Swami Selvam : கருத்துக்கள் ( 14 )
Swami Selvam
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2021
பொது 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களில் திருப்பணி
என்ன என்ன கம்பி கற்ற வேலை எல்லாம் செய்றாங்க மக்களே. முடியலடா சாமி.   10:31:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2021
பொது மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல
நரேஷ் கிரிதர். பதில். தாங்கள் ஒரு விஷயத்தை தேட வேண்டும் அது பற்றிய அறிவு வேண்டும் எனில். அதனை அதற்குண்டான இடத்தில் சென்று பயிற்சி பெறவேண்டும். சென்னை சம்ஸ்க்ருத கல்லூரி சென்று பயிலவும். தமிழ் மொழி சம்ஸ்க்ருத மொழி எங்கு இருந்து வந்தது யாரிடமிருந்து வந்தது என்று ஆராய்வது சாத்தியம் இல்லை இரண்டும் இரு கண்களை போன்றது. எனவே தேவயற்ற பயனற்ற கேள்விகள் கேட்பதால் நேரம் வீண். இந்திய தண்டனை சட்டம் யார் எழுதியது அம்பேத்கார் ஆங்கில சட்டங்களை சிலவற்றை திருத்தி தொகுத்தார். எழுதியது யார் என்று தெரிந்தால்தான் பின்பற்றுவேன் என்று சொல்வீர்களா. சட்டம் மக்களை கட்டுப்படுத்தும் கட்டுப்படாவிட்டால் தண்டனை கொடுக்கும்.ஆகமத்தை பற்றி தெரிய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதை வரவேற்கிறேன். அதற்குண்டான இடத்தில் சென்று கற்று தெளியுங்கள்.   11:50:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2021
பொது மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல
ராஜசேகரன் சென்னை பதில். யாருக்கு பூரண கும்பம் கொடுக்க வேண்டும் என்பது பாட்டாச்சார்யார் அல்லது சிவாச்சார்யார் தீர்மானிக்க இயலாது. அது கோயில் நிர்வாக அறங்காவலர் சம்மந்தப்பட்ட விஷயம். மேலும் நாம் யாரையும் தேடி சென்று கொடுக்கவில்லை நம் இடத்திற்கு(திருக்கோயிலுக்கு வரும் முக்கியஸ்தர்களாக வருவோருக்கு பூரண கும்பம் மரியாதை செய்விக்க படுகிறது படும். மேலும் எதிரியாக இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு வந்தால் நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது நம் கலாச்சாரம். மரபுகளை மீறி தனிப்பட்ட முறையில் பொது வாழ்வில் உள்ளவர்கள் விருப்பு வெறுப்பு இன்றி செயல்படுவது பண்பாடு. தாங்கள் ஏதாவது ஹிந்து மதத்திற்கு செய்ய நினைத்தால் சட்ட ரீதியான முறையில் மேற்கண்ட விஷயத்தை கையாளவும்.   11:16:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2021
பொது மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல
பதில். திரு .மணி.புதுகை. மன்னர்கள் அனைவரும் அந்நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அதற்குடமைப்பட்டு ஆட்சி செய்தனர் எந்த சட்டங்களையும் மீறி செயல்படவில்லையே.ஆனால் இப்போது தேர்ந்தெடுக்க பட்டுள்ள ஆட்சியாளர்கள் ஆகம விதியையும் மதிப்பதில்லை இந்திய சட்டத்தையும் மதிக்காமல் தான் தோன்றி தனமாக செய்தால் அவர்கள் மக்கள் அனைவரும் எப்படி ஏற்று கொள்வார்கள். முதல்வராக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்திற்கு உட்பட்டவரே. அக்கால மன்னர்கள் முக்கியமாக சோழ மன்னர்கள் செய்த ஊழல் தற்பெருமை, தங்கள் குடும்பத்திற்கு என தனி சொத்து தனி கல்லறை தனி நினைவிடம் ஏதும் உண்டா. சும்மா கருத்து கூற வேண்டும் என்பதற்காக எதையும் எழுத வேண்டாம். மன்னர் கண்ணிற்கு இந்து மதத்தில் மட்டும் மூக்கை நுழைக்க ஏன் இவ்வளவு வேகம். மற்ற மதத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படி. தங்களை போன்ற ஹிந்துக்கள் திருந்தாமல் தமிழகம் திருந்துவது சற்று கிராமமே...   11:09:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
28
2021
பொது அனைத்து கோவில்களிலும் விரைவில் குடமுழுக்கு
சிலப்பதிகாரத்தில் சேரனுடைய அவைக்குப் பராசரன் என்ற அந்தணன் ஒருவன் வருகிறான். அவனைக் கூறுமிடத்து இளங்கோவடிகள் "நாவலம் கொண்டு நண்ணார் ஒட்டி பார்ப்பன வாகை சூடி" என்று கூறுகிறார். அதற்கு உரை எழுதிய அரும்பத உரையாசிரியர் "நா வலங் கொண்டு எனில் தருக்கம் சொல்லி நாவெற்றியை உடையோனாய்" என்று கூறுகிறார். "நா வலம் எனில் நா வெற்றி" என்கிறார். அவன் பெற்ற நா வெற்றியை "பார்ப்பன வாகை" என்றும் கூறுகிறார். புறநானூற்றில் விண்ணந் தாயனைக் குறிக்கும், முன்னர் கூறிய பாடல் "பார்ப்பன வாகை" என்னும் துறையைச் சாரும். புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பன வாகை என்பதை "கேள்வியால் சிறப்பு எய்தியானை, வேள்வியால் விறல் மிகுத்தன்று" என்று கூறுகிறது. அறிவினால் சிறந்த ஒருவனை அவனது வேள்வி வெற்றியால் பாடுவது "பார்ப்பன வாகை" என்பது பொருள் இதே நூலில் பார்ப்பன வாகைக்கு எடுத்துக்காட்டு கூறுமிடத்து, ஓதங் கரைதவழ் நீர் வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்-ஏதங் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து "வேதம் கரைகண்ட ஒருவர் குற்றமற்ற தர்க்கச் சொல்லால் வெற்றி பெறுதல்" என்று பொருள் படும். ஆதலின் அறிஞர் பெறும் வெற்றி, குற்றமறத் தாம் எடுத்துச் சொல்லும் தத்துவ விளக்கங்களாலே பெறும் வெற்றியையே வெள்வி குறிக்கும். ஆதலின் "வேள்வி எடுத்து" என்பது ஞான வேள்வி என்று பொருள்படும். "களவேள்வி" போல ஆதலின் "பார்ப்பன வாகை" என்னும் இலக்கிய மரபு தருக்கத்தில் பெறும் வெற்றியையே குறிக்கும். சிலப்பதிகார அரும்பத உரை ஆசிரியர் "பார்ப்பன வாகை" என்பதை தருக்கஞ் சொல்லி பெறும் நாவெற்றியையே "பார்ப்பன வாகை" என்று குறிப்பிடுவதும் இதையே வலியுறுத்தும். புறநானூற்றில் உள்ள மற்றொரு பாடலான 305-ம் பாடலும் "பார்ப்பன வாகை" என்னும் துறையைச் சார்ந்தது. அதுவும் அந்தணன் ஒருவன் தன் நாவன்மையால் வெற்றி கொண்டு பெற்ற பரிசைக் கூறுகிறது. "வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்த்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே ஏணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யாணையு மணிகளைத் தனவே" பாட்டின் அடிக் குறிப்பில் "திணை-வாகை" என்றும், "துறை-பார்ப்பன வாகை" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமேகலையில் சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை பல்வேறு தத்துவங்களை எடுத்துரைப்பதைக் குறிக்கிறது. இதில் வைதிக மார்க்கத்து அளவைவாதி, சைவவாதி, பிரும்மவாதி, வைணவ-வாதி, வேதவாதி, ஆஜீவகவாதி எனப் பல சமயவாதிகள் குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் தத்தம் சமயங்களைத் தர்க்கசாத்திரத்தின் அடிப்படையில் எடுத்துரைப்பர் வாதம் செய்வர். ஆதலின் வாதிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களைச் சமயக்கணக்கர் என்றும் கூறுவர் இதையே கம்பர் தம் இராமகாதையில் "திகழ் கணக்காயர் கம்பலை" என்று கூறுகிறார். இவற்றிலிருந்து சங்க காலத்திலிருந்தே சமயங்களை அறிந்து கொள்ளத் தருக்க சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தனர் என்பது தெளிவாகிறது. தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சமய விவாதங்களை எடுத்து அலசி ஆராயப்படுமேயாயின் அச்சமயக் கருத்துக்கள் எந்த அளவுக்குச் சிறப்பெய்தியிருக்க வேண்டுமென்பதையும், எவ்வளவு காலம் அக்கருத்துக்கள் அவ்வுன்னத நிலையை அடைய முடியும் என்பதையும் ஆய்ந்தோமானால் தமிழகத்தில் சைவசமயம், கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகளுக்கும் முன்னரே மிகச் சிறந்த சமயமாகத் திகழ்ந்திருக்கிறது என்பது புலப்படும். ஆதலின் புறப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள "ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்" என்பது "வேதங்களின் அடிப்படையில் அமைந்த சைவ ஆகமம்" என்பதே பொருந்தும். சைவ ஆகமங்களைச் சிவபெருமானே எடுத்துரைத்தார் என்று நமது ஆகமங்களும், தேவாரத் திருப்பதிகங்களும் எடுத்துரைக்கின்றன. நிமிர்சடை, முதுமுதல்வன் என்பது "சிவபெருமானே ஆகமங்களை எடுத்துரைத்தவர் என்னும் கருத்து சங்க காலத்திலேயே நிலைத்திருந்தது" என்பதைக் காட்டுகிறது. விண்ணந் தாயனின் முன்னோர்கள் சைவத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோ ராகிய புத்தர் முதலானவர்கள், மெய்போல் கூறிய பொய்யை எல்லாம் மாற்றிச் சைவம் தழைக்கச் செய்தவர்கள் என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் சைவ சமய வரலாற்றுக்கு இப்புறநானூற்றுப்பாடல் அரும் செய்தியை அளிக்கிறது.   18:53:36 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
28
2021
பொது அனைத்து கோவில்களிலும் விரைவில் குடமுழுக்கு
சங்க இலக்கியத்தில் சைவ ஆகமம் பல்வேறு சாத்திரங்களை அறிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமைவது தர்க்க சாஸ்திரம். இதை "அளவையியல்" என்றும் கொள்ளலாம். இது காண்டல், கருதல், கேள்வி என மூவகைப்படும். இதை வடநூலார் பிரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்று அழைப்பர். குறிப்பாகச் சமயத் தத்துவங்களை அறிந்துகொள்ள "அனுமானம்" என்னும் அளவையியல் மிக மிக இன்றியமையாதது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் "தருக்கம்" சங்க காலத்திலேயே மிக சிறப்பாக ஆராயப்பட்டிருந்தது என அறிகிறோம். சோணாட்டுப் பூஞ்சாற்றுப் பார்ப்பான் கௌளணியன் விண்ணந் தாயன் என்பவனைக் குறிக்கும் புறநானூற்றுப் பாடல் இதைக் கூறுகிறது. விண்ணந் தாயனின் முன்னோர்கள் பல்வேறு வேள்விகளைச் செய்தவர்கள் என்றும், சிறந்த அறிவாளிகள் என்றும் இப்பாடல் கூறுகிறது. "நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய் ஓராது மெய் கொளீஇ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரை சால் சிறப்பின் உரவோர் மருக" (உரை) "பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினை உடைய முதிய இறைவனது (சிவபெருமானது) வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையே மேவிய நான்கு கூற்றை யுடைத்தாய், ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட, ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோ ராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி அவரது மெய் போன்ற பொய்யை உளப்பட்டறிந்து அப்பொய்மையை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்ப சொல்லி, இருபத்தொரு வேள்வித் துறையையும், குறையின்றதாகச் செய்து முடிக்க புகழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளானே" இப்பழையவுரையில் 21 வேள்வித்துறைகளையும் குறையில்லாமல் செய்து முடித்தவர்கள் என்று விண்ணந் தாயனது முன்னோர்கள் கூறப்பட்டுள்ளனர். "மூவேழ்துறையும் முட்டின்று போகிய" என்பதற்கு மேற்கண்டவாறு ஆசிரியர் உரை கூறுகிறார். "வேள்விகளில் 21 துறைகளைக் குறை ஏதுமின்றி செய்து முடித்தனர்" என்பது இதன் பொருளாகக் கொள்கிறார். ஆயினும் இதையே "மூவேழ்துறையும் என்பதற்கு 21 கூறுபட்ட தருக்கநூல் என்றும் அமையும்" என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இவர் இரண்டாவதாகக் கூறிய தருக்கநூல் என்ற பொருளே சிறப்பக நமக்குத் தோன்றுகிறது. மேலும் உரையாசிரியர் "ஒரு முதுநூல்" என்பதற்கு அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றை உடைய ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய "நூலாகிய வேதம்" என்று பொருள் கூறுகிறார். பாடலில், "ஒன்று புரிந்த ஈர் இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்" என்று உள்ளது. இது நீண்ட சடையை உடைய சிவபெருமானால் கூறப்பட்டது என்பது பாடல். ஆதலின் நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும், அடிப்படையாகக்கொண்டு, சிவபெருமானால் கூறப்பட்ட நூலென்பது பொருள். இந்நூல் சைவ ஆகமமாகவே இருத்தல் வேண்டும். நான்கு வேதங்களிலிருந்தும், ஆறு அங்கங்களிலிருந்தும் பிறிதொன்று ஆன ஆகமம் என இதனால் அறியலாம். இப்பாடலுக்கு 200 ஆண்டுகளுக்குள் எழுந்த பெரும் காப்பியமான மணிமேகலையில் "சைவ வாதி" குறிக்கப்படுவதிலிருந்தும். இதை சிவபரமான நூல் என்று கொள்வதே பொருந்தும். ஆதலின் கிறித்துவாப்தத்தின் தொடக்கத்திலேயே சைவ சாஸ்திரங்களை அறிந்து கொள்ளத் தர்க்க சாஸ்திரத்தைப் பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம். இக்கருத்து வேறுபல சங்கப் பாடல்களிலிருந்தும் அறியப்படுகிறது. மலைபடுகடாத்தில் (அடி 112ல்) "வாதி கைஅன்ன சுவைக்கதிர் இறைஞ்சி" என்று குறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் இயற்றிய நச்சினார்கினியர் "பெரிய புனத்தில், எருமை கிடந்தாற் போன்ற கற்பெருத்த வழியிடத்திலே தருக்கம் கூறுகின்றவன் கையிடத்து இணைந்த விரல்களை ஒத்த, இரட்டித்த வரகுகள் கதிர்கள் முற்றி வளைந்து அரிவாளாலே அரிதல் உற்றன." என்று கூறுகிறார். ஆதலின் தருக்கம் கூறுகின்றவன் தனது கை விரல்களை அடிக்கடி பயன்படுத்திக் கணக்கிடுவான் என்பதை மலைபடுகடாம் "வாதி கையன்ன" என்ற தொடர் தெளிவாக உரைக்கின்றது. மதுரைக்காஞ்சியும் தருக்கம் அறிந்தோரைக் கூறுகிறது. அரசனுடைய நாளோலக்க இருக்கையில் எல்லாக் கலைகளையும் உணர்ந்தவர் குழுமியிருப்பர். அரசன் கேட்கத் தருக்கங்களைக் கூறி அளவளாவுவர். அது பெரும் ஆரவாரத்தைத் தோற்றுவிக்கும் என்பதை "விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப" என்று கூறுகிறது. (அடிகள் 525,526) இதற்கு உரை கூறுமிடத்தில் நச்சினார்க்கினியர் "எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்கத் தருக்கங்களைக் கூறி விரும்புதல் கொண்ட ஆரவாரம்" பல சமயத்தோரும் தம்மில் தாம் மாறுபட்டுக் கூறும் தருக்கத்தைச் சேரக் கூறக் கேட்டிருக்கும் கம்பலைப் போல" என்று கூறுகின்றார். ஆதலின் அரசன் அவையிலே தருக்க சாத்திரத்தை அறிந்த பல. பேர்கள் விவாதங்கள் புரிந்தனர் என்பது தெளிவு.   18:52:47 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
13
2021
பொது இது உங்கள் இடம் ஜாதி என்பது அடையாளம்!
ஆகா என்ன ஒரு அறிவாளி தனம் ஏன்பா உடன்பிறப்புகளா. முதலில் அரசு பாலகர் பள்ளி முதல் அரசு கல்லூரிகள் அரசின் வேலை வாய்ப்பு முதலியவற்றில் அரசு கேட்கும் ஜாதி சான்றிதழ் இல்லாமல் பணியமர்த்தவோ இடஒதுக்கீடு செய்யோவோ சொல்லி இருந்தால் அல்லது நிறைவேற்றி இருந்தால் திமுக சட்ட மன்ற உறிப்பினரில் ஒரே ஒரு ஆண்மகன் இருந்தால் இதனை சட்டமாக முன் மொழியுங்கள். தேவைப்படும் இடங்களில் ஜாதியை அரசு பயன்படுத்தி கொள்வதும் அரசுக்கு தேவை இல்லாதவர்களின் ஜாதியை எடுப்பதும் உத்தமமாக தெரியவில்லையே. அரசியல் தான் தெரிகிறது இடஒதுக்கீட்டை வருமானத்தால் பின் தங்கியவர்களுக்கு கொடுத்தாலே ஜாதி தானாக ஒழியும். ஜாதி சான்றிதழை கொடுக்காமல் இருந்தால் 3 4 தலைமுறைக்கு பின் அவர்களின் ஜாதி தெரியாதே இதை விட்டு விட்டு ஏதோ ஒரு தனிப்பட்ட மதத்தை மட்டும் அழிக்க அதிலும் குறிப்பாக இந்து மதத்தை திமுக குறி வைப்பது ஏன்????????   10:09:28 IST
Rate this:
4 members
0 members
12 members

ஆகஸ்ட்
11
2021
அரசியல் ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் அமைச்சர் சேகர்பாபு
சரி சேகர் பாபு அது என்ன கோயில்களில் மட்டும் ஜாதி இல்லை அனைவரும் சமம் ஆனால் உங்கள் ஆரம்ப பாலகர் பள்ளியில் சேர்க்கவே ஜாதி சான்று வேண்டுமே ஆரம்பமே ஜாதியுடன் உள்ளதே பள்ளிகளில் கல்லூரிகளில் அரசு அலுவலகங்களில் திறமை உள்ளவர்களுக்கு இடம் இல்லையே ஜாதி அடிப்படையில் இடம் கொடுக்குறீர்ககள் அங்கு ஜாதிகளால் மக்கள் குழந்தைகள் பாதிக்க படுகிறதே. ஒரு சமூகத்தை அழிக்க நினைக்கும் தங்கள் அரசு மற்ற சமூகங்களை இட ஒதுக்கீட்டால் அழித்து கொண்டு இருக்கும் திராவிஷ அரசு என்ன செய்ய. உங்கள் அரசுக்கு திராணி இருந்தால் அரசு சார்ந்த எந்த துறையிலும் ஜாதி சான்று கேட்கமாட்டோம் திறமைக்கு மட்டுமே முதலிடம் என்று ஒரு சட்டமன்ற ஆண் மகன் இருக்கார்களா   12:44:40 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
20
2020
பொது இது உங்கள் இடம் நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது சரி என்று வைத்து கொள்வோம். அப்படி எனில் அரசு பள்ளிகளில் கல்லூரிகளில் அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை ஒழித்து விட்டு திறமைக்கு மட்டும் வேலை கொடுக்கலாமே. மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு முறையை ஒழித்து அதிலும் அனைத்து ஜாதியினரும் ஒன்று என்று சொன்னால் உங்கள் வாதம் சரி உண்டா????   11:49:53 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
5
2020
எக்ஸ்குளுசிவ் ராகு காலத்தில் பிரச்னை இல்லை
அபிஜித் முஹூர்த்ததில் இராகு காலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.   14:56:48 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X