Thirumurugan : கருத்துக்கள் ( 214 )
Thirumurugan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
எக்ஸ்குளுசிவ் ஏன் ஓட்டு போடவில்லை? பொங்கி எழுந்த வாக்காளர்கள்!
ஒரு காரணமும் உருப்படியானது இல்லை. குப்பையான சாக்குபோக்கு.   06:01:20 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
11
2021
அரசியல் மே.வங்கத்தில் இனப்படுகொலை மம்தா கோபம்
இதுமாதிரி அரசாங்க கைப்பாவையான தேர்தல் கமிஷனை எப்பொழுதும் பார்த்ததில்லை. நடுவண் அரசின் அராஜக ஆட்சிக்கு எப்பொழுது முடிவு வருமோ? மதச்சார்பற்ற ஆட்சிக்கு இந்த நடுவண் அரசு கல்லறை கட்டிவிட்டது.   05:55:36 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
8
2021
அரசியல் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றி மாநில தலைவர் முருகன் உறுதி
கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது. ஜெய் ஸ்ரீராம் கோஷம் தமிழ் நாட்டில் எடுபடாது என்றவுடன் முருகனுக்கு அரோகரா கோஷத்தை கையில் எடுத்துள்ளீர்கள். பார்க்கலாம் ...மே 2 ஆம் தேதி. கோவை தெற்கில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று நினைத்த மாத்திரத்தில் திரு ஆதித்தியநாத் அவர்களை பிரசாரத்திற்கு கூட்டி வந்து வெற்றிக்கு சமாதி கட்டி விட்டீர்களே அப்புறம் எப்படி 20 இடங்களிலும் வெற்றி உறுதி என்று சொல்கிறீர்கள்?   23:40:04 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
6
2021
அரசியல் வாக்கு இயந்திரங்கள் பற்றிய விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி
நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எங்கு மக்களாட்சி நடைபெறுகிறது? மத ஆட்சிதான் நடைபெறுகிறது. மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரே ஜனநாயக உரிமை ஓட்டு உரிமை மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியவில்லை உங்களால ..என்ன செய்வது? நான் போடும் ஓட்டு எனக்கு பிடித்த வாக்காளருக்கு தான் போய் சேர்ந்துச்சான்னு தெரிஞ்சிக்க முடியவில்லை. தற்சமயம் விருதுநகரில் உள்ள ஒரு சாவடியில் ஓட்டு பெட்டியில் எந்த பொத்தானை அழுத்தத்தினாலும் பிஜேபி சின்னத்தில் லைட் எரிகிறது. அதுமாதிரி தவறு நடந்த பிறகு ஓட்டு போட்ட அவருக்கு திரும்ப ஓட்டு போட அனுமதி உண்டா? உலகில் அனைத்து துறையிலும் முன்னேறிய அமெரிக்காவே ஓட்டு சீட்டு முறையில் இருக்கும்போது இந்தியாவில் கடைபிடிக்க என்ன கஷ்டம்? ஏப்ரல் 6 ல் வாக்குப்பதிவு, முடிவுகள் மே 2 ஆம் தேதி தான் தெரிய போகிறது? இதற்கு எதற்கு ஓட்டு மெஷின்? பேப்பரில் வாக்கை செலுத்தி 2-3 நாளில் எண்ணி முடிவை அறிவிக்கலாமே மக்களுக்கு சந்தேகம் இல்லாத வகையில் தேர்தலை நடத்த வேண்டும்.   21:05:52 IST
Rate this:
11 members
1 members
6 members

ஏப்ரல்
4
2021
அரசியல் பெண்களை இழிவுபடுத்திய தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் பழனிசாமி.,
பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காதாம். ....ஆமாம் உங்கள் ஆட்சி யில் எப்படி இருந்தது? பொள்ளாச்சி கேஸே அதற்கு உதாரணம். தற்சமயம் போலீஸ் உயர்பதவியில் இருந்தவரே IPS அதிகாரிக்கு கொடுத்த டார்ச்சர் தெரியாதா? தமிழ்நாட்டிற்கு என்று டிஜிபி இருக்கும்போது அவருக்கு இணையான இன்னொரு டிஜிபி பதவியை உருவாக்கி அதில் பொறுக்கியை போட்டு தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடாவை சுலபமாக முடிக்கலாம் என்று கணக்கு போட்டது யார்? உங்களுக்கு ஓட்டு போட்டு இன்னொரு அடிமை ஆட்சி கொண்டு வர தமிழக மக்கள் தயாராக இல்லை.   21:16:50 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது!
பாரதி, ஆஸ்திரேலியா அவர்களுக்கு பதில்: 17 வயது மாணவியின் வாயில் சுட்டு கொன்றிருக்கிறீர்கள், அந்த பொண்ணு செய்த தப்பு என்ன? எங்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று சொல்வதற்கு அந்த மாவட்டத்தின் மக்களுக்கு உரிமை உள்ளது. அதற்காக போராடவும் உரிமை உள்ளது. போராட்டத்தை அடக்க வேண்டும் என்றால் கண்ணீர் புகை போட்டிருக்கலாம், இல்லை தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்திருக்கலாம். அதை விடுத்து அந்த மக்கள் மீது துப்பாக்கி குண்டை உபயோகித்தது எத்தனை கொடூரம்? இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. தங்களுடைய குடும்பத்தில் இது மாதிரி இழப்பு ஏற்பட்டு இருந்தால் அதன் வலி தெரியும். அனைவரையும் தமிழர்களாக பார்க்காமல் அங்கு கிறித்துவ மதத்தினர் அதிகம் இருப்பதால் மத துவேசம் செய்து அந்த மக்களை சுட்டு கொன்றிருக்கிறார்கள்.   21:49:42 IST
Rate this:
3 members
0 members
3 members

ஏப்ரல்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது!
தங்களுக்கு அரசமைப்பு பற்றி தெரியவில்லை என்றால் நன்றாக படித்துக்கொள்ளுங்கள். இந்திய என்பது மாநிலங்களின் கூட்டாட்சி. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான மொழி, கலாசாரம், பண்பாடு உள்ளது. அதை மதிக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தவரும் தனித்தனியான இனத்தவர் (தமிழர், கன்னடர், மலையாளி, தெலுங்கர், மராட்டி என்று). ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் வேண்டும். எப்ப பார்த்தாலும் ஹிந்தி, சமஷ்கிருதம் என்று தூக்கிட்டு திரியக்கூடாது. GST, புதிய கல்விக்கொள்கை என்பது மாநில உரிமைகளை பறிப்பதாகும். இதற்கு ஒவ்வொரு மாநிலமும் போராடி தங்களுக்கென்ற தனித்தன்மையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.   21:39:45 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது!
பொள்ளாச்சி சம்பவத்திற்கு அரசாங்கம் என்ன செய்தது? உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யாரு பொறுப்பேற்றார்கள்? அதற்கு என்ன பதில்? மத்திய அரசு அப்படி என்ன நல்ல திட்டங்களை கொண்டு வந்தது? அது செய்த ஒரே காரியம் GST என்ற பெயரில் மாநில வருமானத்தை கொள்ளை அடித்ததுதான். இப்போது அதிமுக அடிமை அரசு ஒவ்வொரு நலத்திட்டங்களுக்கும் மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. மாநில வரிப்பணத்தையெல்லாம் சுருட்டிட்டு மத்தியில் இருந்து செய்வது போல் காட்டுகிறீர்கள்? மாநில வரியில் 75% மாநிலத்திற்கே செலவு செய்தால் உங்களிடம் ஒன்றும் கை ஏந்த மாட்டோம். நீங்கள் தான் எங்களது வரிப்பணத்தை கொள்ளை அடித்து வடமாநிலங்களுக்கு தாரை வார்க்கிறீர்கள். ஒக்கி புயல் வந்தபொழுது நல்லா உதவினீங்க ..அதைத்தான் பார்த்தோமே... உங்களை மாதிரி வாயிலே வடை சுடமுடியாது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி..உங்களை மாதிரி ஒரே கட்சி இந்தியா முழுவதும் ஆளுவது என்பது ஆபத்தானது.   00:13:41 IST
Rate this:
9 members
0 members
6 members

ஏப்ரல்
1
2021
அரசியல் தாய்மையை மதிக்கத் தெரியாத தி.மு.க., அன்புமணி காட்டம்
பொள்ளாச்சி சம்பவத்திற்கு அரசாங்கம் என்ன செய்தது? உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யாரு பொறுப்பேற்றார்கள்? அதற்கு என்ன பதில்? உங்களது கூற்றுப்படி டயர் நக்கிகள் எப்பொழுது புனிதர்கள் ஆனார்கள்? அதையும் சொல்லிடுங்களேன் .ஓ ..இனிப்பு டப்பா கைக்கு வந்திருச்சா?   00:02:38 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
28
2021
அரசியல் ராசா மீதும் அம்மாயிக்கு கோபம் வராதுங்க...! இ.பி.எஸ்., தாய் பற்றி ஊர் மக்கள் உருக்கம்
திரு ராசா வின் முழு காணொளியை பார்க்கும்பொழுது அவர் எந்த இடத்திலும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயை பற்றி தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லையே அவர் முதல்வர் பதவி பற்றி தானே கூறியிருக்கிறார். திரு பழனிச்சாமி அவர்களை முதல்வராக மக்கள் தேர்தெடுக்கவில்லையே அதைத்தான் சொல்லக்கூடாத உவமைகளின் வாயிலாக கூறினார். அதை திரு பழனிச்சாமி இப்படி தன்னுடைய தேர்தல் உத்திக்காக பயன்படுத்தியது தான் மிகக்கேவலம்.   03:37:41 IST
Rate this:
8 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X