Ram Mohan Thangasamy : கருத்துக்கள் ( 134 )
Ram Mohan Thangasamy
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2019
பொது மாத்தியோசிக்கும் இளைஞர்கள் புதிய வாக்காளர்கள் முடிவு என்ன?
இளைஞர்கள் பெரும் அளவில் வாக்களிக்க வந்ததை வரவேற்போம். அவர்கள் பெருவாரியாக திரு கமல் அவர்களின் கட்சிக்கும், திரு சீமான் அவர்களின் கட்சிக்கும் வாக்களித்ததை வரவேற்போம். இந்த தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட, ஆளும் காட்சிகள் மீது இளைஞர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பெரும் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள் மீது இவர்களது கோபம் திரு கமல் மற்றும் திரு சீமான் அவர்களுக்கு பெரும் வாக்குகளாக மாறி விட்டதை இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கும். கொள்கை இல்லாத கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமையும். நன்றி வணக்கம்.   12:54:32 IST
Rate this:
8 members
1 members
5 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் யாருக்கு ஓட்டு போடுறீங்க? மக்களிடம் கமல் கேள்வி
திரு கமல் அவர்களின் தைரியமான இந்த பதிவு சிறிது அதிர்ச்சி அளித்தாலும் பெரும்பான்மையான தமிழர்களின் உள் உணர்வை நன்றாக பிரதிபலித்துள்ளது. வரும் 2019 பாராளுமன்ற, மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆச்சரியத்தக்க வகையில் திரு கமலுக்கு மக்கள் பெரும்பான்மையாக வாக்களிப்பர். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆண்ட மற்றும் ஆளும் கட்சிக்கு இது பேரிடியாக இருக்கும். மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள், நல்ல படித்த மற்றும் மக்கள் நலம் சார்ந்தவர்கள் என்பதால் மக்கள் இந்த முறை மாற்றத்தை வேண்டி இவருக்கு வாக்களிக்க கூடும். எனது கணிப்பு படி மக்களவை தேர்தலில் சுமார் 30 முதல் 35 லட்சம் வாக்குகள் வரை பெற கூடும். வாழ்க மக்கள் நீதி மையம். ஆதரிப்பீர் TORCHLIGHT சின்னத்தை. வெற்றி நமதே. நன்றி வணக்கம்.   09:27:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் பா.ஜ., கூட்டணிக்கு 263 தொகுதிகள் கிடைக்கும் சி.என்.என்.நியூஸ்18 கணிப்பு
தமிழ்நாட்டில் மக்கள் மனதில் மோடி எதிர்ப்பு அலை மற்றும் ஆளும் கட்சி எதிர்ப்பு அலை தான் கடுமையாக வீசுகிறது. நேற்று (09 .04.2019) சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அதிமுக, பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேநேரத்தில் பாமகவினர் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். தி மு க + காங்கிரஸ் கூட்டணிக்கு இது சாதகமாவே இருக்கிறது, எனது கணிப்பின்படி மோடி மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது ஆனால் போன தேர்தலில் ஜெயித்த அமோக வரவேற்பு இருக்காது. தமிழ்நாட்டு மற்றும் பாண்டிசேரியில் தி மு க கூட்டணி 35 இடங்களையும் + அண்ணா தி மு க வெறும் ஐந்து இடங்களையும் தான் வெல்லும். (BJP கோயம்புத்தூரில் மட்டுமே வெல்லும்). தினகரன், கமல் மற்றும் சீமானுக்கு மக்கள் பட்டை நாமம் சாத்துவார்கள். ஆனால் வெல்லும் மற்றும் தோற்கும் கட்சிகள் இழக்கும் இவர்களால் தான் நன்றி. வணக்கம்.   10:08:12 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
அரசியல் இது நம்ம வீட்டு கல்யாணம் அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க., பாடம்
பா ம க இந்த தேர்தலில் மண்ணை கவ்வ போவது நிஜம். மக்கள் எவ்வளோவோ முன்னேறி விட்டார்கள். இந்த பொருந்தா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். அண்ணா தி மு க மற்றும் தே மு தி மு க உள்ளடி வேலையில் பா ம க நிச்சயம் தோல்வி அடையும். நன்றி வணக்கம்.   10:09:10 IST
Rate this:
8 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் கனிமொழியை வீழ்த்த சரத்குமார்
திருமதி கனிமொழியின் தூத்துக்குடி வெற்றி உறுதி. திரு சரத்குமாரின் பிரச்சாரத்தால் நடிகர் என்பதால் சில ஆயிரம் வாக்குகள் திருமதி தமிழிசைக்கு கிடைக்குமே தவிர, திருமதி தமிழிசை தோற்பது உறுதி. திரு காமராஜர் இருந்தவரை காங்கிரஸ் கட்சியை பெருவாரியாக நாடார்கள் ஆதரித்தனர். இரு திராவிட கட்சிகளும் நாடார்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே பார்த்தனர், தென் மாவட்டங்களில் பெருவாரியாக இருக்கும் நாடார்களுக்கான அந்தஸ்தை எந்த கட்சியும் இதுவரை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மக்கள் sterlite துப்பாக்கி சூட்டினால் மிகவும் சூடாகவே இருக்கிறார்கள். எனவே இங்கு பிஜேபி தமிழிசை தோற்பது உறுதி உறுதி உறுதி. நன்றி வணக்கம்.   15:03:09 IST
Rate this:
25 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் யாருக்கான ஓட்டு இது?
தமிழ் நாட்டு மக்கள் மிக தெளிவாக முடிவெடுப்பவர்கள். மத்திய மாநில அரசுகள் மீது உள்ள வெறுப்புகள் ஆளும் கூட்டணிக்கு பெரும் சரிவை கொடுக்கும். ஆனால் அதை முழுவதும் பயன்படுத்தி கொள்ள தி மு க வினர் தவறி விட்டனர். திரு தினகரன் வாக்குகள் அண்ணா தி மு க வாக்குகளை பிரிக்கும் ஆகையால் சுலபமாக தி மு க + காங்கிரஸ் ஜெயித்து விடலாம் என்று மனக்கணக்கு பிம்பம் உடையும். இந்த தேர்தலில் திரு கமல் அவர்களின் கட்சிக்கு பெருவாரியாக இன்றைய இளைய சமுதாயம் வாக்களிக்கும். மக்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, கோவை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் கணிசமாக வாக்குகள் பெறலாம். எனது கணிப்பு படி சுமார் 40 லட்சம் வாக்குகள் வாங்குவார் என்பது உண்மை. அ தி மு க கூட்டணி - 11 இடங்களையும், திரு தினகரன் 2 இடங்களையும் மற்றும் மீதி இடங்களான 27 இல் தி மு க கூட்டணி கஷ்டபட்டு வெல்லும். நன்றி வணக்கம்.   14:18:06 IST
Rate this:
3 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் கமல் கட்சி தேர்தலில் முடிவுரை?
1 ) தென்காசி தனி தொகுதி MNM வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்க்கே கடன் வாங்கியதாக செய்தி. 2 ) 40 தொகுதிக்கு சுமார் 1 லட்சம் வரை வாங்கினால் சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை பெறக்கூடும். (அவரது ரசிகர்கள், இளைய தலைமுறை வாக்காளர்கள் சுமார் 7 லட்சம்). திரு கமல் அவர்கள் அடுத்த முதல்வர் என்பதில் சந்தேகமில்லை. நன்றி வணக்கம்.   13:54:04 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் பக்கோடா விற்க சொன்ன பிரதமர்!
வாழ்த்துக்கும் அய்யா. மத்திய மாநில அரசுகள் மீது கோபமாக இருக்கும் மக்கள் உங்களுக்கு அமோகமாக வாக்களிப்பார்கள். மதவாத பிஜேபி தலை தூக்காமல் இருக்க, உங்களை கன்னியாகுமரி மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். உங்களின் தேவை இந்த நாட்டிற்கு தேவை. உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது, எவ்வளவு லட்சம் வித்தியாசத்தில் என்பது தான். நன்றி வணக்கம்.   14:29:09 IST
Rate this:
21 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
16
2019
அரசியல் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி
வாழ்த்துக்கள் திரு கணேசமூர்த்தி அவர்களே. காங்கிரஸ் + தி மு க கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க, உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. நன்றி வணக்கம்.   11:30:58 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
12
2019
சம்பவம் பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். CBCID விரைந்து இந்த பாலியல் புகாரை விசாரிக்க வேண்டும். நீதி துறை fasttrack வழக்காக இதை கருத்தில் கொண்டு விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும். அந்த தீர்ப்பானது இனி இது போல தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அரசியல் தலையீடு சிறிதும் இருக்க கூடாது. அரபு நாடுகளில் வழங்கும் தண்டனையை இந்த மனித மிருகங்களுக்கு வழங்க வேண்டும். நன்றி வணக்கம்.   14:56:47 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X