பிபிசி. BBC. சில புரிதல்கள். ஏன் இந்தியாவை தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது பிபிசி என்பதற்கான காரணங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டுத் தான் ஆக வேண்டும்.
முதலில் பிபிசி நிறுவனம் செயல்படுவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்தாலே பலதும் புரிந்து விடும். இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை உரிமத் தொகையாக (லைசென்ஸ் ஃபீஸ் என்பது எளிய தமிழ்) செலுத்துகிறது. சென்ற வருடம் இந்த வகை வருமானம் மட்டுமே 3.2 பில்லியன் பவுண்டுகள். அதாவது சற்றேறக்குறைய 30000 கோடிகளுக்கும் மேலாக. இது போக பிரிட்டிஷ் அரசு பணம் தருகிறது. ராக்பெல்லர் ஃபவுண்டேஷன் உட்பட பல அமைப்புகள் பணம் தருகின்றன. ஒட்டுமொத்தமாக அது பிரித்தானிய நாட்டின் ஊடகம். அவர்களுக்கு சாதகமான விஷயங்களை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு பாதகமான விஷயங்களை அடித்து நொறுக்கியும் செயல்படும் "நடுநிலை ஊடகம்".
இப்போது "தொடர்பற்ற" இரு தகவல்களை பார்க்கலாம். சில வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தேசம் முதன்முறையாக விண்ணில் செலுத்திய ராக்கெட் தோல்வி அடைந்தது. இங்கே மற்றொரு விஷயத்தை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். சர்வசாதாரணமாக (அசால்ட்டாக என்பது எளிய வார்த்தை) 104 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தி உலக சாதனை படைத்தது இந்தியாவின் பெருமைமிகு அடையாளமான இஸ்ரோ.
அதேபோல் ஒட்டுமொத்த பொருளாதார அளவில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது இந்தியா. பொருளாதார வளர்ச்சியிலும் இங்கிலாந்தை சாதாரணமாக முந்தியது இந்தியா, சைக்கிளை இரட்டை இன்ஜின் பஸ் முந்துவது போல.
இப்போது பிபிசி ஏன் இந்தியா மீது, குறிப்பாக நரேந்திர மோதி மீது, மத்திய பாஜக அரசு மீது ஏன் தொடர்ந்து விஷத்தை கக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். வெறி. கண்ணை மறைக்கும் ஆத்திரம். வன்மம். நம்மால் ஆளப்பட்ட ஒரு அடிமை தேசம், நாம் சுரண்டி சுரண்டி சுரண்டி உருக்குலைத்து அழித்து ஒழித்த ஒரு தேசம், அவர்களது விளைச்சலையே அவர்களை சாப்பிட விடாமல் பட்டினி போட்டு லட்சக்கணக்கான மக்கள் இறந்து போன ஒரு பஞ்சப் பராரி தேசம், நம்மை மிஞ்சுவதா என்ற கொப்பளிக்கும் ஆத்திரம்.
நன்றி பிபிசி. உங்களது இந்த வன்மங்கள் எங்களை மேலும் வலுவாக்கும், உறுதியாக்கும், முனைப்புடன் செயல்பட வைக்கும், ஒவ்வொரு துறையிலும் உங்களை தோற்கடித்து மண்ணைக் கவ்வ வைக்கும். காத்திருங்கள்.
24-ஜன-2023 20:03:39 IST
அதான் ஒரு வருடமா சொல்லிட்டு தானே இருந்தாங்க நீ என்ன paper படிச்ச ??
கடந்த இரண்டு வருடமாவே 5G phone market கிடைக்குதுல வாங்க வேண்டியது தானே
03-ஆக-2022 15:59:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.