாசகர்கள் தாங்கள் குறிப்பிட்டது போல் இணைய வெளி உலக இலக்கியங்களின் மீது பார்வையை செலுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இலக்கியவாதிக்கு அரசியல் தேவையா? கட்டாயம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை வெளிக் கொணர்ந்து அவற்றிற்கான தீர்வை நோக்கி நகர்த்தும் ஒரு காரணியாக இலக்கியவாதிகள் திகழ வேண்டும். இலக்கியவாதி நேரடி அரசியலில் ஈடுபடும் தேவை இங்கு எழவில்லை என்பது என் எண்ணம். உதாரணமாக பாரதியை நாம் எடுத்துக் கொள்ளலம். விடுதலைப் போராட்டத்தில் அவனின் பங்கு மகத்தானது. ஆம். நேரடி அரசியல் செய்யாமல் அவன் தன் எழுத்துக்களின் மூலம் ஒரு புரட்சி விதையை தூவவிட்டு, அது செடியாகி, மரமாகி போராட்டக் களத்திலே வீரியமிக்கதாக விளங்குவதற்கு துணையாக நின்றதை நாம் அறிவோம். அவன் ஒரு கிரியா ஊக்கி. அதே தான் நம் எழுத்துகள் நீங்கள் குறிப்பிட்டது போல மூன்றாம் உலக நாடுகளின் எழுத்தாளர்களின் வீரியத்தை நம் எழுத்துக்களும் பெற வேண்டும் என்ற தங்கள் ஆதங்கம் நூறு சதம் சரியானது. இதற்கான எழுத்து வெளியை நிச்சயம் சிற்றிதழ்களால் தான் தர முடியும் என்பது என் திடமான எண்ணம். அதற்கான முன்னெடுப்பு அவசியப்படுகிறது. இதையெல்லாம் சில பெரும் எழுத்தாளர்களாக பாவித்துக் கொள்ளும் சில ஜால்ராக்கள் ஏற்றுக் கொள்ளாததோடு மட்டுமில்லாமல், ஏகடியம் பேசுவதற்கும் தயங்க மாட்டார்கள் என்பது நாமறிந்ததே. அவர்களை புறந்தள்ளிவிட்டு நம் இலக்கு நோக்கி பயணிப்பது தான் சரியாக இருக்கும் என்பது வேண்டுகோள். வாழ்த்துக்கள் கௌதம். - கிருஷ்.ராமதாஸ், துபாய் [பெரம்பலூர்]. 26.06.2016.   09:30:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X