அவ்வளவு வையிட்டானா படத்துடன் அவன் படம் போட்டி போடா முடியாது என்பதை சூசகமாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். என்றாலும் ஒரு கலைஞன் ஒரு சிறந்த படம் என்று பெருவாரியர்களால் பேசப்பட்டும் அங்கீகரிக்கவில்லை என்றால் அது அழகல்ல. அவரின் சிறு புத்தியை காட்டுகிறது. தன் பட ப்ரோமோஷனில் அடுத்த படம் பற்றி பேசுவதை தவிர்ப்பது சரி என்றாலும் ஒரு வரைமுறை / நாகரிகம் இன்றி பிழைப்புக்காக பேசுவது என்பது நன்கு தெரிகிறது.
10-ஆக-2022 09:22:55 IST
தமிழ் மற்றும் கடவுள் இது இரண்டு தான் இவர்களுக்கு பேசு பொருள். ஒரு மாநிலத்திற்கு வேறு எந்த பிரச்சினையுமே இல்லையா? இந்தியாவில் பேசும் மொழியின் அடிப்படையிலேயே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சமஸ்க்ரித மொழிக்கு தனி மாநிலம் இல்லை. இந்து மதம் தாண்டி புத்த, ஜைன, சீக்கிய மதங்களில் புராதன நூல்கள் சமஸ்க்ரிதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. பல உலக நாடுகளில் இதன் புராதனத்தை பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிற்கு சமஸ்க்ரித வளர்ப்பில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. மேலும் தமிழ் வளர்ப்பு என்பதில் ஹிந்தி அல்லது சமஸ்க்ரித எதிர்ப்பு ஏன் வருகிறது?
24-மே-2022 11:52:44 IST
அது சேரி...குறை சொல்லியே ஓராண்டு நிறைவு செய்துவிட்டார்கள். பிரச்சினை பெரிதாக இருந்தால் கூப்பிட்டு பேசலாம் அல்லது மின்னஞ்சல் செய்யலாம். எவ்வளவு காலம் தான் கடிதம் எழுதுவார்கள்?
16-மே-2022 17:09:53 IST
அரசியல், மதம் தாண்டிய தரம் தாழ்ந்த பதிவு...ஒரு இந்தியனாக ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக இந்தியா எந்த உள் நாட்டு அல்லது வெளி நாட்டு அமைப்போடு மோதுவதாக இருந்தாலும் இந்த குடிமகனின் முழு ஆதரவு உண்டு. ஜெய் ஹிந்த்
16-நவ-2021 11:29:08 IST
பிரியாணி கலாச்சாரம் சில தந்திரமான வியாபாரிகளால் வேண்டுமென்றே பல யுக்திகளால் ஒரு தவிர்க்கமுடியாத உணவு போன்று உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை இரண்டொரு வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அது மருத்துவ ரீதியாக தேவையான ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து உணவாக இருந்தது. இப்படி தினமும் உண்ணும் பழக்கம் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது என்று டாக்டர்களே கூறுகிறார்கள். அரசாங்கமும் என்றும் 'சமச்சீர்' உணவையே உடல் நலத்திற்கு உகந்ததாக பரிந்துரைக்கிறது. சமீபகாலமாக இந்த பிரியாணி ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணவு.
20-செப்-2021 16:15:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.